Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

செங்களம் (வெப் சீரிஸ்) பட விமர்சனம்

படம்: செங்களம் (வெப் சீரிஸ்)

நடிப்பு: கலையரசன், வாணி போஜன், ஷாலி, சரத் லோஹிஸ்தவா, விஜி சந்திரசேகர், மானசா, வேல ராமூர்த்தி, பக்ஸ், டேனியல், அஞ்சலி, பவன், பிரேம், கஜராஜ், பூஜா

தயாரிப்பு: அபினேஷ் இளங்கோவன்

இசை: தரன்

ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்

இயக்கம்: எஸ்.ஆர்.பிரபாகரன்

ரிலீஸ்: ஜீ5 ஒ டி டி

பி ஆர் ஓ: சதீஷ், சிவா (AIM)

நிகழ்கால அரசியலை புனைப் பெயர்கள் வைத்து சொல்லப்பட்டிருக்கும் அரசியல் சதுரங்க கதை.

விருதுநகர் சேர்மன் பதவியை பரம்ப ரையாக சிவஞானம் (சரத் லோஹிஸ்தவா)
குடும்பம் அனுபவித்து வருகிறது. தற்போது அவரது மகன் ராஜ மாணிக்கம் ( பவன்) சேர்மனாக உள்ளார். இவரது மனைவி சூரிய கலா (வாணி போஜன்). இந்த குடும்பத்துக்கு நேர் எதிர் அரசியல் செய்கிறார் கணேச மூர்த்தி எம் எல் ஏ ( வேல ராமமூர்த்தி. இந்நிலையில்  விபத்தில் சாகிறார் சேர்மன்ராஜ மாணிக்கம் (பவன்) அவருக்கு அடுத்து யார் சேர்மன் ஆவது என்ற ஆலோசனையில் அரசியல் சதுரங்கம் ஆடுகிறார் சிவ ஞானம். இந்நிலையில் தனது தோழியின் யோசனைப்படி காய் நகர்த்தி சூர்யகலா சேர்மன் ஆகிறார். ஒரு கட்டத்தில் அவரும் கொல்லப்படுகிறார்அவரை கொன்றவர்களை வாணியின் முன்னாள் காதலன் ராயர் ( கலை யரசன்) தேடிப் பிடித்து சுட்டுக் கொல்கிறார். ஆனாலும் அந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பதை ராயர் கண்டறிய முயல்கிறார். அதில் அவரால் வெற்றி பெற முடிந்ததா என்பதற்கு ஷாக் கான பதில் தருகிறது கிளைமாக்ஸ்.

செங்களம் என்பது இரத்தம் கொட்டும் அரசி யல் களமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறது. துரோகம், ரவுடியிசம், ஊழல், அரசியல்வாதி பிடியில் சட்டம் என எதிர்பாராத திருப்பங்களுடன் இதன் திரைக்கதை அமைக்கப்  பட்டிருக்கிறது.

வாணிபோஜன், கலை யரசன், ஷாலி மூவரும் கதையின் அச்சாணி கதாபாத்திரங்கள். மாவட்ட அளவிலான அரசியலாக பேசினாலும் முழுக்க மாநில அரசியலை மையப்படுத்தியே கதை அமைக்கப் பட்டிருந்தது.

வாணிபோஜன், ஷாலி கதாபாத்திரம் ஜெ- சசி போன்ற உடன் பிறவா சகோதரிகளை உருவகப் படுத்துவதுபோல் உள்ளது.
வாணி போஜனை சேர்மன் ஆக்குவதற்கு குறுக்கு வழிகளை சொல்லித்தரும் ஷாலி புதுமுகம் போல் தெரியவில்லை, ஏற்ற பாத்திரத்தை வெளுத்துக் கட்டியருக்கிறார்.

பால்கனியில் நின்று தொண்டர்களை பார்த்து கை அசைக்கும் வாணி போஜன் தலையில் முந்தானையை மூடிக்  கொண்டு கும்பிடுபோடு  வதும் ஜெவின் மேனரி சத்தை நினைவுபடுத்து கிறது.

அரசியல்ல விசுவாசியே இல்லை. விசுவாசியாக இருப்பான் என்று தேடுனா நாம்தான் ஏமாந்து போகணும் என்று வாணி பேசும் வசனம் எடப்பாடி யை தாக்குவதுபோல் உள்ளது. தலைமை என்ன செய்தாலும் கண்டுகொள்  ளாமல் விஸ்வாசம் காட்டுவதில் நடிக்கும் சரத் லோஹிஸ்தவா பாத்திரம் ஒ பி
எஸ் உருவத்தை கண் முன் நிறுத்து கிறது .

ராயர் பாத்திரத்தில் கலை யரசன் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் குற்ற வாளியாக வாழ்ந்தாலும் திட்டமிட்டபடி கொலை செய்வது பரபரப்பு.

வெப் சீரியலை கவனமாக பார்க்காவிட்டால் கதை புரியாமல் போய்விடும். ஃபிளாஷ் பேக், நிகழ்கால சம்பவங்கள் மாறி மாறி வருவதால் குழப்பம் தீர்ந்த பாடில்லை.

இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரனுக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல் அரசியல் சொல்லிவிட வேண்டும் என்ற ஆசை அவர் மனதில் இருக்கிறது ஆனால் நேரடியாக சொன்னால் வம்பு வந்து சேர்ந்து விடக்கூடாது என்ற பயமும் திரைக்கதையின் ஓட்டத் தில் புரிகிறது. கதை விவாதத்தில் இவர்வர இந்த அரசியல்வாதி என்று பேசித்தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் என்பது எளிதாக புரிகிறது.
தரன் இசை காட்சிகளை உயர்த்தி பிடிக்கிறது. ஒளிப் பதிவாளர் வெற்றி வேல் மகேந்திரன்.

அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில் உருவாகி யிருக்கும் செங்களம் ஜீ5 வெப் தளத்தில் ரிலீஸ் ஆகிறது.

செங்களம் ,- ரத்தக் களத்தில் அரசியல் சூத்திரம்.

Related posts

First look and Motion Poster of Action flick ‘RDX’

Jai Chandran

இந்தியாவின் 2 உயர்ந்த வசூல் சாதனைகள் ஷாருக் வசம்

Jai Chandran

கொரோனா தடுப்பு: முதல்வருடன்  பிரதமர் ஆலோசனை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend