Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரூ 1200 கோடி செலவில் புது நாடாளுமன்றம் ; மோடி திறந்து செங்கோல் நிறுவினார்

சுமார் 100 ஆண்டு பழம் பெருமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டிடத்துக்கு   பதிலாக டெல்லியில்  அந்த கட்டிடத்திற்கு அருகிலேயே 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் 1200 கோடி செலவில்  பிரமாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடம் நவீன வசதிகளுடன்  கட்டப்பட்டுள்ளது.

நான்கு அடுக்கு மாடிகளை கொண்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை (லோக்சபா),  மாநிலங்களவை ( ராஜ்யசபா)  கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக் கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப் பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்கள வையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட் டுள்ளன. உலகின் மிகப்பெரிய நாடாளு மன்றங்களில் ஒன்றாக இந்த நாடாளுமன்றம் முக்கோண வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இந்திய கட்டிட கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெரத்து. .

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே, இன்று காலையில் சிறப்பு யாகசாலை பூஜையுடன் திறப்பு விழா தொடங்கியது.

மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே வைக்கப்படும் சோழர் செங்கோல் யாக சாலை பூஜையில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.  செங்கோல் முன்பாக பிரதமர் மோடி விழுந்து வணங்கினார். இதையடுத்து, அவரிடம் தமிழ்நாட்டில் தயாரிக் கப்பட்ட  இந்த செங்கோலை ஆதினங்கள் வழங்கினர். செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஒவ்வொரு ஆதீனத்திடமும் ஆசி பெற்றார்.

பின்னர் ஓதுவார்கள்  தேவார மறைகள் ஓத.. இசை வாத்தியங்கள் முழங்க.. பிரதமர் மோடி செங்கோலை ஏந்தியபடி புதிய பாராளுமன்றத்திற்குள் சென்றார். அங்கு மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலை நிறுவினார். பிறகு குத்துவிளக்கேற்றினார். பிரதமருடன்  சபாநாயகர் ஓம் பிர்லா உடனிருந்தார். 

பிறகு புதிய நாடாளுமன்றத் திற்கான கல்வெட்டை பிரதமர் திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டுமானப் பணியில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களையும் பிரதமர் மோடி சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி திரவுபதி மூர்மு அழைக்கப்படவில்லை  இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த துடன் நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணித்தன.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு  சரித்திரத்தில்  இடம்பிடிக்கும் அதே சமயம் எதிர்கட்சிகளின் புறக்கணிப்பும் சரிததிரத்தில் இடம் பிடிக்கிறது.

 

 

 

 

 

 

Related posts

சரிகமா ‘ச்சீ ப்பா தூ…’ வீடியோ ஆல்பம் வெளியீடு

Jai Chandran

Entire Village Unveil Its First Look of EnnaVilai..

Jai Chandran

வேதிகாவை மேக்கப்போடு பார்த்தபோது அடையாளம் தெரியவில்லை: பாபி சிம்ஹா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend