Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பட்டத்து அரசன் ( பட விமர்சனம்)

படம்: பட்டத்து அரசன்

நடிப்பு: அதர்வா ராஜ்கிரண், ஜெயப்பிர காஷ், சிங்கம்புலி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா, ராஜ் அய்யப்பன், துரை சரவணன், ஜி.எம்.குமார், பால சரவணன், ரவிகாள

தயாரிப்பு: லைகா புரடக்‌ஷன்

இசை: ஜிப்ரான்

ஒளிப்பதிவு : லோகநாதன், ஸ்ரீனிவாசன்

இயக்கம்: ஏ.சற்குணம்

பி.ஆர்.ஒ: சுரேஷ் சந்திரா, நாசர், ரேகா (D’one)

ஊருக்காக கபடி ஆடி பெயர் வாங்கித்தந்தவர் பொத்தாரி (ராஜ்கிரண்) அதற்காக ஊரே அவரை மதிப்பதுடன் ஊர் நடுவே சிலையும் வைக்கிறது. பொத் தாரிக்கு வயதானதால் கபடியி லிருந்து விலகுகிறார். அவரது பேரன்கள் சின்னத்துரை ( அதர்வா), செல்லய்யா (ராஜ் அய்யப்பன்) . செல்லையா சிறுவயது முதல் தாத்தா பயிற்சி யில் சிறந்த கபடி வீரனாக இருக்கி றான். சின்னத்துரை குடும்ப பிரச்னை காரணமாக தாயுடன் ஒதுங்கி வாழ்கி றான். செல்லை யாவுக்கு தமிழ் தலைவாஸ்  கபடி குழுவில் இணைந்து ஆட அழைப்பு வருகிறது. இதையறிந்து அவரது நண்பன் பொறாமை அடைகிறான். செல்லையா தமிழ் தலைவாசில் தேர்வாகாமல் இருக்க என்னென்ன கெடுதல் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கி றான். இதனால் மனம் உடையும் செல்லையா தற்கொலை செய்து கொள்கிறான். இதற்கிடையில் உள்ளூர் அணி தோற்றுப்போகி றது. ஊர் பெயரை கெடுத்தாக கூறி பொத்தாரி குடும்பத்தினர் யாரும் கபடி ஆடக் கூடாது என்று ஊர் பஞ்சாயத்து தடை விதிக் கிறது. அதைக் கேட்டு கோபம் அடையும் சின்னத்துரை தங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க சொந்த ஊரையே எதிர்த்து பொத்தாரி குடும்பத்துடன் கபடி ஆடி ஊரை ஜெயித்து காட்டுவதாக சவால்விடு கிறான். அதை ஊரே ஏற்கிறது. இந்த போட்டியில் ஜெயித்தது யார் என்ப தற்கு கிளைமாக்ஸ் விறுவிறுப்பாக பதில் சொல்கிறது.

கபடி போட்டியை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந் தாலும் இப்படம் ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உணர்ச்சிகரமாக உருவாகியி ருக்கிறது.

அதர்வா தொடக்க காட்சிகளில் வெற்றிலை பறித்து விற்கும் வேலை செய்வதும், ஹீரோயின் ஆஷிகா ரங்கநாத்துடன் காதல் விளையாட்டு விளையடுவதுமாக பொழுதை கழிக்கிறார்.

தன் தம்பியை எதிர் கபடி குழ்வினர் தாக்கியதை கண்டதும் அவர்களை அடித்து பறக்கவிடும் போது ஆக்‌ஷனில் அசத்துகிறார் அதர்வா.

அதர்வாவை கண்டதுமே எரிந்து விழும் சித்தப்பா ஜெயப்பிரகாஷ் சண்டை கோழியாக விடைத்துக் கொண்டு நிற்கிறார்.
ஊருக்காக கபடி போட்டியில் ஜெயித்து பெருமை சேர்க்கும் பொத்தாரி பாத்திரத்தில் ராஜ் கிரண் பிரகாசிக்கிறார். கபடி ஆட்டக் களத்தில் இறங்கியதும் ஒரிஜினல் கபடி வீரர்போல் பாய்கிறார்.

ஊரே ராஜ்கிரண் குடும்பத்துக்கு எதிராக மாறும் பஞ்சாயத்து காட்சி அரங்கை நிசப்த்தமாக்குகிறது.
அதர்வாவின் தாயாக வரும் ராதிகா, மகன் கிணற்றில் குதித்ததை பார்த்ததும் கதறும் போது படபடக்க வைக்கிறார்.

ஊர் பக்கம் சார்பில் இளைஞர்கள் துடிப்புடன் நிற்க மறுபக்கம் ராஜ் கிரண் குடும்பத்தை அதர்வா உள்ளிட்ட இரண்டு பேர் தவிர எல்லாமே வயதானவர்களாக போட்டிக்கு மோத நிற்பது கிளை மாக்ஸை மாஸ் காட்சியாக்குகிறது.

கதாநாயகி ஆஷிகா ரங்கநாத் இயக்குனர் சொன்னதை செய்தி ருக்கிறார்.

படத்தை லைகா புரடக்‌ஷன் தயாரித்திருக்கிறது.

ஜிப்ரான் இசை காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

லோக நாதன், ஸ்ரீனி வாசன் பளிச்சென ஒளிப்பதிவு செய் துள்ளார்.

இயக்குனர் ஏ.சற்குணம் ஆக்‌ஷ. னுக்கு கபடியையும் சென்ட்டி மென்ட் டுக்கு குடும்ப கதையையும் குழைத்து தந்திருக்கிறார்.

பட்டத்து அரசன் – கிரீடம் சூடுவான்

.

Related posts

Hiphop Adhi has made a documentary titled ‘Thee Veeran’,

Jai Chandran

கமல் ரசிகர்கள் 4 லட்சம் யூனிட் ரத்த தானம்.. 40 வருட சாதனை..

Jai Chandran

டியர் ரதி (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend