Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தி கிரேட் இந்தியன் கிச்சன் (பட விமர்சனம்)

படம்: தி கிரேட் இந்தியன் கிச்சன்

நடிப்பு: ஐஸ்வர்யா. ராஜேஷ், ராகுல் ரவீந்திரன், யோகிபாபு , போஸ்டர் நந்தகுமார்

தயாரிப்பு: துர்காராம் சவுத்ரி, நீல் சவுத்ரி

இசை: ஜெர்ரி சில்ஸ்டர் வின்சென்ட்

ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்

இயக்கம்: ஆர்.கண்ணன

பி ஆர் ஒ: ஜான்சன்

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு செல்கிறார். கொஞ்ச நாள் வீட்டு வேலைகள் செய்து கழிகிறது. திடீரென்று ஒத்தாசையாக இருந்த மாமியார் கர்ப்பிணியாக இருக்கும் தனது மகளுக்கு ஒத்தாசையாக இருக்க சென்றுவிட தனியாக வீட்டில் சிக்கிக் கொள்கிரார் ஐஸ்வர்யா. கணவனுக்கு ஒரு வகை சாப்பாடு, மாமனாருக்கு ஒரு வகை சாப்பாடு என்று செய்து கஷ்டப்படுகிறார். கிச்சனில் ஒழுகும் சிங்க் பைப்பை கூட கணவன் ரிப்பேர் செய்து தராமல் இழுத்தடிக்கிறார். வேலைக்குபோக ஆசைப்படும் ஐஸ்வர்யாவுக்கு தடை போடும் மாமனார். ஒரு கட்டத்தில் பீரியட் ஆனதால் தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை என ஐஸ்வர்யா மீதான அவமானங்கள் தொடர் கதையாகிறது. பொறுமை இழக்கும் ஐஸ்வர்யா என்ன முடிவெடுக்கிறார் என்பது கிளைமாக்ஸ்.

இது பொழுதுபோக்கு படமல்ல என்பதை முதலில் சொல்லியாக வேண்டும் ஆனால் ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் காண வேண்டிய படம்.

படம் தொடங்கி முதல் பாதி வரை பாத்திரம் கழுவுவது, சமைப்பது , சாப்பாடு போடுவது துணி துவைப்பது, டேபிள் சுத்தம் செய்வது என் ஐஸ்வர்யா காட்சிகள் செல்வதால் அலுப்பு தட்டுகிறது ஆனால் அதெல்லாம் எதற்காக காட்டப்படுகிறது என்பது படத்தின் பிற்பாதியில் தெரிகிறது.

பொறுமை எல்லை மீறி கோபத்தின் உச்சிககு செல்லும் ஐஸ்வர்யா பாத்திரம் கழுவிய நீரில் காபி தருவதும்,  அந்த அழுக்கு நீரை கணவன் மீது கொட்டுவதுமாக அதிர வைக்கிறார்.

ஐஸ்வர்யாவின் கணவராக ராகுல் ரவீந்தர் சொன்னதை செய்திருக் கிறார்.

போஸ்டர் நந்தகுமார் பொறுமை யாக பேசி கோபமூட்டுகிறார்.
கெஸ்ட் ரோலில் வரும் யோகிபாபு கொஞ்சம் ரிலாக்ஸ்.

துர்காராம் சவுத்ரி, நீல் சவுத்ரி தயாரித்திருக்கின்றனர்

ஜெர்ரி சில்ஸ்டர் வின்சென்ட் கிளை மாக்ஸ் பாட்டில் ஸ்கோர் செய்கிறார்.

பாலசுப்ரமணியம் பொறுமை ஒளிப்பதிவில் தெரிகிறது.

இயக்குனர் ஆர்.கண்ணன் பெண் விடுதலைக்கான சவுக்கை சுழற்றி யிருக்கிறார்.

தி கிரேட் இந்தியன் கிச்சன் – புயலாகிறது பூ.

 

Related posts

இல்லம் தோறும் வள்ளுவர் சிலை: விஜய்சேதுபதி பெற்றார்

Jai Chandran

‘நிலை மறந்தவன்’ ஆக மாறிய பஹத் பாசில்

Jai Chandran

AVATAR: THE WAY OF WATER COLLECTS RS. 7000 CR

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend