Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அயலி (வெப் தொடர் விமர்சனம்)

படம்: அயலி

நடிப்பு:அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா, சிங்கம்பு, டி எஸ் ஆர் தர்மராஜ், லவ்லின், காயத்ரி, தாரா, மெலடி, பிரகதீஸ் வரன், ஜென்சன், லட்சுமி பிரியா, ஸ்மிருதி வெங்கடேஷ், செந்தில் வேல், பகவதிபெருமாள்

தயாரிப்பு: குஷ்மாவதி

இசை: ரேவா

ஒளிப்பதிவு: ராம்ஜி

இயக்கம்: முத்துகுமார்

ரிலீஸ்: ஜீ 5

பி ஆர் ஒ:  சதீஷ் (AIM)

புதுக்கோட்டை வீரபண்ணை கிராமத்தில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் பெண்களுக்கு 9ம் வகுப்பு வரை மட்டுமே படிக்க வேண்டும், வயதுக்கு வந்தவுடன் கட்டாய திருமணம் நடத்த வேண்டும் என ஊர் தெய்வம் அயலி பெயரைச் சொல்லி ஊர் முக்கியபுள்ளி கள் மக்களை ஆட்டிப்படைக் கின்றனர். அந்த ஊரில் தவசி (அருவி மதன்), குருவம்மாள் (அனு மோல்) மகள் தமிழ்ச் செல்விக்கு (அபி நட்சத்திரா) எம் பி பி எஸ் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் வயதுக்கு வந்தால் திருமணம் செய்து விடுவார்கள் என்று பயந்து நாட்களை கடத்து கிறார். ஒருகட்டத்தில் வயதுக்கு வரும் தமிழ்ச் செல்வி அதை குடும்பத் தினருக்கு தெரியாமல் மறைக்கி றார். விஷயம் அம்மாவுக்கு தெரியவருகிறது. அவரை சமாளித்து விஷயத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க வைக்கிறாள் தமிழ்ச் செல்வி. கிராமத்தில் முதல்பெண்ணாக 10ம் வகுப்பில் சேர்கிறார் தமிழ்ச் செல்வி இந்நிலையில் ஊர்கட்டுப்பாடு, அயலி கோபம் என்று சொல்லி ஊர்மக்களை திரட்டுகிறது ஒரு கூட்டம். இதில் தமிழ்ச்செல்வி கதி என்னவானது  என்பதற்கு பெண்மையின் துணிவை போற்றும் வகையில் அதிரடியானபதில் தருகிறது அயலி வெப் தொடர்.

90 காலககட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியிருக்கிறது அயலி. தமிழ்ச்செல்வி கதாபாத் திரத்தில் அபி நட்சத்திரா துணிச்சல் செல்வியாக    நடித்தி ருக்கிறார். வேறு யாராவது இப்படியொரு பாத்திரத்தில் நடிப்பார்களா என்பது சந்தேகமே.

தனது பள்ளி தோழி லவ்லின் வயதுக்கு வந்தபின் குடும்பத்தினர சொல்லுக்கு கட்டுப்பட்டு குடிகார னுக்கு வாழ்க்கைப்பட்டு
தன் கண் எதிரிலேயே விதவை ஆவதை கண்டு குமுறும் அபி  அப்படியொரு கொடுமை தனக்கு  நடக்கக்கூடாது என்று எண்ணி அவர் காய் நகர்த்துவதும்,  வயதுக்கு வந்தது தெரிந்ததும் அதை மறைக்க
தண்ணீரில் முழ்கியும், சிவப்பு இங்க் கரையை பாவாடையில் ஊற்றிக்கொண்டும் ஊர் மக்களிடமும்,  ஏன் பெற்ற அம்மா விடமும் வயதுக்கு வந்த விஷயத்தை மறைக்கும் காட்சிகள் பதறவைக்கிறது.

பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒரு பெரிய தீட்டு காரியமாக சமூகம் அவர்கள் மீது திணிக்கும் பல தீண்டத்தாகாமை களை சம்மட்டி அடி கொடுத்து  சுக்குநூறாக உடைத் தெறிந்திருக் கிறார். இயக்குனர் முத்துகுமார்.

பெண்களுக்கு மாதவிடாய் வரும் காட்சியில் அபி நடித்திருக்கும் விதம் மனதை நெகிழ வைக்கிறது படிப்புக்காக அவர் படும் அவஸ்தைகள் சமூகத்தில் இன்றளவும் நடந்துகொண்டி ருக்கும் அவலம்.
அபியின் அம்மாவாக நடித்தி ருக்கும் அனுமோல் எதார்த்த நடிப்பில் கட்டிப்போடுகிறார். மகள் வயதுக்கு வந்ததை அறிந்ததும் அவருக்கு ஏற்படும் பதற்றம் பின்னர் மகளின். படிப்புக்காக மகள் வ்யதுக்கு வந்த விஷயத்தை கணவருக்கு தெரியாமல் மறைத்து விட்டு தவிப்பது அயலி தெய்வத்தின் கோபத்துக்கு தன் குடும்பம் ஆளாகிவிடுமோ என்று அஞ்சி பதறுவது என நடிப்பு ராஜாங்கம் நடத்தியிருக்
கிறார்.

தந்தையாக நடித்திருக்கும் அருவி மதன் அளவுமிகாமல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் . சிங்கம் புலி, லிங்கா வில்லத்தனத் தில் கோபத்துக்குள்ளாகின்றனர். அவர்களை வில்லத்தனத்தில் மிஞ்சி விடுகிறார் டி எஸ் ஆர் தர்மராஜஜை ஆமை என்று பெண்கள் திட்டும்போது பொருத்த மாத்தான் சொல்றாங்க என்று முணுமுணுப்பு எதிரொலிக்கிறது.

ஜி5 ஒரிஜினல் கூட்டுடன் எஸ்.குஷ்மாவதி தயாரித்தி ருக்கிறார்.

பெண்களுக்கு நூற்றாண்டாக மறுக்கப்படும் உரிமைகளின் அவலத்தை தோலுரித்து காட்டியி ருக்கிறார் இயக்குனர் முத்துக் குமார். எட்டு எபிசோட்கள் கொண்ட இத்தொடர் இன்னும் பல பவர்புல் காட்சிகளை உள்ளடக்கியிருக் கிறது. ஜி5 ஒரிஜினல் வெளியாகிறது.

ராம்ஜியின் ஒளிப்பதிவு பலம் சேர்க்கிறது. ரேவா இசை காட்சிகளுக்கு உயிர்கொடுத்திருக் கிறது.

அயலி – பெண் அடிமைச் சங்கிலி உடைப்பு.

Related posts

செ. ஹரி உத்ராவின் ’கலைஞர் ஐயா’ பிறந்த நாள் சிறப்பு பாடல்..

Jai Chandran

அறவழி உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு: சரத்குமார்

Jai Chandran

சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ பட டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend