Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஏஜென்ட் கண்ணாயிரம் (பட விமர்சனம்)

படம்: ஏஜென்ட் கண்ணாயிரம்

நடிப்பு: சந்தானம், ரியா சுமன், புகழ், ரெடின் கிங்க்ஸ்லி, முனிஸ் காந்த், ஈ.ராமதாஸ், இந்துமதி, சோமசுந்தரம்

தயாரிப்பு: லேபிரின்த் பிலிம்ஸ்

இசை: யுவன்சங்கர்ராஜா

ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி

இயக்கம்: மனோஜ் பீதா

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா, நாசர், ரேகா (D’one)

பண்ணையாரின் (குரு  சோமன் சுந்தரம்)  தாலி கட்ட.டாத மனைவி யின் மகன் கண்ணாயிரம் (சந்தானம்).  இவரொரு டிடெக்டிவ்.  .தாய் இறந்த நிலையில் வெளியூரி லி ருக்கும் கண்ணாயிரம்  ஊர் திரும்புவதற்குள்  அவசரமாக தாயின் உடலை எடுத்து விடுகின் றனர். கண்ணாயிரத்துக்கு பண்ணையார் சொத்தில் பங்கு கிடையாது என்று ஊர் பெரிய வர்கள் சொல்ல எல்லாவற்றையும் எழுதி  கொடுத்துவிட்டு தனியாக வாழ்கிறார். சிறுசிறு புகார்களை கண்டுபிடிக்கும் கண்ணாயிரத்  துக்கு பெரிய புகார் ஒன்று துப்பறிய வாய்ப்பு கிடைக்கிறது. ஊரில் உள்ள ரெயில் தண்ட வாளம் அருகே அடிக்கடி  அடையாளம் தெரியாத பிணங்கள்  இருப்பதை கண்டு அதுpaற்றி துப்பறிகிறார். இதற்கிடையில் கண்ணாயிரம் மீதே போலீஸ்  கொலைப்பழி சுமத்தி சிறையில்   அடைக்கிறது. ஜாமினில் வெளியே வரும்  அவர் மீண்டும் அனாதை பிணங்கள் பற்றி துப்பறிகிறார்.  அதில்   அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கிறது.  இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு படம் பதில் சொல்கிறது.

சி ஐ டி  சங்கர் ஜெய்சங்கர்போல் டிடெக்டிவ் வேடத்தில் சந்தானத்தை பார்க்கப்போகிறோம் என்ற   ஆவலுடன்  படத்தை பார்க்க  அமர்ந்தால் காட்சிகள் நகர நகர நெளிய வைக்கிறது

வழக்கமான நக்கல் நய்யாண்டி செய்யும் சந்தானத்தை சுத்தமாக மறந்துவிட வேண்டி உள்ளது.  எதற்கெடுத்தாலும் கவுன்ட்டர் கொடுத்து கலகலக்க வைக்கும் சந்தானம் இதில் பல காட்சிகளில் டைரக்டரின் கட்டுப்பாட்டால் சைலன்ட்டாகியிருக்கிறார். இது படத்துக்கு மட்டுமல்ல சந்தானத் துக்கே பெரிய   இழப்புதான்.
தப்பித் தவறி ஒருசில இடங்களில் மட்டும் சந்தானத்தின் கவுன்ட்டர் வெளிப்படுவது கொஞ்சம்  ஆறுதல்.

ஹீரோயினாக ரியா சுமன் நடித்திருக்கிறார்.   இவருக்கும் பெரிதாக வேலை எதுவும்  இல்லை. ஒன்றுக்கு இரண்டு முறை சந்தானத்தை ஜாமீனில் எடுக்கிறார்.

சந்தானத்துடன் வரும் புகழ்  காமெடி பஞ்ச்  பேசி சிரிக்க வைக்க முயல்கிறார். இன்ஸ்பெக் டரிடம்  ஐ  டி கார்ர்ட் கேட்டு கன்னத்தில் பளார்  அறை வாங்கும்போது குபீர் சிரிப்பை வரவழைக்கிறார். ரெடின் கிங்க்ஸ்லி  வழக்கம்போல் சத்தமாக பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார்.

லேபிரின்த் பிலிம்ஸ் தயாரித்திருக் கிறது.

யுவன் சங்கர் ராஜா இசை பரவாயில்லை ரகம்.

தேனி ஈஸ்வர், சரவணன் ராமசாமி  என இருவர் பனியாற்றியும் காட்சி கள் பெருபம் பாலும்  இருளில் மூழ்கியிருக் கிறது.

எட்டிட்யிங் குறைபாடும் சேர்ந்து கதையை புரிய விடாமல் சதி செய்கிறது.

அதீத தன்னம்ம்பிக்கை இயக்குனர் மனோஜ் பீதாவுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கிறது

ஏஜென்ட் கண்ணாயிராம் – ஏமாற்றம்.

Two And A Half Star Rating Illustration Vector

Related posts

ஹாலிவுட் பாணியில் ‘சக்ரா’ டெஸ்ட் ப்ரிவியூ.. விஷால் ஏற்பாடு

Jai Chandran

சிம்புவின் மாநாடு தீபாவளி ரிலீஸ்

Jai Chandran

சிவாஜி.-ரஜினி-கமல் பட எடிட்டர் ஆர்.விட்டல் காலமானார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend