Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

டி எஸ் பி (பட விமர்சனம்)

படம்: டி எஸ் பி

நடிப்பு: விஜய்சேதுபதி, அனுகீர்த்தி வாஸ், பிரபாகர், இளவரசு, புகழ்,  சிங்கம்புலி தீபா, ஞானசம்பந்தம், ஆதிரா பாண்டிலட்சுமி, செந்தில், டி.எம்.கார்த்திக், ஷிவானி, விசாலினி, சாயாதேவி, லிங்கா, கஜராஜ், ரகு ஆதித்யா, அனிஷ் குருவிலா,  ஜார்ஜ் மரியம், வசவதத்தா

தயாரிப்பு: ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம்,

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு : வெங்கடேஷ்,எஸ். தினேஷ்கிருஷ்ணன்.பி.

இயக்கம்: பொன்ராம்

பி ஆர் ஒ: நிகில் முருகன்

திண்டுக்கல்லுக்கு பிழைக்க வரும் ரவி ( பிரபாகர்) முட்டை கடை வைக்கறான்.. அதற்கு உள்ளூர் கடைக்காரர் எதிர்ப்பு தெரிவிக்கி றார். அவர் மீது ஆசிட் முட்டை அடித்து கொலை செய்யும் ரவி  பெரிய ரவுடியாகிறான். அதே ஊரில் பூமார்க்கெட்டில் கடை நடத்துபவரின் மகன் வாஸ்கோட காமா (விஜய்சேதுபதி) தன் தங்கைக்கு வரன் பார்த்துவரு கிறான். தங்கைக்கு திருமணம் நடக்கும் நிலையில் வாஸ்கோட. காமாவின் நண்பர்கள் பங்கேற்க வருகின்றனர். அவர்களுக்கும் முட்டை ரவி ரவுடி கோஷ்டிக்கும் மோதல் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் வரும் வாஸ்கோடகாமா முட்டை ரவியை அடித்து தூக்கி வீசி நண்பர்களை காப்பாற்றுகிறான். தன்னை தாக்கிய வாஸ்கோடகா மாவை கொல்ல முடிவு செய்கி றான் ரவுடி முட்டை ரவி. இந்நிலை யில் வாஸ்கோடகாமா போலீஸ் டி எஸ் பி ஆக, முட்டை ரவியும் அரசிய லில் குதித்து எம் எல் ஏ ஆகிறான். இவர்கள் இருவருக்கும் நடக்கும் மோதலில் ஜெயிப்பது யார் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற காமெடி கலந்த காதல் படங்களை இயக்கிய பொன்ராம் டி எஸ் பி படத்தில் கூடுதலாக ஆக்‌ஷனும் கலந்து கமர்ஷியல் படத்தை தந்துள்ளார்.

டைட்டில் ரோலில் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த சேதுபதி பட பாத்திரம் போல் சீரியஸான போலீஸாக இல்லாமல் முழுக்க காமெடி, ரொமான்ஸ் கலந்த கமர்ஷியல் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹீரோயின் அனுகீர்த்தி வாசுடன் அடிக்கடி வம்பு வளர்க்கும் விஜய் சேதுபதி அப்படியே காதலும் வளர்க்கிறார்.
அனுவின் மிட்டாய் கடைக்கு சென்று அவரை சீண்டுவது, நண்பர்களுடன் சேர்ந்து தண்ணியடித்து பொழுது போக்குவது என ஜாலிபதியாக வலம் வரும் விஜய்சேதுபதி எப்போது ரவுடி முட்டை ரவியுடன் மோதப்போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது.

நண்பர்களை அடிக்கும் ரவுடி ரவியை நடுரோட்டில் விஜய் சேதுபதி அடித்து துவம்சம் செய்வது ஆரவாரம் அதேபோல் கிளைமாக்ஸ் காட்சியிலும் ரவுடியுடன் பயங்கரமாக மோதி வெளுக்கிறார் விஜய்சேதுபதி.

நடன காட்சிகளில் மற்றவர்களை ஆட விட்டு ரசித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

வில்லன் பிரபாகர் ஆஜானபாகு தோற் றத்தில் பயமுறுத்துகிறார்.

அனுகீர்த்தி துடுக்காக நடித்திருக் கிறார். கெஸ்ட் ரோலில் விமல் வரவு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. மாப்பிள்ளை விநாயகமாக வந்து துள்ளலாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.

சிங்கம்புலி, தீபா போன்றவர்கள் சிரிக்க முயற்சிக்கின்றனர்.

வழக்கமான பழிவாங் கும் கதை  யென்றாலும் மாறுபட்ட திரைக் கதை மூலம் புதுவடிவம் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் பொன்ராம். வில்லன் பாத்திரம் வலுவாக அமைக்கப்பட்டிருக் கிறது ஹீரோ பாத்திரத்தில் சீரியஸ்னஸ் குறைத்திருப்பது மைனஸ்.

டி.இமான் இசையில் நல்லாயி ரும்மா ரொம்ப நல்லாயிரும்மா பாடல் முணுமுணுக்க வைக்கிறது.

வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு நார்மல்.

ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்தி கேயன் சந்தானம் தயாரித்திருக் கிறார்.

டி எஸ் பி – விஜய்சேதுபதியின் கமர்ஷியல் கலாட்டா.

Related posts

AVM Productions forays into OTT with Tamil Stalkers  partners with SonyLIV for the thriller

Jai Chandran

சுழல்—தி வோர்டெக்ஸ் 2வது சீசன் பிப் 28 வெளியீடு

Jai Chandran

விஜய்சேதுபதிக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend