Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கடைசி காதல் கதை (பட விமர்சனம்)

படம்: கடைசி காதல் கதை

நடிப்பு: ஆகாஷ் பிரேம் குமார், எனாக்‌ஷி கங்குலி, புகழ், விஜாசயிக், சாம்ஸ், நோபில், பிரியங்கா வெங்கடேஷ், அனு பிரியதர்ஷினி, மிதுன்யா, நிசார், சுவப்னா, கிருத்திகா

தயாரிப்பு: இ.மோகன்

இசை: சேட்டன் கிருஷ்ணா

ஒளிப்பதிவு :சிவசுந்தர்

இயக்கம்: ஆர் கே வி

பி ஆர் ஒ: சுரேஷ் சுகு, தர்மதுரை

ஆகாஷ் பிரேம்குமார், புகழ் உள்ளிட்ட 4 நண்பர்கள் ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். ஆகாஷ் தவிர மாற்ற மூவரும் தங்கள் காதலியுடன் லூட்டியடிக்க காதலி கிடைக்காமல் தவிக்கும் ஆகாஷுக்கும் காதலியாக கிடைக்கிறார் எனாக்‌ஷி. மற்றவர்கள்போல் இல்லாமல் இருவரும் பிளாட்டானிக் லவ் அதாவது தொடாமல் , முத்தம் கொடுக்காமல் காதலிக்க வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறார். முதலில் ஒப்புக் கொண்டாலும் போகப்போக எல்லை மீறுகிறார் ஆகாஷ். அதை ஏற்காமல் பிரேக் அப் செய்யும் எனாக்‌ஷி வேறு மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட முடிவு செய்கிறார். இதில் மன நோயளியாகும் ஆகாஷ் நண்பர்களையும் அவர்களது காதலிகளையும் கடத்தி வந்து எல்லோரும் ஆடையில்லாமல் ஆதி தமிழர்கள் வாழ்ந்த குடியத்துக்கு சென்று நிர்வணமாக எந்த ஆசையும் இல்லாமல் வாழலாம் என துப்பாக்கி முனையில் மிரட்டு கிறார். நண்பர்களை நிர்வாண மாக்கும் ஆகாஷ் அவர்களுடன் குடியத்துக்கு செல்கிறாரா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

மனநாசம் என்ற மருத்துவமனை யை காட்டி சிரிப்புடன் தொடங்கும் படம் அடுத்து அங்குள்ள டாக்டர் சிகரெட் புகைப்பதை மறக்க குழந்தைகள் சப்பும் ரப்பர் நிப்பிளை வாயில் வைத்து சப்பி செய்யும் கலாட்டாவோடு கலகலப்பு தனது ஜாகிங்கை தொடங்குகிறது.

காதல் தோல்வியில் மனதளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு சேரும் ஹீரோ ஆகாஷ் அங்கிருந்து தப்பி சென்று யாரையோ பழி வாங்கப் போகிறார் என்று பார்த்தால் நண்பர்கள் மூவரையும் மொட்டை மாடிக்கு நைசாக பேசி வரவழைத்து எல்லோரையும் அம்மணமாக்கி புலம்பவிடுவது நான் ஸ்டாப் அடல்ட் காமெடி. அந்த இடத்துக்கு நண்பர்களின் காதலி களை வரவழைப்பதும் அவர்கள் அம்மணமாக இருக்கும் காதலர் களை பார்த்து அடிக்கும் கமென்ட் களும் வயிற்றை பதம் பார்க்கிறது.
பெண்களையும் ஆடை கழற்றும்படி துப்பாக்கி முனையில் ஆகாஷ் மிரட்டுவது இளவட்டங்களை நிமிர வைக்கிறது.

ஆகாஷ் காதலியாக வரும் எனாக்‌ஷி பிளட்டானிக் காதல் (கூகுலில் தேடுங்கள்) செய்வோம் என்று கூறிவிட்டு கற்பனை காட்சிகளில் ஆடையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்து இளசுகளை பஞ்சர் ஆக்குகிறார்.

இவர்களின் லீலைகள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க சாம்ஸ் அடிக்கும் ஜோக்குகள் குபீர் சிரிப்பில் அரங்கை அலறவிடு  கிறது. அதேபோல் மைம் கோபி அடிக்கடி  கோபப்பட்டு  நொந்து கொள்வதும் தொடர் சிரிப்பு.
இதற்கு மேலேயும் படத்தில் என்ன இருக்கிறது என்று சொல்வதை விட பார்த்து தெரிந்துக்கொள் ளுங்கள் அதுவே உத்தமம்.

இயக்குனர் ஆர் கே வி எப்படித் தான் இப்படி யொரு கான்செப்ட்டை யோசித்தாரோ சிறுபிள்ளைத்தனமாக இருந் தாலும் ஏதோ ஒரு மெசேஜை நித்தியானந்தா சாமியார்போல் சொல்ல வேண்டு மென்று எண்ணியிருக்கிறார். ஆனாலும் இது விபரீத முயற்சி.

இ.மோகன் தயாரித்திருக்கிறார்.

இது அடெல்ட் காமெடி படமாக இருந்தாலும் முதன்முறையாக பெண்களை ஆடை அவிழ்க்காமல் ஆண்களின் ஆடையை உருவும் அடல்ட்டாக வந்திருக்கிறது. இப்படிப்பட்ட படத்தில் எல்லாம் இரட்டை அர்த்த வசன மன்னன் வெண்ணிற ஆடை மூர்த்தி மிஸ்ஸாகியிருப்பது பேரிழப்பு.

அம்மணமாக ஆதி தமிழர் வாழ்ந்த குடியம் இனி டூரிஸ்ட் ஸ்பாட்டாகி விடும்.

கடைசி காதல் கதை – கும்மாங்குத் துடன் நண்பர்களோடு பொழுதை கழிக்கலாம்.

Related posts

“Sirai” Producer Lalit Kumar’s New Film..

Jai Chandran

பரத நாட்டியம் ஆடியபடி ஓவியம் வரையும் மாணவி

Jai Chandran

இடிமுழக்கம்” படத்தில் வினித் சீனிவாசன் பாடல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend