Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காபி வித் காதல் (பட விமர்சனம்)

படம்: காபி வித் காதல்

நடிப்பு: ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், மாளவிகா சர்மா, அம்ரிட்டா, ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா, சண்முகநாதன், திவ்ய தர்ஷினி

தயாரிப்பு: குஷ்பு, ஏ.சி.எஸ்.அருண்குமார், ஏ.சி.சண்முகம்

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: இ.கிருஷ்ணசாமி

இயக்கம்: சுந்தர் சி.

பி ஆர் ஒ: ரியாஸ் அஹமத்

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் மூவரும் அண்ணன் தம்பிகள். ஸ்ரீகாந்த் துக்கு ஏற்கனவே சம்யுக்தா வுடன் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. ஐடியில் பணியாற்றும் ஜீவா ஐஸ்வர்யா தத்தாவுடன் லிவிங் இன் ரிலேஷனில் இருக்கி றார். சமையல் கலை படித்தி ருக்கும் ஜெய் ஓட்டல் கட்ட வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். அவருடன் சிறுவயது முதல் நட்புடன் இருக்கும் அம்ரிட்டா ஜெய் மீது ஒரு தலை காதலுடன் இருக்கிறார். இந்நிலையில் ஜெய்க்கு வெளிநாட்டிலிருந்து வரும் மாளவிகாவை பிடித்துப் போக அவரை மணக்க சம்மதிக் கிறார். ஒரே மேடையில் ஜீவா, ஜெய் இருவரின் திருமணத்தை நடத்த குடும்பத்தினர் முடிவு செய்கின்றனர். இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா ஜீவாவை பிரிந்து பழைய பாய்பிரண்டுடன் போய்விட ஜீவாவுக்கு மணப்பெண் இல்லாமல் குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல் அம்ரிட்ரா திடீரென்று கோவா சென்றுவிட அவர் இல்லாமல் மனம் உடைகிறார் ஜெய். அம்ரிட்டாவை தானும் காதலிப்பது அப்போதுதான் புரிகிறது. ஸ்ரீகாந்த்தோ இசை மூலம் பழக்கம் ஏற்பட்ட ரைசா வில்சனுடன் இரவை கழிக்கிறார். ஆனால் ரைசா ஸ்ரீகாந்தை கழற்றிவிடுகிறார். ஒரு கட்டத்தில் ஜீவாவுக்கு ரைசா வில்சனை மணம்முடிக்க முடிவு செய்கின் றனர். தன்னுடன் இரவை கழித்த ரைசா தனது தம்பி ஜீவாவுக்கு திருமணம் செய்வுள்ளதை தடுக்க முயல்கிறார் ஸ்ரீகாந்த். ஜெய்யிக்கு நிச்சயக்கப்பட்ட மாளவிகா சர்மாவுக்கு ஜீவா மீது காதல் பிறக் கிறது. இடியாப்ப சிக்கலாகிப் போகும் இந்த காதல் கூத்துக்கு என்ன தீர்வு என்பதை காமெடியாக விளக்குகிறது கிளைமாக்ஸ்.

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் மூவருமே ஒருவருக்கொருவர் சளைத்த வர்கள் இல்லை என்பது போல் நடிப்பில் போட்டியிட்டிருக்கின் றனர்.

அம்ரிட்டா நாய்குட்டிபோல் தன் கூடவே சுற்றியபோதெல்லாம் அவர் மீது காதல் கொள்ளாத ஜெய் திடீரென்று அவர் பிரிந்து சென்றதும் அந்த பிரிவின் வலியை அனுபவிப்பதும் அவரை மணக்க எண்ணுவதும் எதார்த்தம். ஆனால் அம்ரிடாவோ வேறுவொரு வரை அழைத்துவந்து அவரைத் தான் மணக்கப்போவதாக சொன்னதும் ஜெய் அதிர்வதும் அவர்களை பிரித்து தன் காதலை ஜெயிக்கவைக்க போடும் திட்டங் களும் சுவாரஸ்யம்.

அம்ரிட்டா காதலனை கிரிக்கெட் பந்துபோட்டு மட்டையாக்கலாம் என்று ஜெய் எண்ண அவர் போடும் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸர் பவுண்டரிகளாக விளாசு கடைசியில் ஜெய்யையே மயக்கம் அடையச் செய்வது சுந்தர் சி படத்துக்கே உரித்தான காமெடி டிரேட் மார்க்.

ஜீவாவை திருமணம் செய்து  கொள்ள ரைசா முடிவானதும் அவர்கள் திருமணத்தை நிறுத்த் ஸ்ரீகாந்த் ஆடும் டிராமா மற்றொரு டிராக்கில் சிரிப்பலையை
சிதறவிடுகிறது.

மாளவிகா சர்மா ஜீவாவின் மீது காதல் கொண்டு அவரை சுற்றி வருவதும் அவர் ஜெய்க் காக நிச்சயிக்கப்பட்டவர் என்பதால் ஜீவா மாளவிகா காதலை ஏற்க மறுப்பதும் அல்ஜிப்ரா கணக்குபோல் அலறவிடுகிறது.

திருமண ஏற்பாட்டாளராக வரும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி இருவரும் தனி காமெடி ஆவர்த்தனம் செய்கின்றனர்.

யோகிபாபு நேக்காக பேசி கல்யாண ஆர்டர் வாங்க முயலும்  போது ஏடாகூடமாக பேசி அந்த வாய்ப்பை ரெடின் கெடுக்க முயல்வது வயிற்றை பதம் பார்க்கும்.

மூன்று ஹீரோக்களின் தங்கை யாக வரும் விஜய் டி வி தொகுப் பாளினி டி டி காதலில் விழும் சிக்கல்களை அவிழ்க்க பயன்பட் டிருக்கிறார்.

குஷ்பு, ஏ.சி.எஸ்.அருண்குமார், ஏ.சி.சண்முகம் தயாரித்திருக் கின்றனர்.

கதையில் ஏகப்பட்ட குழப்ப சூழல் இருந்lதாலும் அதையெல்லாம் தனது காமெடி வித்தையால் தீர்த்துவிடுகிறார். இயக்குனர் சுந்தர்.சி.

யுவன் சங்கர் ராஜா தனது தந்தை ராஜாவின் ரம்பம் ரம்பம் பாடலை ரீமிக்ஸ் செய்து அசத்தியிருக் கிறார்.
தியாகி பாய்ஸ் பாடலும் கவர்கிறது. இசையின் வேகத்துக்கு ஏற்ப நடிகர் நடிகைகளும் நடனம் ஆடி கலக்கிவிடுகின்றனர்.

காபி வித் காதல் – காதல் காமெடி கலாட்டா.

Related posts

Title Look of KuranguPedal

Jai Chandran

Director Pa #Ranjith will Release the trailer of 4Sorry on Oct 22nd

Jai Chandran

விமல் – நட்டி இணையும் ‘வடம்’ சன் NXTல்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend