படம்: விஜயானந்த்
நடிப்பு: நிஹல், ஸ்ரீபிரஹலாத், ஆனந்த்நாக், வினயா பிரசாத், பரத் போபன்னா, அர்ச்சனா கொட்டிகி
தயாரிப்பு: வி ஆர் எல் புரடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர்
இசை: கோபி சுந்தர்
ஒளிப்பதிவு: கீர்த்தன் பூஜாரி
இயக்கம்: ரிஷிகா சர்மா
பி ஆர் ஒ: யுவராஜ் ( தமிழ்)
பிரின்டிங் பிரஸ் நடத்தும் நடுத்தர குடும்பத்தில் பிறக்கிறார் விஜய் சங்கேஸ்வர். தந்தைக்கு உதவியாக இருக்கும் விஜய் ஒரு கட்டத்தில் டிரான்ஸ்போர்ட் பிஸ்னஸ் நடத்த எண்ணுகிறார். லோன் வாங்கி டிரக் ஒன்றை வாங்குகிறார். மார்க் கெட்டில் அந்த டிரக்கில் லோட் ஏற்ற முயலும் போது அங்குள்ள இரண்டு டிராக் தாதாக்கள் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் அவரை விரட்டியடிக் கின்றனர். ஒருகட்டத்தில் அவர்களை எதிர்த்து மோதும் விஜய் மார்க் கெட்டில் தனக்கென ஒரு இடம் பிடிக்கிறார். கூடுதல் டிரக்குகள் வாங்கி பிஸ்னஸை மேம்படுத்துகிறார். பின்னர் பத்திரிகை துறையில் அடியெடுத்து வைத்து நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த பத்திரிகையை விற்கி றார். 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதுபத்திரிகை ஆரம்பிக் கிறார். அதன்பிறகு நடப்பது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.
கர்நாடகாவில் வாழும் தொழிலதிபர் விஜய் சங்கேஸ்வர் நிஜ வாழ்க்கையை மைய மாக வைத்து உருவாகி யிருக்கிறது விஜயா னந்த்.
விஜய் சங்கேஸ்வர் வேடத்துக்கு கனக்கச்சித மாக பொருந்தியிருக் கிறார் நிஹல்.
நிஹல் நடிப்பில் உள்ள அமைதியும் உயிர் துடிப்பும் கதாபாத்திரத் தை கடைசிவரை கண்ணியம் குறையா மல் பார்த்துக்கொள் கிறது
அச்சடித்த புத்தக கட்டை கையில் சுமந்து கொண்டு அதை கடையில்போட்டு விற்க அவர் சேட்டுவிடம் கெஞ்சுவதும் பின்னர் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருககும் கணவன் மனைவி சண்டையில் தலையிட்டு சமையல் குறிப்பு புத்தகத்தை விற்க பிறகு அந்த புத்தகம் சேட்டு கடையில் பீய்த்து கொண்டு விற்பனை யாவது சரியான விடாபார யுக்தி பார்முளா.
நிஹல் டிரக் வாங்கிய பிறகுதான் மெயின் கதையே தொடங்கு கிறது. மார்க்கெட் தாதாக்கள் நிஹல்லின் டிரக்கில் லோடு ஏற்ற விடாமல் தடுப்பதும் ஒரு கட்டத்தில் கோபத்தில் பொங்கும் நிஹல் மார்க்கெட் தாதாக்களை நய்ய புடைக்கும்போது விறுவிறுப்பு படர்கிறது.
பத்திரிகையில் தன்னைப்பற்றி தவாறாக எழுதுவதை கண்டு தானே சொந்த மாக பத்திரிகை தொடங்கும் நிஹல் அதில் சாதனை நிகழ்த் துவது நிறைவு. ஒரு கட்டத்தில் அந்த பத்திரிகையை வேறு நிறுவனத்துக்கு விற்பது மிரட்டலுக்கு பயந்தா, பணத்துக்காகாவா என்பது சரிவர சொல்லப்படவில்லை.
நிஹல் மகன் ஆனந்த் சங்கேஸ்வரராக வரும் பரத்போபண்ணா இளமை துடிப்புடன் இருந்தாலும் நிதானம் தவறாமல் நடித்து பாத்திரத்துக்கு மெருகேற்றுகிறார்.
பத்திரிகைக்கை பெயர் வைக்கும் உரிமையை வாங்க கிராமத்து பெரியவரிடம் அவர் அணுகும் முறையில் அனுபவ முதிர்ச்சி வெளிப்படுத்துகிறார்.
வாழ்க்கை சரித்திர படமென்பதால் இதில் கமர்ஷியல் அம்சங் களுக்கு இடமில்லை என்பதை தெளிவாகவே இயக்குனர் ரிஷிகா சர்மா புரிந்துகொண்டு மார்க்கெட் காட்சிகளில் வரும் மோதல் காட்சி களையே கமர்ஷியல் அம்சமாக மாற்றியி ருப்பது புத்திசாலித் தனம்.
வி ஆர் எல் புரடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் ஆனந்த் சங்கேஸ்வர் தயாடரித் திருக்கிறார்.
கோபி சுந்தர் இசை காட்சிகளை உயர்த்தி பிடிக்கிறது
கீர்த்தன் பூஜாரி 50 காலகட்டங்கள் தொடங்கி இன்றைய காலகட்டம் வரைக்கும் வித்தியாசம் தெரியும் வகையில் மாறுபட்ட கலர்டோன்களில் காட்சிகளை படமாகியி ருக்கிறார்.
விஜயானந்த்
– வாழ்வில் சாதிக்க எண்ணுபவர்களுக்கு இன்ஸ்பிரேஷன்.

