பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக் கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘வாரிசு’ .திரைப்படம் பொங்கல் பண்டிகை வெளியீடாக ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா, முக்கிய வேடங்களில் சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, யோகி பாபு, கணேஷ் வெங்கட் ராம், சம்யுக்தா சண்முக நாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத் துள்ளார். விவேக் பாடல்களுடன் முதன் முதலாக வசனமும் எழுதியுள்ளார்.
தமிழில் வெளியாகி இரண்டு தினங்கள் கழித்து தற்போது தெலுங்கிலும் வாரசுடு என்கிற பெயரில் வெளியாகி உள்ள இந்த படம் அங்கேயும் அபரிமிதமான வரவேற்பை பெற் றுள்ளது.
படத்தின் வெற்றியை கொண்டாடிய பத்திரி கையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சென்னையிள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பட இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி பேசியது: இந்த மொத்த படத்தின் வெற்றியையும் புரொடக்சன் டிசைனராக இருந்து சமீபத்தில் எங்களை விட்டு மறைந்த சுனில் பாபுவுக்கு காணிக்கையாக செலுத்துகிறோம். வாரிசு ஒரு படம் அல்ல.. அது ஒரு நம்பிக்கை.. தளபதி விஜய், தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வெற்றி யாக்கிய தமிழ் மக்கள் மற்றும் விஜய் ரசிகர் களுக்கு நன்றி. பலரும் இந்த படம் துவங்கிய நாளிலிருந்து தெலுங்கு இயக்குனர் படம் என்றே சொல்லி வந்தது என் மனதை ரொம்பவே கஷ்டப்படுத்தியது.. இது பக்கா தமிழ் படம் தான். நான் தமிழ் இயக்குனரா தெலுங்கு இயக்குனரா என்பதை தாண்டி முதலில் ஒரு மனிதன். அந்தவகையில் ரசிகர்களும் இந்த வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வாரிசு படத்தில் வெற்றியால் உங்கள் நெஞ்சில் எனக்கு ஒரு இடம் கொடுத்து விட்டீர்கள்..
இந்த படம் ஆரம்பித்த போதும், முடிவடைந்த போதும், அவ்வளவு ஏன், படம் இப்போது வெளி யாகி இருக்கும் நிலையிலும் கூட விஜய் என்னிடம் கேட்ட ஒரே கேள்வி நீங்கள் மகிழ்ச்சி தானே என்பதுதான். அந்த ஒரு வார்த்தை போதும். எனக்கு. இந்த படத்திற்காக தயாரிப் பாளர் தில் ராஜு நான் கேட்டதெல்லாம் கொடுத்தார். இந்த படத்தின் வெற்றியை உயர்த்திப்பிடித்துள்ள இசையமைப்பாளர் தமன் இன்னும் நிறைய உயரம் போகவேண்டும் என வாழ்த்துகிறேன். பாடல் மட்டுமல்லாது கதை வசனத்திலும் ஒத்துழைப்பு தந்த விவேக், நேர்த்தியான படத்தொகுப்பை அளித்த பிரவீண் கே.எல் என அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
இந்தப்படம் பார்த்த என் தந்தை, படத்தில் சரத் குமாரின் கதாபாத்திரம் மற்றும் அவரது நடிப்பை பார்த்துவிட்டு படம் முடிந்ததும் வெளியே வந்து என்னை கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டார். என் அப்பாவிடம் இருந்து எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக இதை கருதுகிறேன். படம் பார்த்த பலரும் அவர்களது அப்பா அம்மாவுக்கு போன் செய்து இந்த படத்தை பாருங்கள் என்று கூறியதை நேரிலேயே பார்க்க முடிந்தது. ஷாம், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, ராஷ்மிகா, சங்கீதா என எல்லோருமே இந்த படத்திற்கு உறுதுணை யாக நின்றுள்ளார்கள்.. அனைவருக்கும் எனது நன்றி.
பட தொகுப்பாளர் பிரவீண் கே.எல் பேசியது:
இத்தனை வருடங்களில் எனது திரையுலக பயணத்தில் வாரிசு திரைப்படத்தில் பணிபுரிந்ததை மிகப் பெரிய சாதனையாக நினைக்கிறேன்.
நடிகர் விடிவி கணேஷ் பேசியது:
தெலுங்கு இயக்குனர் என சொல்கிறார்களே என இயக்குனர் வம்சி வருத்தப்பட வேண்டாம். தமிழ் ரசிகர்கள் உங்களை தங்களில் ஒருவனாக பார்க்கி றார்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ முகத்தில் எந்நேரமும் குடியிருக்கும் இந்த சிரிப்பை பார்க்கும் போது நாலாபக்கமும் இருந்து வசூல் கொட்டு கிறது என்பது நன்றாக வே தெரிகிறது. தற்போது மலையாளத்தில் திலீப், தமன்னா நடிக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்காக சென்றிருந்தேன்.. அங்கே விஜய் ரசிகர் ஒருவர் தனது கையிலும் முதுகுப்பக்கத்திலும் விஜய்யின் உருவத்தை பிரமாண்டமாக பச்சை குத்தி வைத்திருந்ததை பார்த்து பிரமித்து போனேன்.
பாடலாசிரியர் விவேக் பேசியது:
முதன்முதலாக மெர்சல் படத்திற்கு முழு பாடல்களையும் எழுதும் பொறுப்பை என்னை நம்பி கொடுத்தார் தளபதி விஜய். அதே போல இந்த வாரிசு படம் மூலம் முதன்முதலாக வசனம் எழுதும் மிகப்பெரிய பொறுப் பையும் என்னை நம்பி விஜய்யும் இயக்குனர் வம்சியும் ஒப்படைத் தார்கள். அதை ஓரளவு நிறைவேற்றி இருக்கி றேன் என நம்புகிறேன். தளபதி விஜய் நீண்ட நாள் கழித்து இந்த படத்தில் இளைய தளபதியாக இன்னும் படு யூத்தாக மாறி விட்டார். காமெடி, சென்டி மென்ட், ஆக்சன், பஞ்ச் டயலாக் என எல்லாவற் றையும் ஒரு ஹீரோ பிரதிபலிக்க முடியுமா என்று யாரவது கேட்டால், இதெல்லாம் ஒரு விஷயமா என அசால்ட்டாக நடித்து செல்பவர் தான் விஜய். இந்த படத்திலும் அந்த மாயாஜாலத்தை நடத்திக் காட்டி இருக்கிறார்.
இந்த படத்தில் சரத்குமாரின் நடிப்பை பார்த்துவிட்டு பாராட் டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த ஒரு அருமையான காட்சி ஒன்று படத்தில் நீளம் காரணமாக இடம் பெறவில்லை. அதை எப்படியாவது விரைவில் வெளியிட முயற்சிக் கிறோம்.
இசையமைப்பாளர் தமன் பேசியது: இவ்வளவு பெரிய ஸ்டார் நடித்துள்ள படத்தில் ஒரு அம்மா பாடலை இரண்டரை நிமிடத்திற்கு மேல் வைத்து உணர்வு பூர்வமாக அதை அனைவரும் ரசிக்கும்படி செய்துள்ளார் இயக்குனர் வம்சி. இந்த படத்திற்கு இசை யமைக்க ஒப்பந்தமான போதே, ஏற்கனவே மாஸ்டர், பீஸ்ட் படங்களில் இசையமைப் பாளர் அனிருத் பிரித்து தள்ளிவிட்டார் அதை தாண்டி நாமும் ஏதாவது பண்ணி ஆகணுமே என்கிற எண்ணம் மனதில் ஏறிவிட்டது. வெற்றி என்பது உடலில் ஓடும் ரத்தம் மாதிரி. அது ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
நடிகை சங்கீதா பேசியது: வாரிசு படத்தில் நடித்ததற்காக இதுவரை நான் யாருக்குமே நன்றி சொல்லவில்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். அதற்கு ஒரு வாய்ப்பை இப்போது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். இயக்குனர் வம்சி இந்த படத்தில் நடிக்க அழைத்தபோது கதை பற்றியோ கதாபாத்திரம் பற்றியோ எதுவும் கேட்காமல் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால் ஹைதராபாத்தில் எனக்கு இன்னொரு சகோதரர் வீடு இருக்கிறது என்றால் அது இயக்குனர் வம்சியின் வீடு தான். இந்த படத்தில் நடித்த போது விஜய் சாருடன் நாங்கள் அனைவருமே 40 நாட்கள் ஒரு குடும்பமாக இருந்தோம். 25 வருடத்திற்கு முன்பு அவரிடம் பார்த்த அதே பணிவு, உழைப்பு, அர்ப்பணிப்பு உணர்வு என எதுவுமே மாற வில்லை. ஆனால் உருவத்தில் மட்டும் இன்னும் இளமையாக, வெளியில் இன்னும் வேகமாக மாறி இருக்கிறார்.
நடிகர் ஷாம் பேசியது: ஒரே சமயத்தில் வாரிசு துணிவு என இரண்டு படங்களும் வெளியான சூழ்நிலையில் இதை அழகாக கையாண்டு இரண்டு படங்களையும் சமமாக பாவித்த உதயநிதி ஸ்டாலி னுக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத் திற்கும் நன்றி.
தயாரிப்பாளர் தில் ராஜு தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார். அந்த அளவிற்கு சினிமாவின் மீது அவர் ரொம்ப ஈடுபாடு கொண்டி ருந்தார். அவர் தமிழில் இன்னும் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும். இயக்குனர் வம்சி ஒரு அருமையான மனிதர். அழகான மனம் கொண்டவர். அதுதான் இந்த படமாக வெளிப்பட்டுள்ளது.
இசையமைப்பாளர் தமன். படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது.
இந்த படத்தை பார்க்கும்போது நிறைய பேர் கண்கலங்கினார்கள். படப்பிடிப்பில் விஜய்யுடன் பழகிய நாட்களில் நான் கவனித்த ஒரு விஷயம் அவர் யாரைப்பற்றியும் எதிர்மறையாக பேசமாட்டார். யாரைப் பற்றியாவது எதிர்மறையாக சொன்னால் கூட கேட்டுக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்து விடுவார்.
தயாரிப்பாளர் தில் ராஜு பேசியது,:
விஜய் நடித்த படங்களில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேபோல தெலுங்கில் ஆக்சன் பட ஹீரோக்களான ஜூனியர் என்டிஆரின் பிருந்தாவனம், பிரபாஸின் மிஸ்டர் பர்ஃபெக்ட், மகேஷ்பாபு வின் சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லி செட்டு ஆகிய படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவை எல்லாமே மாஸ் ஹீரோக்களின் குடும்ப கதையம்சம் கொண்ட படங்கள். அப்படி இந்த வாரிசு படத்தின் கதையை வம்சி என்னிடம் சொல்லிய போது இதில் விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறி னேன்.. விஜய்யுடன் ஒரே சந்திப்பிலேயே இந்த கதை ஓகே ஆனது.
சில படங்கள் தயாரிக்கும்போது பணம் நிறைய கிடைக்கும். சில படங்களில் பாராட்டு கிடைக்கும். இந்த வாரிசு படத்தில் பணம், பாராட்டு என இரண்டுமே ஒரு சேர கிடைத்துள்ளது. குடும் பத்தில் உள்ள அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என எல்லோருமே இந்த படத்தை ரசித்து பாராட்டுகிறார்கள். வாரிசு இப்போதுதான் ஐந்து நாள் குழந்தை யாக இருக்கிறது. மிக நீண்ட தூரத்திற்கு இந்த படத்தை எடுத்துச் செல்ல விரும்புகிறேன். ஒரு மாதத்திற்கு பிறகும் கூட இந்த படம் தியேட்டர் களில் ஹவுஸ் புல்லாக தான் ஓடும். காரணம் குடும்பம் குடும்பமாக இந்த படத்தை வந்து பார்ப்பார்கள்.
நடிகர் சரத்குமார் பேசியது:
தமிழில் எப்படி தயாரிப் பாளர் ஆர்பி.சௌத்ரி கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்ந்தெடுத்து தயாரிக் கிறாரோ அதுபோன்று தான் தெலுங்கில் தில் ராஜூவும். பெயருக் கேற்றபடி தில்லானவர். இயக்குனர் வம்சி தெலுங்கு இயக்குனர் என சொல்கிறார்களே என்று கவலைப்பட வேண்டாம் உணர்வுக ளை வெளிப்படுத்தும் போது அதில் வெளிப் படும் வார்த்தைகளில் பிழை கண்டுபிடிக்க தேவையில்லை. அப்படி பேசும்போது தவறு கண்டுபிடித்தாலும் நாம் அதற்கு விளக்கம் அளிக்கவும் தேவை யில்லை..
இந்த படத்தில் விஜய் யுடன் நடித்ததால் அடுத்த தலைமுறை ரசிகர் களுக்கும் நான் சென்றுள்ளேன். சொல்லப்போனால் இப்போது நான் 40 வயது இளைஞனாக தான் உணர்கிறேன். பாடலா சிரியர் விவேக் இந்த படத்தில் வசனகர்த் தாவாகவும் பிரமிக்க வைத்துள்ளார். அவரிடம் சில வார்த்தைகள் குறித்து விவாதித்தேன். அந்த அளவிற்கு நல்ல வசனங்களை இந்த படத்தில் கொடுத்துள் ளார் விவேக்.
நடிகை சங்கீதா ஸ்ரீகாந்தை கன்னத்தில் ஓங்கி அறையும் காட்சியை பார்த்து அதிர்ந்தேன். நிஜமாகவே அறைந் தாரா என தெரியாது. ஏனென்றால் ராதிகா இதுபோன்ற விஷயத்தில் அப்படித் தான் அறைந்து விடுவார்.. இந்த படத்தில் உறவுகள் பற்றிய ஒரு அழகான மெசேஜ் இருக்கிறது. அதனால் பலரும் இரண்டாவது முறை, மூன்றாவது முறை என குடும்பத் துடன் இந்த படத்தை பார்க்க வருகிறார்கள். வாரிசு படத்துடன் வெளி யாகி உள்ள துணிவு படமும் ஹிட் ஆகட்டும்.. அதேபோல இங்கே வெளியுள்ள பால கிருஷ்ணா, சிரஞ்சீவி படங்களும் நன்றாக ஓட வேண்டும்.. அப்படி ஓடினால் தான் இந்த திரையுலகம் ஆரோக்கி யமாக இருக்கும்.
