Trending Cinemas Now
அரசியல் ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள்

ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் வேண்டும்: கமல் கட்சி கோரிக்கை

ஆதாரை இணைக்காவிடில் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலையைக் கைவிடுக. அதேசமயம் ஆதாரை இணைக்க 3 மாத கால அவகாசம் தரப்படவேண்டும். என்று  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துமா நில செயலாளர் .செந்தில் ஆறுமுகம் அறிக்கை.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற முடிவை தமிழக மின்சார வாரியம் அறிவித்திருந்தது. இதைச் செயல்படுத்துவதில் பொதுமக்களுக்கு குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப் போருக்கு ஏராளமான பிரச்னைகள் எழுந்துள்ளன. ஆதாரை இணைக்காமல் மின்கட்டணம் செலுத்தமுடியாது என்ற நிலை வந்துவிட்டதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படு கின்றனர். சில மாவட்டங்களில் மின்வாரிய அலுவலகங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மின்வாரிய ஊழியர்களுக்கும் இந்த நடவடிக்கையானது பணிச் சுமையை அதிகரித்துள்ளது.

அரசாங்கம் புதியதொரு நிர்வாக சீர்திருத்தம் கொண்டுவரும்போது, மக்களுக்கு அலைச்சல் இல்லாத வகையில் பொறுமையாக அதனைச் செயல்படுத்தவேண்டும். இல்லையேல், இத்திட்டத்தின் மீது எரிச்சலும், எதிர்மறை உணர்வும் தான் உருவாகும். அது அரசின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.

ஆகவே, ஆதாரை இணைத் தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற தற்போதைய நிலையை ரத்து செய்து, ஆதாரை இணைக்காமல் பழையபடியே கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்படவேண்டும்.

மேலும், பொதுமக்களுக்கு 3 மாத கால அவகாசம் கொடுத்து ஆதாரை இணைக்க எளிய வழிமுறைகளை மின்சார வாரியம் செய்துதரவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. ஆதாரை இணைப்பதில் ஏற்படும் தொழில்நுட்பப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக மின்கட்டணம் செலுத்தத் தாமத மாகும் பட்சத்தில் அதற்கு அபராதம் விதிக்கப்படாது என்ற அறிவிப் பையும் தமிழக மின்சாரவாரியம் வெளியிடவேண்டும்.

இவ்வாறு செந்தில் ஆறுமுகம் கூறியுள்ளார்.

Related posts

கௌரவர்கள் பக்கம் நிற்கும் கிருஷ்ணன் ! “சுல்தான்”  கதை இதுதான்

Jai Chandran

“முருங்கைக்காய் சிப்ஸ்” இசை வெளியீட்டு விழாவில் கே. பாக்யராஜ் பேச்சு

Jai Chandran

ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் அயோத்தி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend