Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

காரி (பட விமர்சனம்)

படம்: காரி
நடிப்பு: சசிகுமார், பார்வதி அருண், நரேன், நாகிநீடு, ஜெ. டி.சக்ரவர்த்தி, ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி, பிரேம்

தயாரிப்பு: பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன்குமார்

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு :கணேஷ் சந்திரா

இயக்கம்: ஹேமந்த்

பி ஆர் ஓ:  ஏ.ஜான்

காரியூருக்கும், சிவேனந்தல் கிராமத்தினருக்கும் எப்போதும் பகை. காவல் தெய்வம் காரி கோயில், ஊர்பகையால் கவனிக்கப்படாமல் பாழடைந்து கிடக்கிறது. இதற்கிடையில் காரி யூரை சேர்ந்த சேது (சசிகுமார்) சிட்டியிலிருந்து சொந்த ஊரான காரியூருக்கு அந்த ஊர்மக்களால் அழைத்து வரப்படுகிறார். இரு ஊருக்கும் உள்ள பகை பற்றி அறியும் சேது யாருக்கும் அடங்காத காரி வகை ஜல்லிக்கட்டு முரட்டுக் காளையை அடக்குவதாக சவால் விடுகிறார். அருகில் சென்றலே ஆளை கொம் பால் குத்தி கிழிக்கும் காரியை சேது அடக்கி னாரா. காரி காளையின் யின் உயிரை கார்ப்பரேட் கசாப்புக்காரர் களிடமிருந்து காப்பாற்றினாரா என்பதற்கு கிளைமாக்ஸ் நரம்புகள் முறுக்கேற பதில் அளிக்கிறது.

சசிகுமாருக்கென்றே பொறுத்த மாக அமைந்த கதை. குதிரை ரேஸ் வீரராக என்ட்ரி கொடுக்கும் சசிகுமார் தனது தந்தை நரேன் ஊருக்காக போராடும்போது அவரை அடக்குவதும் நண்பனுக் காக குதிரை ரேசில் தோற்கும் சசிகுமார் பின்னர் சிவாஜி ராம்குமார் குதிரையை சுட்டுக் கொல்ல அதைக் கண்டு நரேன் கண்ணீர் விட்டு கதறியதும்” ஒரு குதிரைக்காக ஏன் இப்படி அழுகி றீர்கள்”” என்று சசிகுமார் கேட் பதும், “அது குதிரையில்லடா ஒரு என உசிரு” என நரேன் கூறும் போது சோகத்தில் நெஞ்சு நெருடுகிறது.

கிராமத்திற்கு வரும் சசிகுமார் ஊர் நிலவரத்தை மெல்ல மெல்ல உணர்வதும் ஒரு கட்டத்தில் காரி முரட்டுக்காளையை வில்லன் ஜெ டி சக்ரவர்த்தி ஆட்கள் வெட்டி கூறுபோட வெட்டு மிஷுனுக்கு அனுப்பும்போது சரியான நேரத்தில் என்ட்ரி கொடுத்து அங்கிருக்கும் ரவுடிகளை துவம்சம் செய்து காளையை காப்பாற்று வதும் பரபரப்பு.

ஜல்லிக்கட்டு காட்சியில் துணிச்ச லாக களம் இறங்கி காரி முரட்டுக் காளையை எதிர் கொள்ளும் சசிகுமார் அது குத்தி தூக்கி வீசியும் போட்டியிலிருந்து விலகாமல் திமிலை பிடித்து அடக்கு வதும் அப்ளாஸ் அள்ளு கிறது.

காரி கருப்பு காளையின் கம்பீர தோற்றம் வாடி வாசலிலிருந்து அது பாய்ந்து வருவதும் அடேங்காப்பா என்று மிரளும்படி யாக சிங்கப் பாய்ச்சலாக படமாக்கப்பட்டிருக்கிறது.

ஹீரோயினாக அறிமுகமாகியி ருக்கும் பார்வதி பார்ப்பதற்கு அப்பாவியாக தோன்றினாலும் நடிப்பில் புயலாக சீறுகிறார். தான் வளர்க்கும் காரி காளையை தன் திருமண செலவுக்காக தந்தை விற்றுவிட்டார் என்று தெரிந்ததும் சின்னபுள்ளபோல் தரையில் உருண்டு புரண்டு அழும்போது அசத்துகிறார்.

 

பூ படத்தில் ரசிகர்களுக்கு கிடைத்த பார்வதிபோல் மற்றொரு பார்வதி காரி படம் மூலம் கிடைத்திருக் கிறார்.

ஜென்டில்மேன் வில்லனாக நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நடித்திருக்கிறார் ஜெ டி.சக்ரவர்த்தி. முரட்டுக்காளைகளின் கறியை சாப்பிடுவதற்காகவே ஒரு கூட்டம் இருப்பதாக சித்தரிக்கும்போது இப்படிகூடவா ஒரு கார்ப்பரேட் இனம் இருக்கிறது என்று அதிர வைக்கிறது.

கார்த்தி நடித்த சர்தார் வெற்றி படத்தை தயாரித்தளித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன்குமார் ஜல்லிக்கட்டு மகத்துவத்தை உணர்த்தும் காரி படத்தை தயாரித்தளித்திருக்கிறார்.

டி.இமான் கிராமத்து இசையை தப்பாமல் வழங்கியிருக்கிறார்.

கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு கலர்புல்.

முதல்பட இயக்குனர் ஹேமந்த் கொஞ்சமும் தடுமாற்றமில்லாமல் ஜல்லிக்கட்டு கலாச் சாரத்தை தமிழர்களின் குடும்ப உணர்வு களை பிரதிபலிக்கும் வகையில் படமாக்கி கிராமத்து கதைகளை தர வேண்டிய அம்சங்களுடன் தந்தால் என்றுமே தோல்வி கிடை யாது என்பதை நிரூபித் திருக்கிறார்.

காரி – தாறுமாறு.

 

Related posts

SathyaJyothi_ T.G. Thyagarajan presents Anbarivu Trailer

Jai Chandran

டாக்டர் வீரபாபு நடித்து இயக்கும் முடக்கறுத்தான் டிரெய்லர் ரிலீஸ்

Jai Chandran

எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் கே.பாக்யராஜ் வெற்றி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend