Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் (பட விமர்சனம்)

படம்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நடிப்பு:வடிவேலு, ஆனந்தராஜ், ஷிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ராவ் ரமேஷ், வேல ராம மூர்த்தி, சச்சு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த், முனிஸ்காந்த், மாறன், சஞ்சனா சிங்

தயாரிப்பு: லைகா புரடக்‌ஷன்ஸ்  சுபாஷ்கரன்

இசை: சந்தோஷ்நாராயணன்

ஒளிப்பதிவு: விக்னேஷ் வாசு

இயக்கம்: சுராஜ்

பி ஆர் ஒ: யுவராஜ்

வேல ராமமூர்த்தி திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் பைரவர் கோவிலில் குடும்பத்  துடன் சென்று வேண்டுகிறார். அங்கு வரும் சாமியார் ஒருவர் அவர்களை ஆசிர்வதித்து அதிர்ஷ்டகார நாய்குட்டி ஒன்றை பரிசளித்து அதை வளர்க்கச் சொல்வதுடன் அதன் அதிர்ஷ் டத்தால் எல்லா கஷ்டமும் தீரும் என்கிறார். அந்த நாய் வந்தத திலிருந்து வேல ராமமூர்த்திக்கு அதிர்ஷ்டம் கொட்டுகிறது. குழந்தையும் பிறக்கிறது. நாயால் அதிர்ஷ்டம் வந்தது என்பதால் அதை கவனித்துக்கொள்ள வேலையாளை நியமிக்கிறார். அவரோ நாயை திருடிச் சென்று அதன்மூலம் பெரிய கோடீஸ்வரர் ஆகிறார். ஆனால் வேல ராம மூர்த்தி குடும்பம் மீண்டும் ஏழையாகிறது. வேல ராமமூர்த் தியின் குழந்தைதான் சேகர் (வடிவேல்). தாயும் தந்தையும் இறந்துவிட்ட நிலையில் சேகர் ஊரில் உள்ள பணக்கார வீட்டு நாய்களை கடத்தி அதை அவர்களி டமே விற்று பணம் சம்பதிக்கிறார். ஒரு கட்டத்தில் தன் தந்தை வளர்த்த நாயை திருடிச் சென்ற வனிடமிருந்து நாயை மீட்டு ஹைதராபாத் செல்கிறார். பலத்த செக்யூரிட்டியுடன் வைக்கப்பட்டி ருக்கும் அவரால் நாயை மீட்க முடிந்ததா என்பதை நகைச் சுவையுடன் சொல்கிறது கிளை மாக்ஸ்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். சீனுக்கு சீன் வடிவேலு வந்து காமெடி கலாட்டா செய்கிறார்.

ஜட்ஜ் வீட்டு நாயை கடத்திய வடிவேலு அது தன்னை கடித்ததால் தானும் நாயை கடித்த தாக கூறுவது, தெரு நாயை கடத்தி வந்து தள்ளுவண்டிக்காரரிடம் பேரம் பேசி வாங்கி கட்டிக்கொள்  வது காமெடி சரம்.

நாய் கடத்தும் வேலையை செய்யும் வடிவேலுவை இன்னும் கூட காமெடி காட்சிகளில் நடிக்க வைத்து வெளுத்துக்கட்ட வைத்திருக்கலாம.அத்துடன் சில இடத்திலாவது வடிவேலுக்கு பழைய நாய் சேகர் கெட்டப் போட்டிருந்தால் கூடுதல் பிளஸாகியிருக்கும்.

ஹீரோ என்ற தோரணையிலேயே வடிவேலுவை கையாண்டிருப்ப. தால் கைப்புள்ள, கட்டதுரை, ஏன்? நாய் சேகர் வடிவேலுவை கூட மிஸ் செய்திருக்கிறார் இயக்குனர்

ஐதராபாத் அரண்மனையில் மின்சார செக்யூரிட்டி அறைக்குள் நாயை ராவ் ரமேஷ் பாதுகாப்பாக வைத்திருப்பது அதற்கு பணி விடை செய்ய கவர்ச்சி அழகிகளை நியமித்திருப்பது என ஒரு வில்லன் ரகசிய அறைபோல் பில்டப் செய்திருப்பது சிரிப்பு மழை.

10 கோடி பணம் கடத்தியதாக ஆனந்தராஜிடம் சிக்கிக் கொள்ளும் வடிவேலு செய்யும் அலப்பறைகள் கலகல. பல இடங்களில ஆனந்தராஜ் அடிக்கும் கமென்ட்டுக்கள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது.

ஹைதராபாத். அரண்மனையில் கண் தெரியாதவராக நடிக்கும் வடிவேலுவை மாட்டி விட பூச்சி முருகன் அவரை உயரத்திலிருந்து தண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் டைவ் அடிக்கச் சொல்வது சிரிப்பு. குதிப்பாரா மாட்டாரா என்று பரபரப்பு ஏற்பட அடுத்து வடிவேலு எடுக்கும் முடிவு எலும்பு நொறுங்கும் காமெடி.

வடிவேலுவை சுற்றி ஒரு பெரும் நகைச்சுவை கூட்டம் எப்போதும் வலம் வந்து அந்த முகங்களில் ஒன்று கூட அவரை சுற்றி இல்லாதது மைனஸ் ஆனால் அந்த இடத்தை ரெடின் கிங்ஸ்லி பிடித்திருக்கிறார். வழக்கம்போல் கத்தி கத்தி கூச்சலிடுகிறார் ரெடின்.

ஹைதராபாத் செல்லும் முனிஸ் காந்த காரில் புறப்பட்டு கடைசியில் குப்பை வண்டியில் போவதும் அதுவும் இல்லாமல் பரதேசி போல் பனியன் கிழிந்த நிலையில் நடந்து செல்வதும் பொங்கு சிரிப்பு.

தாராளமாக பணத்தை அள்ளி இறைத்திருக்கிறார் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஷ்கரன்.

சந்தோஷ் நாராயணனுக்கு என்ன ஆச்சு வடிவேலுவின் தீவிர ரசிகர் என்கிறார் வடிவேலுக்கு ஏற்ற இசையை கையாளாமல் ஆர்வமிகுதியில் முழுக்க மேற்கத்திய இசையில் பாடல்கள் அமைத்திருக்கிறார்.

நாய் சேகர்- ஓவர் எதுர்பார்ப் பில்லாமல் சென்றால் குடும்பத்துடன்  ரசித்துவிட்டு வரலாம்.

 

 

 

Related posts

தனுஷ் தான் “ஜகமே தந்திரம்” பாடல்களுக்கு மிகப்பெரும் உந்துதல் – சந்தோஷ் நாரயணன்

Jai Chandran

தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது: கமல்ஹாசன்

Jai Chandran

சூர்யா தயாரிக்கும் படத்தில் அருண்விஜய் ஹீரோ..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend