Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கோஸ்டி (பட விமர்சனம்)

படம்: கோஸ்டி
நடிப்பு: காஜல் அகர்வால், ஊர்வசி, கே.எஸ்.ரவி குமார்,சுப்புபஞ்சு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, மயில் சாமி கெஸ்ட் ரோலில் ராதிகா, ஜெய்

தயாரிப்பு: பேஷன் பிலிம் பேக்டரி

இசை: சாம் சி. எஸ்.

ஒளிப்பதிவு: ஜேக்கப் ரத்தினராஜ்

இயக்கம்: கல்யாண்

பி ஆர் ஓ:  சுரேஷ் சந்திரா, ரேகா (D’ One)

 

 

இருபது வருடத்துக்கு முன் தன் தந்தையிடமிருந்து தப்பி சென்ற ரவுடியை கைது செய்ய துடிக்கிறார் இன்ஸ்பெக்டர் காஜல் அகர்வால். கையில் பிடிபட்டும் அவன் தப்பிச் செல்கிறான். அவனை துரத்திச் செல்லும்போது மர்மநபர் ஒருவனை சுட்டு விடுகிறார் காஜல். அதன் பிறகு நடப்பது என்ன என்பதை காமெடி, பேய் கலாட்டவுடன் படம் சொல் கிறது.

எப்படியாவது சிரிக்க வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தை இயக்கியிருக் கிறார் கல்யாண். அது சில இடங்களில் ஒர்க்கவுட் ஆகிறது. பல இடங்களில் சிரிப்பை வரவழைக்க வில்லை.

பைத்தியங்களாக வரும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி கோஷ்டி அடிக்கும் லூட்டி அதிகம். காஜல் அகர்வால் வீட்டில் பேயாக புகுந்துக்கொண்டு அவரை பயமுறுத்துவது, பின்னர் மொட்டை ராஜேந்திரனை பார்த்து நடுங்கி பதுங்குவது எல்லாம் சின்னபுள்ளகள் காமெடி.

காஜல் அகர்வால் துரத்தும் ரவுடியாக கே எஸ் ரவிக் குமாரும் காமெடிதான் செய்கிறார். மேலும் மயில்சாமி, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி என்று எல்லோ ருமே தன் பங்குக்கு காமெடி செய்கின்றனர்.

ராதிகா, ஜெய் கெஸ்ட் ரோலில் வருகின்றனர். சொல்வதற்கு எல்லாம் பெத்த பெயர்களாக இருந் தாலும் ஸ்கிரிப்ட்டில் கோட்டை விட்டதால் எல்லாமே பெயரளவோடு நின்று விடுகிறது.

இயக்குனர் கல்யாண் காமெடி செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கி றார் அதை கொஞ்சம் த்ரில் கலந்து இயக்கியி ருந்தால் இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டத்தை பணம் கொட்டும் ஏ டி எம்மாக மாற்றியிருக்க லாம்.

சாம் சி எஸ் ஸ்கிரிப்ட் கேட்டுத் தான் இசை அமைத்தாரா என்பது சந்தேகமாக உள்ளது.

கோஸ்டி – நிறைய ஸ்டார் கொஞ்சம் காமெடி.

Related posts

KaadhalConditions Apply Team wishing our Producer ⁦Nitinsathyaa

Jai Chandran

அதிக திரைகள் பெறும் கன்னட ப்ளாக்பஸ்டர் ‘காந்தாரா’

Jai Chandran

Mallu Girl” from “Varalaru Mukkiyam” a sensational hit!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend