ஈரோடு கிழக்கு தொகுதியில் எம் எல் ஏ வாக இருந்துவந்த
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருமகன் ஈ.வே.ரா உடல்நலக் குறைவால் மறைந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் அதிமுக சார்பில் கே.எஸ். தென்னரசுவும் போட்டியிட்டனர்.
தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் உள்பட 77 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இத்தொதியில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடந்தது.
238 வாக்குச் சாவடிகள் கொண்ட இந்த இடைத்தேர்தலில் 74.69 % வாக்குகள் பதிவாகியிருந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகளை விட இது 9% அதிகம்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மார்ச் 2ம் தேதி) நடந்தது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் பெற்றனர்.
சுமார் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமூக வெற்றி பெற்றுள்ளார்.
இந்த வெற்றி குறித்து தொடர்ந்து ஈவிகேஎஸ் இளங்கோவன்
கூறியதாவது:
வெற்றி என்பது நிச்சயிக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் இவ்வளவு பெரிய வெற்றி எதிர்பார்க்கவில்லை. இந்த வெற்றி என்பது முழுமையாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கு சேரும். ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக இருக்கிறதா என்ற சந்தேகம் இருந்தது. இப்போது இல்லை என்பது உறுதியாகிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமிக்கு மீசையும் இருக்கிறது, வேட்டியும் இருக்கிறது, ஏன் ஒரு அங்கீகாரம் கிடைக்கவில்லை என தெரியவில்லை. அவரை பொருத்தவரை எதிர்க் கட்சி தலைவராக இருக்கிறவர், மாநிலத் தின் முதலமைச்சராக இருந்தவர், சசிகலாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று முதலமைச்சர் ஆக உயர்ந்தவர். அவர் கொஞ்சம் நாகரீகமாக பேச வேண்டும்.
நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம்தான் இந்த தேர்தல். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மீதும் காங்கிரஸ் பேரியக்கம் ராகுல் காந்தி மீதும் மக்களுக்கு நல்ல அபிப்பிராயம் இருக்கிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாண்டிசேரி சேர்த்து 40 தொகுதி களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக வேட்பாளராக போட்டி யிட்ட தென்னரசு, இரண்டு நாட்களுக்கு முன்பு வாக்குப்பதிவு முடிந்த உடனே தேர்தல் நல்ல முறையில் நடந்தது, தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது எந்த தவறும் தொகுதியில் நடக்கவில்லை என சொல்லி இருந்தார். ஆனால், அவர் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் இன்று மாற்றி சொல்கிறார். அதிமுகவின் எதிர்காலம் குறித்து சொல்வதற்கு நான் ஜோசியன் அல்ல. இந்த தொகுதி மக்களுக்கு என்ன தேவையோ அவற்றை கண்டிப்பாக செய்வேன். மறைந்த மகன் திருமகன் எம்எல்ஏவாக இருந்தபோது முன்னுரிமை கொடுத்து செய்ய வேண்டிய திட்டங்களை முதலமைச் சரிடம் சொல்லி இருந்தார். அந்த 10 திட்டங்களையும் நிறை வேற்றுவதற்கு எவ்வளவு விரைவில் முடிகிறதோ அதை செய்வேன்.
இவ்வாறு ஈ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இடைத்தேர்தல் வெற்றி குறித்து சென்னை அறிவாலயத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது: இடைத்தேர்தலில் வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு திமுக சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள் கிறேன். திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவளித் துள்ளனர். எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். இந்த ஆட்சிக்கு வலு சேர்க்கும் வகை யில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தேடித்தந்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு இந்த இடைத்தேர்தல் மிகப்ப்ரிய அச்சாரமாக இருப்பது பாராட்டத்தக்கது. இந்த வெற்றிக் காக தொடர்ந்து பாடுபட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பி னர்கள், செயலாளர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலி லும் இதைவிட மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்.
இவ்வாறு மு க.ஸ்டாலின் கூறினார்.
