Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தீர்க்கதரிசி ( பட விமர்சனம்)

படம்: தீர்க்கதரிசி

நடிப்பு: சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், ஜெயதுஷயந்த், ஶ்ரீமன்

தயாரிப்பு: பிi.சதீஷ்குமார்

இசை: பாலசுப்ரமணியன் ஜி.

ஒளிப்பதிவு:ஜே.லட்சுமணகுமார்

இயக்கம்:பி. ஜி.மோகன், எல்.ஆர.சுந்தரபாண்டி

பி ஆர் ஓ: சதீஷ் (AIM)

நகரில்  ஆங்காங்கே நடக்கவிருக்கும், கொலை, கொள்ளை விபத்து பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு நபர் போனில் சொல்லி எச்சரிக்கிறார். முதலில் அதைவெறும்  புரளி என்று என்னும் போலீசார்  மர்ம நபர் சொல்வதுபோலவே சம்பவங்கள் நடப்பதால் அதிர்ச்சி அடைந்து அடுத்தடுத்து எச்சரிக்கை போன் வரும்போது உஷாராகி தடுக்க முயல்கின்றனர்
ஒரு விஷயத்தில் மட்டுமே போலீசார் முயற்சி  எடுபடுகிறது. மர்ம நபருக்கு தீர்க்கதரிசி என பெயர் வைக்கின்றனர். பல விஷயங்களில் போலீசார் தோல்வி அடையும் நிலையில் அடுத்தடுத்து நடப்பது என்ன? மர்ம நபர் யார்? உண்மையிலேயே அவர் தீக்கதரிசியா என்ற பல கேள்வி களுக்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

ஒரு சில கதைகளுக்கு சஸ்பென்ஸ் தான் உயிர். அப்படித்தான். தீர்க்க தரிசி படமும். சஸ்பென்ஸ் தான் உயிர். அதை தெரிந்து கொள்ளாத வரையில் படத்தின் விறுவிறுப்பு குறையாமலிருக்கும்.

கோ, அஞ்சாதே படங்களுக்கு பிறகு அஜ்மலுக்கு ஒரு நல்ல பாத்திரம். நகரில் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்க துடிக்கும் போலீஸ் அதிகாரியாக தோரணையுடன் அறிமுகமாகிறார். நிஜ போலீஸ் அதிகாரி விஜய குமாருக்கு தரும் பில்டப்பும் தரப்படுகிறது. ஆனால் அவர் ஒவ்வொரு சம்பவங்களையும் ததடுக்கக முடியாமல் திணறும் போது அவரது கேரக்டர் பல்ப் வாங்குகிறது.
அஜ்மல் டீமில் இணைந்து வேலை பார்க்கும் ஜெய்வந்த், ஜெய துஷ்யந்த் விறுவிறுப்பை கூட்டுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பெயர் மாற்றத்துடன் ரீ என்ட்ரீ கொடுத்திருக்கிறார் சிவாஜி பேரன் துஷ்யந்த். இப்படத்தில் தனது பெயரை ஜெய துஷ்யந்த் என மாற்றிக் கொண்டிருக்கிறார். போலீஸ் வேடத்தை மிகைப் படாமல் செய்து ஸ்கோர் செய்கி றார். கோபக்கார ஜெய்வந்த் எதற்கெடுத்தாலும் கைநீட்டுகிறார்.

ஶ்ரீமன் டம்மி ஆகிவிடாமல் தீர்க்கதரிசி யார் என்பதை கண்டுபிடித்து சஸ்பென்ஸ் முடிச்சை அவிழக்கிறார்.

கதையின் சூத்திரதாரி சத்யராஜ் கிளைமாக்ஸ் நெருக்கத்தில்  என்ட்ரீ கொடுத்து கேள்விகளுக்கு விடை தருகிறார். கொஞ்ச நேரமே வந்தாலும் நெத்தியடி கதாபாத் திரத்தில் கலக்கி விடுகிறார்.

பிi.சதீஷ்குமார் தயாரித்துள்ளார்.
பாலசுப்ரமணியன் ஜி. இசை ஓகே. ஜே.லட்சுமணகுமார் ஒளிப்பதிவு கிளியர்

பி. ஜி.மோகன், எல்.ஆர். சுந்தரபாண்டி சஸ்பென்ஸ் கதையை குழப்பாமல் இயக்கி யிருப்பது சபாஷ்போட வைக்  கிறது. ஆனால் இல்லாத ஒரு தீர்க்க தரிசன விஷயத்தை தொடத்திலிருந்து சொல்லி திசை திருப்புவது ஏமாற்றுவேலை.

தீர்க்கதரிசி – ஒருமுறை தரிசிக்கலாம்.

Related posts

Arasiyal Kedi Lyric Video From TughlaqDurbar

Jai Chandran

ஆர். முத்துக்குமாரின் திகில் திரைப்படம் “நோக்க நோக்க.” அடுத்த மாதம் ரிலீஸ்

Jai Chandran

ஆர்யா நடிக்கும் கேப்டன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend