Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

செம்பி ( பட விமர்சனம்)

செம்பி (பட விமர்சனம்)

படம்: செம்பி

நடிப்பு: கோவை சரளா,
தம்பி ராமையா, அஷ்வின்குமார்,
நிலா, நாஞ்சில் சம்பத்,
பழ கருப்பையா , ஆகாஷ், ஞான சம்பந்தன், ஆண்ட்ரூஸ்
பாரதி கண்ணன் , சூர்யா ரவி

தயாரிப்பு – ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் & ஏ. ஆர் என்டெர்டைன் மெண்ட்ஸ் அஜ்மல் கான் & ரியா

இசை:நிவாஸ் கே பிரசன்னா

ஒளிப்பதிவு : எம்.ஜீவன்

இயக்கம்: பிரபு சாலமன்

பி ஆர். ஒ: நிகில் முருகன்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்

கொடைக்கானல் மலைக் கிராமத்தில் வாழும் வீரத்தாய் (கோவை சரளா) தனது பேத்தி செம்பி (நிலா) மீது உயிரையே வைத்திருக்கிறார். ஒரு சமயம் தேன் குடுவையை கடையில் தரக் கொண்டுசெல்லும் செம்பியை அரசியல்வாதியின் மகன் மற்றும் இரண்டு நண்பர்கள் கூட்டாக கெடுக்கின்றனர். பேத்தியின் இந்த நிலை கண்டு கதறும் பாட்டி போலீஸில் புகார் தருகிறார். ஆனால் அரசியல்வாதியிடம் பேரம் பேசிக்கொண்டு பாட்டியை மிரட்டு கிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். அப்போது நடக்கும் வாக்குவாதத் தில் இன்ஸ்பெக்டரை தாக்கி விட்டு பஸ்சில் தப்பிக்கிறார் பாட்டி. அவர் களை கொலை செய்ய அரசியல் வாதியின் அடியாட்கள் ஒரு பக்கம் துரத்த மறுபக்கம் பாட்டி பேத்தியை போலீஸ் துரத்துகிறது. அவர்கள் போலீசிடம் சிக்கும் நிலையில்   வக்கீல் ஒருவரும் (அஸ்வின் குமார்) பஸ் பயணிகளும் பாட்டி, பேத்திக்கு ஆதரவாக நிற்கின் றனர். வழக்கு கோர்ட்டுக்கு செல் கிறது. அடுத்து நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

தொடக்கமே ஒரு பஸ் கொடைக்  கானல் மலையில் ஆயிரம் அடி உயரத்திலிருந்து அந்தரத்தில் பறந்து கீழே விழுந்து சுக்கு நூறாக நொறுங்கும்போதே எல்லோர் கவனமும் திரையில் பதிந்து விடுகிறது. உடனடியாக கதைக் குள் காட்சிகள் நுழைகிறது.

உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராத அந்த வயதான பெண்  மணி பேத்தியை அரவணைக் கும்போது யார் இந்த நடிகை பார்த்த முகமாக இருக்கிறதே என்று ஆராயத் தொடங்கிய மறுகணம் அது கோவை சரளா என்று தெரிந்ததும் ஆச்சரியம் மோலோங்குகிறது. பின்னர் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ஆச்சரியங்களை அடை மழையாக பொழிகிறார்.

தேன் எடுப்பதற்காக மரக்கிளை மீது சரளா  அமர்ந்திருக்கிறார் என்று பார்த்தால் அது அதளபாள பள்ளத் தாக்கின் மீதிருக்கும் மரம் என்று தெரியும்போது நம் கால்க ளில் லேசாக உதறல் ஆரம்பிக் கிறது.

மிரட்ட வரும் போலீஸை அடித்து முகத்தை கிழிப்பதில் பெண் புலியாகும் சரளா பஸ்ஸில் தப்பிக் கும்போது தன் பேத்தியை இழிவாக பேசும் போலீஸ் முன் அரிவாளை தூக்கிப் போட்டு சொடக்கு விட்டு பேசி பெண் சிங்கமாக உயர்கிறார்.

பேத்தி செம்பியாக நடித்திருக்கும் பேபி நிலா முகபாவனைகளை சரியான அளவில் அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாக வெளிப்படுத்து கிறார்.

வக்கீலாக வரும் அஸ்வின்குமார் கச்சிதமான நடிப்பால் கவர்கிறார். கோர்ட்டில் சரளாவையும் அவரது பேத்தியையும் பத்திரமாக கொண்டு சென்று சேர்க்க ஆக்‌ஷன் ஹீரோவாகி பஸ் இருக் கையில் அமர்ந்தபடியே ரவுடிகளை பெண்டெடுப்பது பரபரப்பு

அரசியல்வாதிகளாக நிஜ அரசியல்வாதிகள் பழ கருப்பையா, நாஞ்சில் சம்பத் நடித்துள்ளனர். அரசியல்வாதி பிள்ளையாக வருபவரும் அவரது நண்பராக வரும் சூர்யா ரவியும் மற்றொரு வரும் மிதப்புடன் நடித்து பணத்திமிர் காட்டுகின்றனர்.

படத்தில் பல காட்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதளவுக்கு வாக்குவாதங் களாக அமைக்கப் பட்டிருக்கிறது.

பஸ் கண்டக்டராக வரும் தம்பி ராமையா போலீஸ் பற்றி கிண்டலாக பேசி வாங்கிக்கொட்டி கொள்வது காமெடி.

ஆர் ரவீந்திரன், அஜ்மல் கான் & ரியா அர்த்த முள்ள படத்தை தயாரித் திருக்கின்றனர்.

நிவாஸ் கே பிரசன்னா வின் இசை பலம்.

எம்.ஜீவன் ஒளிப்பதிவு கொடைக்  கானலின்  அழகை அள்ளி குவித்து விழிகளை குளிர்ச்சியிலாழ்த்தி தாலாட்டுகிறது.

இயக்குனர் பிரபு சாலமன் என்ன வெல்லாம் சொல்ல நினைத்தாரோ அதையெல்லாம் அந்தந்த பாத்திரங்கள் வழியாக வெளிப் படுத்தி அப்ளாஸ் பெறுகிறார்.
ஒவ்வொரு சட்டத்திற்கான தண்டனையையும் சொல்லி புரிதல் இல்லாதவர்களுக்கு புரிதலை ஏற்படுத்துகிறார்.

போக்ஸோ சட்டத்தின்படி மானபங்  கப்படுத்தட்ட படத்தை யும், பெயரையும் பொதுயிடத்தில் வெளியிடக்கூடாது. ஆனால் படத்தில் எந்நேரமும் குழந்தையின் முகம்தான் காட்டப்படுகிறது.. இப்படி ஒன்றிரண்டு குறைகள் படத்திலிருந்தாலும் சொல்ல வந்த கருத்தை நேர்மையாக சொல்லி யிருப்பது குன்றின் மேலிட்ட விளக்கு.

செம்பி – துணிச்சல்காரி.

Related posts

50 days of Block buster Bachelor

Jai Chandran

Welfare Function For The World SuperStar Rajinikanth

Jai Chandran

Five Directors Movie “Vowels” Audio Launch Event..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend