Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

1982 அன்பரசின் காதல் (பட விமர்சனம்)

படம் :1982 அன்பரசின் காதல்”

நடிப்பு: ஆஷிக்மெர்லின்,, சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ், சிவப்பிரகாசம், செல்வா இவர்களுடன்
உல்லாஷ் சங்கர்

தயாரிப்பு:
பிஜு கரிம்பின் கலையில்
& ஷைனி அலியாஸ்

இசை: எஸ்.சிந்தாமணி

ஒளிப்பதிவு:செபாஸ்டியன்

இயக்கம்: உல்லாஷ் சங்கர்

பி  ஆர் ஒ: விஜயமுரளி

கேரள, தமிழ்நாடு பார்டரில் உள்ள இயற்கை எழில் மிகுந்த பகுதியில் வசிக்கும் ஆஷிக் மெர்லின் தனது கல்லூரி தோழி மீது காதல் கொள்கிறான். 3 வருடமாக தனது காதலை அவளிடம் சொல்லாமல் எய்ட்டிஸ்  இளைஞனாக தோழி போல் எண்ணி பழகுகிறான். அவளும் நட்புடன் பழகுவதுபோல் காட்டிக் கொண்டு தன் ஊருக்கு செல்கிறாள். நண்பர்கள் ஆஷிக்கிடம்,  உன் காதலை எப்படியாவது அவளிடம் சொல்லிவிடு என்று வற்புறுத்து கின்றனர். இந்நிலையில்  தோழியிடமிருந்து தன் ஊருக்கு யாரிடமும் சொல்லாமல் வரும்படி அழைப்பு வருகிறது. ஆஷிக் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு செல்கிறான். அங்கு தோழியை சந்திக்க இருவரும். ஒன்றாக ஒருவரை சந்திக்க.புறப்படுகி றார்கள். யாருமில்லாத இடத்தில் சில ரவுடி களிடம்  இருவரும் சிக்கிக் கொள்ள அவர்களிடமி ருந்து தப்பிக்க  ஓடுகின்றனர். அப்போது அங்கு வரும் துப்பாக்கி செய்யும் ஆசாமி அவர்களை காப்பாற்றி தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார். அவரது பார்வையும், நடத்தையும் இருவரையும் அச்சப்பட வைக் கிறது. அவரிடமிருந்து தப்பிக்க முயலும்போது அவர்களை  துப்பாக்கி ஆசாமி துரத்துகிறான்   இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

எய்ட்டீஸ் காதல் என்று தொடங்கும் கதை கலகலப்புடன் நண்பர்கள் அரட்டையுடன் நகர்கிறது.கேரள குட்டிகள் என்றாலே நம்ம பசங்களுக்கு ஒரு இதுதான்  என்ற டயலாக்கில் ஒரு உண்மை இழையோடுகிறது. அதற்கேற்றாற் போல் ஹீரோயின்கள்

சந்தனா, அருணிமா இருவருமே கும்முன்னு இருக்காங்க.. ஹீரோ ஆஷிஷுக்கு  கிடைத்த சான்சைவிட 2வது ஹீரோ அமலுக்கு  நெருக்கமான காட்சியில் . நல்ல சான்ஸ் கட்டிப்பிடித்துக் கொண்டு விலக மறுக்கிறார்.

ஆஷிஷ்  பாடல் காட்சியில் ஸ்டைலான நடனமாடி கவர்கிறார்.  கதைக்களம் காதல்தான் ஆனால் இது மலையாள காதலாக  மாறியிருக்கிறது.

வில்லன் போல் துப்பாக்கி செய்பவராக வந்து மிரட்டுகிறார் இயக்குனர் உல்லாஸ் சங்கர். இவரது உதவியாளராக வரும் தமிழன் முறைப்பு காட்டுகிறார். முதலாளி மகளை காதலிப்பது யார் என்று தெரிந்தும் அதை கடைசி வரை அவரிடம்  ஏன் சொல்லவில்லை என்பதற்கு விளக்கம் இல்லை.

பிஜு கரிம்பின் கலையில் ,  ஷைனி அலியாஸ் தயாரித்தி ருக்கிறார்கள்

எஸ்.சிந்தாமணி இசை ஓ கே ரகம்.

செபாஸ்டியன் கேமிரா கேரளா உட்புற சாலைகளில் ரசிகர்களை  கூட்டிச் செல்கிறது.

உல்லாஷ் சங்கர் காதலின் எதார்த்தம் சொல்ல முயன்றிருக் கிறார்.

1982 அன்பரசின் காதல் – காதல் ரேஸ்.

 

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Related posts

  9 படங்கள் 9 உணர்வுகள் ஒரு பெருங்கொண்டாட்டம் !

Jai Chandran

“ரஜினி தான் இன்ஸ்பிரேசன்”- ‘விரூபாக்‌ஷா’ சாய் தரம் தேஜ்.

Jai Chandran

Kaalangalil Aval Vasantham Shoot started with Pooja

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend