Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சரத்குமார் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

உலகில் ஒவ்வொரு புதிய நாளும், ஒவ்வொரு புதிய வாய்ப்பாக மனிதர்களை இயக்குகிறது. 2022 – இல் கடந்து சென்ற நாட்களை நினைவில் நிறுத்தி, எதிர்வரும் நாட்களை நம்பிக்கையுடன் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் நோக்கில், 2023 ஆங்கிலப் புத்தாண்டை புத்துணர்வுடன் வரவேற்கிறோம்.

ரஷ்யா – உக்ரைன் போர், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவால் துயரம், இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத மாபெரும் பொருளாதார வீழ்ச்சி என பல சவால்களை உலக நாடுகள் முதல் உள்ளூர் வரை சந்தித்து வந்தாலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக தேர்வானது, கொரோனாவிற்கு பிந்தைய பொருளாதார மீட்டெடுப்பு, வளர்ச்சி திட்டங்கள் என ஆறுதலான நற்செயல்களும் நடந்தேறியுள்ளது.

பிறக்கவிருக்கும் 2023 – புத்தாண்டில் தேச அளவில் வளர்ந்து வரும் போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் தீர்மானம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தால் மக்களின் வாழ்வியல் சமூகச்சூழல் அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும், ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் மதுவால் நடந்தேறும் விபத்துகளை தவிர்ப்பதற்கு, இனி வருங்காலங் களில் மதுக்கடைகளுக்கு ஆங்கிலப் புத்தாண்டு தினத் தன்றும், அதற்கு முந்தைய தினத் தன்றும் விடுமுறை அளித்திட வேண்டுமென அகில இந்திய சமத்துவ கட்சியின் தமிழக அரசை சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

புதிய கனவுகள், புதிய சிந்தனைகள், கூடுதல் தன்னம்பிக்  கையுடன் புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் அனை வரும், காலம் முன்னிறுத்தும் கடமையினை செவ்வனே நிறைவேற்றுவோம். பொதுநல சிந்தனை, ஒழுக்கம், சமத்துவம், சகோதரத்துவத்துடன் மக்களின் வாழ்வில் வளமும், நலமும், ஆரோக்கியமும் பெருகிட வேண்டி என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாகவும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழைப்பவரே உயர்ந்தவர்

இவ்வாறு ரா.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Related posts

Sasikumar starrer KAARI to hit screenon November 25th

Jai Chandran

புரொஜக்ட் சி’ படத்திற்கு குவியும் பாராட்டுகள்

Jai Chandran

Siva Kartikeyan has penned lyrics for NaaiSekar

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend