படம்:சஞ்சீவன்
நடிப்பு: வினோத் லோகிதாஸ், ஷிவ்நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என் ஜெ, யாஷின், திவ்யா துரைசாமி
தயாரிப்பு: மலர் மூவி மேக்கர்ஸ்
இசை: தனுஜ் மேனன்
ஒளிப்பதிவு:கார்த்திக் சுவர்ணகுமார்
இயக்கம்: மணிசேகர்
பி ஆர் ஓ: சதீஸ்வரன்
ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் 5 நண்பர்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் சஞ்சீவன்.
நிலன் (வினோத்) ஒர்க் ஃபிரம் ஹோம் செய்கி றான். அவனுக்கு ஸ்னூக்கர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். அதற்கான போட்டியில் கலந்துகொண்டு ஜெயிக்கிறான். நிலனை அவனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் காதலிக் கிறாள். போட்டியிலும் காதலிலும் ஜெயித்த மகிழ்ச்சியில் நண்பர்கள் ஏற்காடு சுற்றுலா செல்கின்றனர். அப்போது அவர்கள் சென்ற கார் விபத்தில் சிக்குகிறது. இதன் முடிவு என்ன என்பதை எதிர்பாராத ஷாக்காக சொல்கிறது கிளை மாக்ஸ்.
ஐந்து நண்பர்கள் கதை என்றதும் அவர்களுக்குள் நடக்கும் காதல் மோதலாக இருக்குமோ என்று எண்ணினால் கதையின் நகர்வுகள் அந்த நண்பர்களுக் குள்ளான கேலி, கிண்டல், நக்கல், நய்யாண்டி என்று வெகு ஜாலியாக அமைந்து சுவரஸ்யத்தை அதிகரிக் கிறது.
ஸ்னூக்கர் விளை யாட்டை இதுவரை தமிழில் மையமாக வைத்து படம் வந்தது போல் தெரியவில்லை அதற்கான காட்சிகளை விறுவிறுப்பாக அமைப்பதில் உள்ள சிரமமே அதற்கு காரணம், ஆனால் அந்த கதையையும் கபடி போட்டிக்கு இணையாக விறுவிறுப்பாக அமைக்க முடியும் என்பதை இயக்குனர் மணிசேகர்
நிரூபித்திருக்கிறார்.
ஹீரோ வினோத் இந்த விளை யாட்டுக்காக 6 மாதம் பயிற்சி எடுத்து திறமையை வெளிப் படுத்தி இருப்பதிலிருந்து கதாபாத்திரம் மீது அவர் காட்டியி ருக்கும் ஈடுபாட்டை உணர முடிகிறது.
ஸ்னூக்கர் விளையாட்டு மேஜை மீதிருக்கும் பந்து காயின்களை பாயின்ட் செய்வதுதான். நுட்ப. மான இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்பதை தொடக்கத்திலேயே விவரிப்பதால் இந்த விளையாட்டு பற்றி தெரியாதவர்களும் புரிந்து கொண்டு படம் பார்க்க முடிகிறது.

படத்தின் முதல்பாதியை ஸ்னூக்கர் விளையாட்டு ஆக்ரமிக்கிறது இரண்டாம் பாதி கதை வேறுகளத்துக்கு பயணிக்கிறது.
ஏற்காடு சுற்றுலா செல்லும் நண்பர்கள் வழியில் தங்களை ஓவர் டேக் செய்யும் காரை முந்துவதற்காக செய்யும் ஆபத்தான சேஸிங் காட்சி த்ரில். விபத்தில் முடியும் இக்காட்சி பலருக்கு எச்சரிக்கை பாடமாக அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத் தக்கது.
ஹீரோயின் ஐ டி கம்பெனியில் வேலை செய்தாலும் ஒரு பெண் ணுக்கே உரிய வெட்கம், காதல், திருமண நம்பிக்கை என்று ஐடியில் பணிபுரியும் பெண்களும் தடம் மாறாமல் வாழ்கிறார்கள் என்பதை அருமையாக நடிப்பில் வெளிப்படுத்தி மனதில் இடம் பிடிக்கிறார்.
சக நண்பர்கள் எல்லோரும் வேடத்தின் தன்னையை ஒரிஜன லாக வெளிப்படுத்தி ஜமாய்க்கின் றனர்.
போதை மருந்து கடத்தும் காட்சியில் இரண்டு நண்பர்கள் கைதானதும் கதை க்ரைம் சப்ஜெக்டாகிவிடுமோ என்று எண்ணும்போது அதை காமெடியாக்கி அரங்கை கலகலப்பில் ஆழ்த்தி விடுகின்றனர்.
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரித் திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மணி சேகர். இவர் நிஜத்தில் ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் என்பதால் அதை எப்படி கையாள வேண்டுமோ அப்படி அழகாக கையாண்டிருக்கிறார்.
கார்த்திக் சுவர்ணகுமார்
ஒளிப்பதிவு கூடுதல் பலம்.
ஸ்னூக்கர் விளை யாட்டை விறுவிறுப்பாக்கியதில் பெரும் பங்கு இசை அமைப்பாளர் தனுஜ் மேனனுக்கு உண்டு.
சஞ்ஜீவன் – புதிய களத்தில் ஒரு புது ஆட்டம்.

