Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

இன் கார் (பட விமர்சனம்)

படம்: இன் கார்

நடிப்பு: ரித்திகா சிங், சந்தீப் கோயத், மனிஷ் ஜன் ஜோலியா, கியன் பிரகாஷ்

தயாரிப்பு: அஞ்சும் குரோஷி, சாகித் குரோஷி

இசை:மத்தியாஸ் டுப்லசி

ஒளிப்பதிவு: மிதுன் கங்கோபாத்யாய்

இயக்கம்:ஹர்ஷ்வர்தன்

ரிலீஸ் : ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல்

பி ஆர் ஒ: சதீஷ்குமார்

சில வருடங்களுக்கு முன் டெல்லி  யில் ஒரு பெண் பஸ்ஸில் கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் இன் கார்.

தகராறு ஒன்றில் ஒருவனை கத்தியால் குத்திவிட்டு மாமன் மற்றும் அண்ணன் உதவியுடன் தப்பி மறைவான இடத்துக்கு. செல்கிறான் இளைஞன். இதற்கிடையில் வழியில் பஸ்சுக் காக காத்திருக்கும் ரித்திகாவை  கடத்தி அவரை மானபங்கபடுத்த காரிலேயே அமுக்கி பிடித்து அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் எண்ணம் ஈடேரியதா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

ஒரு வரி கதைதான் அதை இரண்டு மணிநேர கடத்தல் கதையாக்கியி ருக்கிறார் இயக்குநர் ஹர்ஷ வர்தன்.

இறுதிச் சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் இப்படத்தில் காரில் கடத்தி செல்லப்படும் பெண்ணாக நடித்திருக்கிறார். காரிலேயே 80 சதவீத கதை நடக்கிறது. ரித்திகா வை அருகில் உட்கார்ந்திருக்கும் சேட்டைக்கார சிறுவன் தடவோ தடவு என்று தடவுகிறான்.

பெட்ரோல் பங்க், மக்கள் இருக்கும் பகுதி என கார் செல்லும்போது தப்பிக்க வாய்ப்பு கிடைத்தும் ரித்திகா தப்பிக்காமல் காரிலேயே சைலன்டாக உட்கார்ந்திருப்பது ஏனோ தெரியவில்லை…

இயக்குனர் சொன்னபடி ரித்திகா வேகத்தோடு ஒன்றி நடித்திருக்கி றார்

கிளைமாக்சில் ஒரு பெரிய சம்பவம் இருக்கும் என்று யோசித்த படியே ரித்திகா வின் ஆக்ஷன் காட்சி ஆறுதல் தருகிறது.

மத்தியாஸ் டுப்லசி இசை ஒ கே

மிதுன் கங்கோபாத்யாய் ஒளிப்பதிவு கார் பயண அனுபவம் அளிக்கிறது.

ஹர்ஷ்வர்தன் ஏதோ ஒரு விஷயம் சொல்ல எண்ணி அதை சரிவர சொல்ல முடியாமல் திணறியிருக் கிறார். கிக்பாக்சர் ரித்திகாவை ஆக்ஷன் காட்சியில் இன்னமும் ஆக்ரோஷமாக பயன்படுத்தியி ருக்கலாம்.

இன் கார் – ஸ்லோ ஸ்பீட்

Two And A Half Star Rating Illustration Vector

 

Related posts

ஒன்றிணைவோம் வென்றிடுவோம்

Jai Chandran

சப்தம் (பட விமர்சனம்)

Jai Chandran

கருப்பு பூஞ்சை தொடர்ந்து வெள்ளை பூஞ்சை தொற்று

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend