Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பேய காணோம் (பட விமர்சனம்)

படம்: பேய காணோம்

நடிப்பு: செல்வ அன்பரசன், ஜாகுவார் தங்கம், மீரா மிதுன், கவுசிக், ராமசந்திரன், கோதண்டம், ஜாக்கப், வி.கே.சுந்தர், செல்வ குமார், ஜெய் சங்கர், ஆனந்த், துரை, ரவி, விக்கி

தயாரிப்பு: தேனி பாரத், சுருளிவேல்

இசை : மிஸ்டர் கோளாறு

பின்னணி இசை : காதர் மஸ்தான்

ஒளிப்பதிவு ராஜ் ஒ எஸ். கௌபாஸு, பிரகாஷ்

இயக்கம்:செல்வ அன்பரசன்

பி ஆர் ஒ: மணவை புவன்

குறும்பட இயக்குனர் த.க.தெ.ம.கி (செல்வ அன்பரசன்) முழுநீள திரைப்படம் எடுக்க பெரிய பட்ஜெட்டில் தயாரிப்பாளரிடம்  கதை சொல்கிறார் ஆனால் அந்த தயாரிப்பாளர் கதையை மட்டும் தரும்படி கேட்கிறார். இதனால் சின்ன பட்ஜெட் கதை ஒன்றை தயாரித்து அதை வேறு தயாரிப்பா ளரிடம் சொல்ல பேய் கதை என்பதால் இயக்குனர் வாய்ப்பு தர சம்மதிக்கிறார். ஸ்கிரிப்ட்டுடன் ஒரு மலைப்பகுதிக்கு வந்து ‌ஷீட்டிங் தொடங்குகிறார்கள். அங்குள்ள மர்ம பங்களாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடும்போது அங்கிருக்கும் பேய்  அவர்களுக்கு உதவ முன்வருகிறது. அதை இயக்குனர் ஏற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் பேய் மறைமுகமாக படப்பிடிப்புக்கு உதவி படத்தை முடிக்கிறது. அதை இயக்குனர் தக தெ ம ஹி ஏற்க மறுக்கிறார். கோபம் அடையும் பேய் , படமாக் கப்பட்ட முக்கிய காட்சிகளை அழித்து விட்டு காணாமல் செல்கிறது. இதனால் இயக்குனர் அதிர்ச்சி அடைகிறார். அடுத்து நடந்தது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

பேய காணோம் என்ற டைட்டிலே சிரிப்பையும் அதிர்ச்சியையும் தருவது போல் படமும் தருகிறது. டைட்டில் காட்டும்போதே ஒரு குறும்படத்தை ஓட்டி விடுகி றார்கள்.

செல்வ அன்பரசன் தயாரிப்பா ளரிடம் கதை சொல்லும்போது திடீரென்று பேய் கிராஸ் ஆவதும் அதைக்கண்டு அதிரும் தயாரிப் பாளர் கதையை கேட்காமலே ஒ கே சொல்வதும் கலகலப்பு.

ஷீட்டிங் ஸ்பாட்டில் மண்டை ஓடு காணாமல் போய்விட்டதாக கோதண்டம் சொல்ல அதே சமயம் இன்னொரு மண்டை ஓடு தண்ணீரில் மிதந்து வருவதை பார்க்கும்போது ஏதோ மந்திரித்து தூக்கி வீசிய மண்டை ஓடுபோல் அச்சம் படரவிடுகிறது.

பேயாக மீரா மிதுன் வருகிறார். பாட்டி கெட்டப்பில் அவருக்கு பேய் வேஷம்போட்டது ஏனோ? ஆனால் அதைப்பார்த்தே கோதண்டம் பியூட்டி என்று ஜொள்ளு விடும்போது கிரேஸி மோகன் பாணியில், “அட என்ன எழவுடா இது ” என கமென்ட் அடிக்க தோணு கிறது.

கோ டைரக்டராக வரும் கோதண்டம் கோ டைரக்டர்களை வெட்டியாக பொழுதை கழிப்பது போல் கிண்டலடித்து வம்பிழுத்தி ருக்கிறார்.

ஹீரோ கவுசிக் சண்டை காட்சி யிலும், நடன காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். மற்றபடி அவருக்கு வேறு வேலையில்லை.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார் தங்கம் ஸ்டன்ட் அமைக்கும் காட்சியில் நடித்து தான் ஒரு மாஸ்டர் என்பதை நிரூபிக்கிறார்.

செல்வ அன்பரசன் இயக்க வந்தாரா நடிக்க வந்தாரா என்று புரியவில்லை. ஹீரோவைவிட அதிக காட்சிகளில் இவர்தான் வருகிறார். பெரிய ஹீரோக்கள் டூப் போட்டு நடிப்பதை மொக்கை செய்திருக்கிறார். ஸ்கிரிப்ட்டை வழக்கமான பேய் கதையாக இல்லாமல் கொஞ்சம் மாற்றி யோசித்திருப்பதை பாராட்டலாம்.

இசை, கேமிரா எல்லாம் நார்மல்.

பேய காணோம் – சிரித்துவிட்டு வரலாம்.

Related posts

Pisasu2 Team Wishing KarthikRaja

Jai Chandran

குறும்பட போட்டி : பா. ஜ.க தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

Jai Chandran

மாமனிதனுக்கு மேற்கு வங்க தாகூர் பட விழாவில் 3 விருதுகள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend