Trending Cinemas Now
தமிழ் செய்திகள் விமர்சனம்

வதந்தி தி ஃபேபிள் ஆப் வெலோனி (வெப் சீரிஸ் விமர்சனம்)

வெப் சீரிஸ்: வதந்தி தி ஃபேபிள் ஆப் வெலோனி

நடிப்பு: எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா, விவேக் பிரசன்னா, ஸ்ம்ருதி வெங்கட் , குமரன் தங்கராஜ் மற்றும் பலர்

தயாரிப்பு: வால்வாட்சர் ஃபிலிம்ஸ் புஷ்கர் காயத்ரி

ஒளிப்பதிவு : சரவணசன் ராமசாமி

இசை: சைமன் கே கிங்

இயக்கம்: ஆண்ட்ரூ லூயிஸ்

ரிலீஸ்: அமேசான் பிரைம் வீடியோ

பி ஆர் ஒ: யுவராஜ்

வதந்தி தி ஃபேபிள் ஆப் வெலோனி கதை:
கன்னியாகுமரி பகுதியில் ஷூட்டிங் நடத்தச் செல்லும் படக் குழு வெட்ட வெளியில் இருக்கும் ஒரு டம்மி பொம்மையை பார்த்து தத்ரூபமாக இருப்பதாக பாராட்டு கின்றனர். ஆனால் பட ஷூட்டிங் கிற்காக இன்னும் டம்மியே வரவில்லை என்று மற்றவர்கள் கூற அதிர்கின்றனர். முதலில் பார்த்தது டம்மி அல்ல அது பட ஹீரோயினின் பிணம் என்கின் றனர். இதனால் மேலும் அதிர்ச்சி பரவுகிறது. செய்தி தீயாக பரவ இயக்குனருக்கு ஒரு போன் வருகிறது. அதில் பேசும் ஹீரோயின், “நான் உயிருடன் இருக்கும்போது என்னை எப்படி இறந்துவிட்டதாக கூறலாம்” என மல்லுக்கு நிற்க இயக்குனர் அதிர்கிறார். அப்படியென்றால் பிணமாக இருப்பது யார் என்ற பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. இதில் விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா களம் இறங்குகிறார். கொல்லப்பட்டது இளம் பெண் வெலோனி (சஞ்சனா) என தெரிய வருகிறது. கொலைகாரனை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடக்கிறது. வெலோனி யை கொன்றது யார் என்பது தெரிய வரும் போது அதிர்ச்சியில் உறைகிறது மனம்.

எட்டு எபிசோட்கள் கொண்ட சீரிஸாக உருவாகியிருக்கும் வதந்தி வெப் தொடருக் காகவே உருவாக்கப்ன பட்டிருக்கும் ஸ்கிரிப்ட்.

சினிமாவில் மட்டும் நடித்து வந்த எஸ்.ஜே. சூர்யா இத்தொடர் மூலம் வெப் சீரிஸில் முதன்முறையாக நடித்தி ருக்கிறார். எவ்வளவு நாள் கால்ஷீட் கொடுத் தார் என்று தெரியவில்லை தொடர் முழுவதும் வருகிறார்.

வெப் சீரிஸ் தானே என்று அசால்டாக இருந்து விடாமல் ரொம்பவே சீரியஸாக தன் பாத் திரத்தில் நடித்து மிரட்டியிருக் கிறார்.

வெலோனி கொலையாளிகளை நெருங்கி விட்டதாக எண்ணும் ஒவ்வொரு முறையும் அது வேறு திசையில் முடிவதை கண்டு எஸ்.ஜே.சூர்யா ஏமாற்றம் அடை வதும் வேறு யார்தான் வெலோனி யை கொலை செய்திருப்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கிறது. இவர்தான் கொலை காரன் என்று கண்டுபிடிக்க முடியாத ளவுக்கு டிவிஸ்ட்டுக்கு மேல் டிவிஸ்ட் . ஒரு கட்டத்தில், “நீங்களே அந்த கொலைகாரன் யார் என்பதை சொல் கங்கப்பா” என்று முணுமுணுக்க வைத்து விடுகின்றனர்.

கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் நாட்கள் கடந்து செல்லும் நிலையில் குடும்பத்தில் மனைவி குழந்தையை கூட கவனிக்க முடியாமல் எந்நேரமும் மெலொனி கேஸ் ஞாபகத்தில் உழலும் எஸ்.ஜே சூர்யா, போலீஸ் காரர்களின் மனநிலையை வெளிப்படுத்தி அப்ளாஸ் பெறுகிறார்.

ஒரு கொலை வழக்கில் இவ்வளவு சின்சியராக இன்னும் சொல்லப் போனால் மேலதிகாரிகளே கேஸை அவசர மாக முடித்தபிறகு அதையும் மீறி விடாப் பிடியாக விசாரணையை எஸ் ஜே சூர்யா தொடரும்போது விடாகண்டனாகி விடுகிறார்.

இவரையடுத்து நடிப்பில் சக்கை போடுபோட்டிருக்கிறார்கள் லைலாவும் அவரது மகள் வெலோனியாக நடித்திருக்கும் புதுமுகம் சஞ்சனாவும்.

கன்னியாகுமரியில் லாட்ஜ் நடத்தும் லைலா தனது வழக்க மான காமெடி இமேஜை சுக்கு நூறாக உடைத்தி ருக்கிறார். மகள் பாய்பிரண்டுகளுடன் சுற்றுவதை யறிந்து அவரை கண்டிக்கும் ஒவ்வொருமுறையும் மகள் மீதான அக்கறையை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார்.

லைலாவுக்கும், சஞ்சனாவுக்கும் இடையிலான டயாக் பெரும் பாலும் ஆங்கிலத்திலேயே இருந்தாலும் அதை எளிமையாக வும் சரளமாகவும் புரியவைத் திருப்பது பிளஸ். இதுதான் அவர்களை ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தோடு ஒன்றவைக் கிறது.

வெலோனியாக அழகு பொங்கும் இளமையுடன் வரும் சஞ்சனா புதுமுகம் என்ற தோற்றத்தை எந்தநிலையிலும் வெளிபடுத்தி விடாமல் தேர்ந்த நடிப்பை வழங்கி யிருக்கிறார்.

அப்பாவித்தனமான நடிப்பையும் , சில சமயம் மெச்சூர்டான நடிப்பை யும் வழங்கி மனதில் இடம் பிடிக்கிறார் சஞ்சனா.

எழுத்தாளராக வரும் நாசர், எஸ்.ஜே. சூர்யாவுடன் வரும் போலீஸ்காரர் விவேக் பிரசன்னா
முக்கிய இடத்தை பிடிக்கின்றனர்.

எட்டு எபிசோட் நிறைவு செய்ய வேண்டும் என்தற்காக சில காட்சிகள் ஜவ்வாக இழுப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் சீக்கிரம் முடிங்கப்பா என்று புலம்ப வைத்துவிடுகிறது.

சரவணன் ராமசாமி காட்சிகளை மிகைப்படுத்தாமல் எதார்த்த ஒளியில் படமாக்கியிருக்கி றார்கள்.

சைமன் கே கிங் இசை த்ரில் காட்சிகளை திகில் காட்சிகளாகி பரபரப்பை தக்க வைக்கிறது.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கம் திருப்பதி மலை ரோடு போல் எங்கெங்கோ வளைந்து நெளிந்து சென்றாலும் கிளைமாக்ஸ் கடைசி சீன் வரை சஸ்பென்ஸை தக்க வைக்கிறது.

அமேசான் பிரைம் வீடியோவில் வதந்து வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகியுள்ளது.

வதந்தி தி ஃபேபிள் ஆப் வெலோனி – சஸ்பென்ஸ் த்ரில்லர்.

Related posts

அவனே ஸ்ரீமன் நாராயணா (பட விமர்சனம்)

CCCinema

‘கலைஞர் நகர்’ படத்தில் அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா

Jai Chandran

Mahesh Babu, Trivikram Joining Togeather Again

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend