Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிஸ்தா (பட விமர்சனம்)

படம்:பிஸ்தா
நடிப்பு: மெட்ரோ சிரிஸ், மிருதுலா முரளி அருந்ததி நாயர், சதீஷ், யோகிபாபு, செந்தில், நமோ நாராயணன், லொள்ளு சபா சுவாமிநாதன்.

தயாரிப்பு: புவனேஸ்வரி சாம்பசிவம்

இசை: தரண் குமார்

ஒளிப்பதிவு: எம்.விஜய்

இயக்கம்:எம்.ரமேஷ் பாரதி

பி. ஆர்.ஒ: சுரேஷ் சந்திரா, ரேகா (D one)

சரவணன் (சிரிஸ்), சதீஷ், இருவரும்  மாமன் மச்சான். யோகி பாபு நடத்தும் திருமணம் நிறுத்தும் அலுவலகத்தில் வேலை செய்கின் றனர். சரவணனும், சதீஷும் சேர்ந்து மணப்பெண்னை கடத்தி அவளது காதலனுடன் சேர்த்து வைக்கின்றனர். பெண்ணை பெற்றவர்கள் சரவணனுக்கு சாபம் விடுகின்றனர். ஒருநாள் தெருவில்  நாடகம் ஒன்றில் செல்வியை ( மிருதுலா) பார்த்து அவள் மீது காதல்கொள்கிறான். அவளும் காதலிக்கிறாள். ஆனால் மணப்பெண்களை கடத்தும் சிரிஸிடம் அந்த வேலையை விட்டுவிடு அப்பத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறு கிறாள். அதற்கு சம்மதிக்கும் சிரிஸ் கல்யாணத்துக்காக தயாராகிறார். நண்பனுக்குகாக ஒரேமுறை மணப்பெண் கடததல் வேலையில் சரவணன் ஈடுபடுகி றான். தன்னிடம் அந்த வேலையை செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு மீண்டும் அதே வேலையில் சரவணன் ஈடுபட்டதால் அவனது காதலை தூக்கி எறியும் செல்விக்கு வேறுவொருவருடன் நிச்சயதார்த்தம் நடக்கிறது. அவளுக்கு திருமணம் ஆவதற்குள் சரவணன் திருமணத்தை நடத்தி முடிப்பதாக சதீஷ் சவால் விடுகி றார். ஆனால் எங்கு தேடியும் பெண் கிடைக்கவில்லை. இறுதி யில் நடப்பது என்ன என்பதற்கு படம் கலகலப்பாக பதில் சொல்கிறது.

டைட்டில் கார்டு போடும்போதே ரஜினி, சூர்யா, கார்த்தி, தனுஷ் என பல நடிகர்களின் திருமண படத்தை போட்டு படம் திருமண விஷயம் குறித்தது என்று ரசிகர் களுக்கு ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகின்றனர். காட்சி தொடங்கியதும் கல்யாண வாழ்த்து பேனரில் ஹீரோ சிரிஸ் படம் மட்டும் இருக்க அருகில் நிற்கும் பெண்ணின் முகத்தை மறைத்து மண்பெண் யார் என்பது சீக்கிரம் தெரிவிக்கப்படும் என எழுதியிருப்பது ஷாக்.

கட் செய்தால் மறுநாள் நடக்க உள்ள சிரிஸின் திருமணத்துக்கு சதீீஷீம் அவரது நண்பர்களும் மணப்பெண் தேடி தெரு தெருவாக அலைகின்றனர். என்னதான் நடக்கிறது என்று கேட்ப தற்குள் பிளாஷ் பேக்கில்
திருமணத்த்தை நிறுத்தும் கம்பெனி நடத்தும் யோகி பாபுவிடம் சிரிஸ் வேலை செய்கி றா  ர் என்று சொல்லும்போது ஆர்வம் அதிகரிக்கிறது.

திருமணத்தை செய்து வைக்கத் தான் கம்பெனி நடத்துவார்கள் இதுயென்ன புதுசா திருமணத்தை நிறுத்தும் கம்பெனி என்று ஷாக் கொடுக்கின்றனர்.

சிரிஸ் என்ட்ரியே ஒரு திருமண வீட்டில் நுழைந்து மணப் பெண்ணை கடத்தி செல்வதில் தொடங்கி கடைசிவரை விறுவிறுப் பாக கதை செல்கிறது.

ஓவர் ஆக்டிங் இல்லாமல் கத,,பாத் திரத்தை எதார்த்தமாக செய்திருக்கும் சிரிஸ் நடிப்பில் நல்ல தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
மிருதுலா முரளி நடத்தும் நாடகத்தில் அவரைப் பார்த்து காதல் கொள்ளும் சிரிஸ் பின்னர் அவருக்கு காதல் வலைவிரிப்பதும் சீக்கிரமே அவரது காதலை பெறுவதுமாக இளவட்ட குறும்பில் மின்னுகிறார்.

திடீரென்று இவர்கள் காதல் முறிவதும எப்படியும் முறிந்த காதலை இயக்குனர் சேர்த்து வைப்பார் என்று ஏதிர்பார்க்க வைத்து கிளைமாக்ஸில் தரும் டிவிஸ்ட் கே.பாக்யராஜ் படம் பார்த்தது போன்ற உணர்வை தருகிறது.

படத்தின் ஹைலைட் காமெடி சிரிஸுக்கு அவரது நண்பர்கள் ஒலிபெருக்கி வைத்து பெண் தேடும் படலம்தான். கல்யாண ஊர்வலத்திலிருக்கும் பெண்ணிடம் சிரிஸை கல்யாணம் செய்துக் கொள்ள ஒப்புதல் கேட்பது குபீர் சிரிப்வை வரவழைக்கிறது.

மிருதுலா முரளி முறைப்பும் வெறுப்பும் காட்டுகிறார்.உடன் வரும் தோழி அருந்ததி நாயருக்கும் முக்கிய பாத்திரம் தந்திருப்பது பலம்.

புவனேஸ்வரி சாம்ப சிவம் தயாரித்திருக்கிறார். தரண்குமார் இசையில் பாடல்கள் செம்ம சூப்பர் .தாரை தப்பட்டை கிழித்திருக் கிறார்.
எம்.விஜய்  ஒளிப்பதிவு காட்சிகளை வண்ண மாக்கியிருக்கிறது.
கும்பகோணம் குறுக்கு வீதிகளிலும் சுழலும் அவரது கேமரா ஊரின் எழிலை கண்களில் பதிக்கிறது.
இயக்குனர் எம்.ரமேஷ் பாரதி கமர்ஷியல், காதல், காமெடி என்று எல்லா அம்சங்களையும் கதையில் இணைத்து பொழுதுபோக்க சிறந்த படமாக தந்திருக்கிறார்.

பிஸ்தா – காமெடி கலக்கல்.

Related posts

தேவி பிரசாத் இசையில் “ஓ பெண்ணே” பாடலை வெளியிட்ட கமல்

Jai Chandran

சில்லு வண்டுகள் பட ஆடியோ வெளியீட்டில் நடிகர், இயக்குனர் பரபரப்பு பேச்சு

Jai Chandran

லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: – தி ரிங்ஸ் ஆஃப் பவர் புதிய டீசர் டிரெய்லர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend