Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வாரிசு பட விமர்சனம்

படம்: வாரிசு
நடிப்பு: விஜய், ராஷ்மிகா மந்தன்னா, ஆர்.சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஶ்ரீகாந்த், குஷ்பு யோகிபாபு, ஜெயசுதா, சங்கீதா கிருஷ்ணா, சம்யுக்தா, சண்முகா னந்தம், நந்தினிராஜ், கணேஷ் வெங்கட்ராமன், ஶ்ரீமன், விடிவி கணேஷ், ஜான் விஜய், பரத் ரெட்டி, சதீஷ், சஞ்சனா

தயாரிப்பு: தில்ராஜ்,

இசை: தமன் எஸ்

ஒளிப்பதிவு: கார்த்திக் பழனி

இயக்கம்: வம்சி பெய்டிபள்ளி

பி ஆர் ஒ: ரியாஸ் கே அஹமது

தொழில் அதிபர் சரத்குமார் – ஜெயசுதா தம்பதியின் மகன்கள் ஶ்ரீகாந்த், ஷாம், விஜய். முதல் இரண்டு பிள்ளை களும் அப்பாவின் சொல்படி அடங்கி நடக்கின்றனர். இளையமகன் விஜய் யாருக்கும் அடிபணி யாமல் சுதந்திரமாக தன் இஷ்டம்போல் வாழ எண்ணுகிறார். இதனால் அப்பா மகனுக்கு இடையே அடிக்கடி சண்டை
நடக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் விஜய் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்று விடுகிறார். இந்நிலை யில் சரத்தின் தொழில் போட்டியாளர் பிரகாஷ் ராஜ் சரத்தை வீழ்த்த திட்டமிடுகிறார். அதேசமயம் சரத்தின் மணிவிழா வருகிறது. அதற்கு வரும்படி விஜய்யிடம் சொல்கிறார் தாய் ஜெயசுதா. 7 வருடம் கழித்து விஜய் வீடு திரும்புகிறார். அப்போது தந்தையின் உடல்நிலை பாதித்திருப்பதுபற்றி விஜய்யிடம் தாயார் சொல்கிறார். கம்பெனி பொறுப்பையும் விஜய்யிடம் ஒப்படைக் கின்றனர். இதனால் மற்ற இரண்டு பிள்ளை களும் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு செல்கின் றனர். கம்பெனி நிர்வாகம் ஏற்ற விஜய் பிரகாஷ்ராஜின் சூழ்ச்சியை எப்படி முறிய டிக்கிறார். தனது பிஸ் னாசை எப்படி நிலை நிறுத்திக்கொண்டார் என்பது கிளைமாக்ஸ்.

விஜய்க்கு ஏற்கனவே திரைக்கு வந்த மாஸ்டர், பீஸ்ட் படம் ஆக்ஷன் படங்களாக அமைந்து விட்டதால் குடும்ப சென்டிமென்ட் படத்திற்கு காத்திருந்தது போல
வாரிசு படம் அமைந்தது. ஆனால் கதை அதிகாலத்து கதையாக இருப்பதால் எல்லாமே பார்த்த சீன்கள்போல் இருக்கிறது.

இதில் விஜய்க்கு ஸ்கோர் செய்ய அவரது ஸ்டைல், ஆக்ஷன், நடனம் கைகொடுக் கிறது.

ஒரு கட்டத்தில் கோபித்துக்கொண்டு சென்ற விஜய் பின்னர் பிரிந்து சென்ற குடும்பத்தை சேர்க்க எடுத்துக்கொள்ளும் முயற்சி குடும்பத்தின் மீது அவர் வைத்தி ருக்கும் பாசத்தை வெளிப்படுத்துவதாக
உள்ளது.

படத்தில் ஆவலுடன் எதிர்பார்ப்பது ரஞ்சிதம் பாடல் எப்போது வரும் என்பதைத்தான். விஜய்யும் அவருக்கு இணையாக ராஷ் மிகாவும் ஆடும் நடனம் அசத்தலோ அசத்தல். பாடல் தொடங்கி முடியும் வரை விசில் சத்தமும் தொடர்கிறது.

எவ்வளவுதான் விஜய் நிலைநிறுத்த முயன் றாலும் யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல் ஆகிவிடுகிறது.
ராஷ்மிகா ஹீரோயின் தான் ஆனால் அவருக்கு அதிக வேலையில்லை. பிரகாஷ்ராஜ் விஜய் மோதல் கில்லி படம் போல் அனல் பறக்கவில்லை.

விஜய் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் சரத்குமார் ஜெயசுதா தங்களது அனுபவ நடிப்பால் கவர்கின்றனர்

விஜய்- யோகிபாபு காமெடி காம்பினேஷன் ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பிரபு உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் இருந்தாலும் யாருக்கும் அதிக வேலையில்லை.

தில் ராஜு படத்தை தயாரித் திருக்கிறார். வம்சி பெய்டிபள்ளி படத்தில் விஜய்க்கு நிறைய ஸ்பேஸ் கொடுக்கும் வகையில் ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறார். குடும்ப கதை என்பதால் ஆனால் பறக்கும் காட்சிகளை அமைக்க சிரமப்பட்டிருக்கிறார்.

தமன் இசை பெரிய பிளஸ். ரஞ்சிதமே ஒரு பாடலே அவர் இசையில் கில்லி என்பதை நிரூபித்துவிடுகிறது.

வாரிசு – குடும்ப சென்ட்டிமென்ட்.

Related posts

Sree Gokulam Movies distribute Dunki’

Jai Chandran

சென்னை எக்ஸ்பிரஸ்’ முதல் ‘ஜவான்’ படம் வரை ஷாருக்கானின் லுங்கி கதை

Jai Chandran

ஆக்‌ஷன் விமர்சனம்

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend