Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நானே வருவேன் ( பட விமர்சனம்)

படம்: நானே வருவேன்
நடிப்பு: தனுஷ் ( இருவேடம்), இந்துஜா, எல்லி அவ்ராம், பிரபு, யோகிபாபு, ஹியா தேவே, பிரணவ், பிரபாவ், பிராகின்ஸ்டன், செல்வின்ஸ்டன், துளசி, சரவண சுப்பையா இவர்களுடன் செல்வராகவன்

தயாரிப்பு: வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: ஓம் பிரகாஷ்

இயக்கம்: செல்வராகவன்

பி ஆர் ஒ: ரியாஸ் அஹமத், டைமண்ட் பாபு

நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வ ராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வெளியாகி யிருக்கும் படம் நானே வருவேன்.

கதிர் (தனுஷ்), பிரபு (தனுஷ்) இரட்டை பிறவிகள். கதிர் சைக்கோ குணமும், பிரபு பயந்த சுபாவம் கொண்டவர்கள். சிறுவயதில் கதிர் செய்யும் சைக்கோ செயல்களை கண்டு கோபம் அடையும் தந்தை அவனை அடித்து வீட்டுக்கு வெளியில் கட்டிப்போடுகிறார். அங்கிருந்து தப்பிச் செல்லும் கதிர் காட்டுக்குள் சைக்கோ ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறான். அவனை கொன்றுவிட்டு கதிர் தப்பிக்கி  றான். வருடங்கள் உருண்டோடு கிறது. பிரபு மனைவி மகளுடன் வடநாட்டில் உள்ள நகரில் வசிக்கிறான். பிரபு மகள் மீது திடீரென்று பேய் பிடிக்கிறது. மகளைவிட்டுபோக வேண்டுமென் றால் கதிரை கொல்ல வேண்டும் என்று கண்டிஷன் போடுகிறது. மகள் உயிரை காப்பாற்ற கதிரை கொல்ல புறப்படுகிறான் பிரபு. அடுத்து நடப்பது என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் அளிக்கிறது.

சைக்கோ கதை என்று முன்னரே சொல்லப்பட்டாலும் தற்போது பேய் கதையும் அதில் இணைந்திருப்பது கொஞ்சம் ஷாக்.

கதிர், பிரபு என இருவித தோற்றத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார் தனுஷ்.

வேலை முடித்தபிறகு மனைவி, மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தும் தனுஷ் திடீரென்று மகள் நடவடிக்கையில் மாறுபாடு தெரிவதைக் கண்டு அதிர்ச்சி அடை வதும் அதை அறிந்து கொள்ள தயங்கி தயங்கி மகளிடம் என்ன நடந்தது என்று கேட்பதும் பிறகு அவரை டாக்டரிடம் அழைத்துச் சென்று பேசும் போது,”மகளை ஒரு பேய் மிரட்டு கிறது ” என்பதையறிந்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிப்பது பதற்றத்தை பரவச் செய்கிறது.

மகள் அறையில் பேய் இருக்கிறதா என்பதை அறிய எக்ஸ்பர்ட்களை கொண்டு ஆராய்வதும் சட்டென மகள் காணாமல் போனதும் அவரை தேடி ஓடுவதுமாக தொடர் பரபரப்பு.

கதிர் பாத்திரத்தில் சைக்கோ வாகவே மாறியிருக்கிறார் தனுஷ்.  தான் 3 பேர் கொல்வதை பார்க்கும் மகனை மிரட்டி “இதை அம்மா, தம்பியிடம் சொன்னால் 3 பேரையும் கொன்றுவிடு வேன்” என மிரட்டுவதும் அதையும் மீறி விஷயம் வெளியில் தெரிந்தவுடன் மனைவி குழந்தை களை சங்கிலியில் கட்டிப்போடுவதுமாக எப்போது வேண்டுமானாலும் என்னவும் நடக்கலாம் என்ற அதிர்ச்சிக்காக காத்திருக்க நேர்கிறது.

தனுஷ் மகளாக நடித்திருப்பவர் வேடத்தை நன்கு உள்வாங்கியிருக் கிறார். தனுஷின் மனைவியாக நடித்திருக்கும் இந்துஜாவுக்கு வேலை அதிகமில்லை.

பிரபு, யோகிபாபுக்கு கொஞ்சமான வாய்ப்பென்றாலும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இருவரும் ஓட்டலில் ஒருவரை யொருவர் நக்கலடித்துக் கொள்வது கலகலப்பு.

வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.

செல்வராகவனுக்கு இது புதிய களமில்லை ஆனாலும் முதல் காட்சியில் கொடுக்கும்‌ ஷாக்கை இறுதிவரை டென்ஷன் குறை  யாமல் பார்த்துக் கொள்கிறார். தொடக்கத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்து காட்சியை வேகப்படுத்து கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை மகுடியாய் மயக்குகிறது.

ஒளிப்பதிவாளர் ஒம் பிரகாஷ் இருவித ஒளிபாய்ச்சி சீனுக்கு ஏற்ப மூடை செட் செய்தி ருக்கிறார்.

நானேவருவேன் – த்ரில்- திகில்.

 

Related posts

பன்றிக்கு நன்றி சொல்லி பிளாக் காமெடி எல்லாருக்கும் பிடிக்கும்: தயாரிப்பாளர்கள் பாராட்டு

Jai Chandran

இசைஞானியுடன் சந்திப்பு மறக்க முடியாத நாள்

Jai Chandran

Maanaadu Pre-Release Trailer Nearby 10Million views in just 14hrs

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend