Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வெந்து தணிந்தது காடு (பட விமர்சனம்)

படம்: வெந்து தணிந்தது காடு

நடிப்பு: எஸ் டி ஆர்., சித்து இட்னானி, ராதிகா சரத்குமார், சித்திக் நீரஜ் மாதவ், ஆன்சிலேனா ஆப்ரஹாம்

தயாரிப்பு: வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ்

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி

இயக்கம்: கவுதம் வாசுதேவ் மேனன்

பி ஆர் ஒ : சுரேஷ் சந்திரா

கருவேலம் காடு நிறைந்த வெயில் கிராமத்தில் பி எஸ் சி பட்டப்படிப்பு படித்தும் முள் செடி வெட்டி பிழைக்கும் இளைஞன் முத்து வீரன் (சிம்பு) திடீரென்று கருவேலம் குவியல் தீயில் எரிய அதிலிருந்து தப்பி உயிர் பிழைக் கிறான். அவனை தனது உறவினரிடம் அழைத்துச் சென்று மும்பையில் வேலை வாங்கி கொடுக்க கேட்கிறார் முத்துவீரன் தாயார். அவரும் சம்மதிக்கிறார். மறுநாள் ஊருக்கு புறப்பட ஏற்பாடாகும் நேரத்தில் வேலை வாங்கி தருவதாக கூறிய உறவினர் தூக்குபோட்டு சாகிறார். அவர் எழுதிய கடிதத்துடன் முத்து மும்பை வருகிறான். முதலில் அவனுக்கு வேலை கொடுக்க மறுக்கும் இசக்கி பரோட்டா ஓட்டல் ஓனர் பின்னர் சேர்த்துக் கொள் கிறார். பிறகுதான் அங்கு வேலை செய்பவர்களை அடியாட்களாக வும், கூலிப்படைகளாகவும் இசக்கி பயன்படுத்துவது முத்துக்கு தெரி கிறது. ஒருகட்டத்தில் எதிர்கோஷ்டி இசக்கி ஓட்டலுக்குள் புகுந்து தால்குதல் நடத்த துப்பாக்கி எடுத்து அவர்களை முத்து சுட்டுத் தள்ளுகிறான். இந்த விஷயம் தாதா அண்ணாச்சிக்கு தெரியவர அவர் முத்துவை அழைத்து தனக்கு பாடிகார்டாக வைத்துக்கொள் கிறார். அதன் பிறகு அண்ணாச் சிக்கும் எதிர்கோஷ்டி குட்டி பாய்க்கும் மோதல் அதிகரிக்கிறது. இதற்கிடையில் முத்துவுக்கும், துணிக்கடையில் வேலை செய்யும் பெண்ணுக்கும் காதல் மலர்கிறது. இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் மனைவியை யாரோ கடத்தி செல்ல பதற்றம் அடைகி றான் முத்து. அண்ணாச்சிதான் இதை செய்தார் என்று தகவல் வர அவரை தாக்கச் செல்கிறான் முத்து. ஆனால் குறுக்கே குட்டி பாயின் ஆட்கள் புகுந்து அண்ணாச்சியை கொல்கின்றனர். முத்துதான் அண்ணாச்சியை கொன்றான் என்று எண்ணி அவனை கொல்ல அண்ணாட்சியின் ஆட்கள் கொல்ல பாய்கின்றனர். இறுதியில் நடப்பது என்ன என்பதற்கு பாட்ஷா பட பாணியில் அதிரடியாக பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

மாநாடு பட வெற்றிக்கு பிறகு எஸ் டி ஆருக்கு மற்றொரு வெற்றி படமாக வந்திருக்கிறது வெந்து தணிந்தது காடு.

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா கவுதம் வாசுதேவ் மேனன்,சிம்பு கூட்டணி  யை மனதில் வைத்துக் கொண்டு அழகோவியமாக மற்றொரு காதல் படைப்பாக இப்படம் இருக்கும் என்று அரங்கிற்குள் சென்றால் முதல் காட்சியிலேயே கருவேலங் காடு வெந்து அனல் கக்குகிறது.
தீயிலிருந்து தப்பிக்க முள் செடி மீது விழுந்து முதுகெல்லாம் முட்கள் குத்தியபடி ரத்தம் சொட்ட நடந்துவரும் சிம்பு மனதுக்குள் சத்தமில்லாமல் புகுந்துபவிடுகி றார்.

எதார்த்தமான நடை, அப்பாவித்  தனமான முகம், யாராவது முறைத் தால் திரும்ப தாக்கும் துணிவு என கிராமத்து இளைஞனாகவே உருமாறி நிற்கிறார் சிம்பு.

மும்பை சென்று இசக்கி பரோட்டா கடையில் வேலைக்கு சேரும் சிம்பு இலை எடுப்பதில் தொடங்கி பரோட்டா போடுவதுவரை அத்தனை வேலையும் செய்கிறார்.
சிம்பு எப்போது ஆக்‌ஷன் அதிரடியில் இறங்கப் போகிறா ரென்று வெயிட்டிங்கில் இருக்கும் ரசிகர்களுக்கு இடைவேளைக்கு முன்பே ஆக்‌ஷன் சிக்னல் காட்டி அரங்கை விசில் சத்தத்தால் அதிர விடுகிறார்.

அண்ணாச்சிக்கு பாடிகார்டான பிறகு சிம்புவின் கெட்டப்பும் மாறிவிடுகிறது. நடிகையின் வீட்டுக்கு வரும் அண்ணாச்சியை கொல்ல காத்திருக்கும் ரவுடி கூட்டத்தை மோப்பம்பிடித்து சுட்டுத் தள்ளும் வேகமும் அங்கிருந்து அண்ணாச்சியை காப்பாற்றி அழைத்துச் செல்லும் ஸ்டைலும் அசத்தல்.

கிளைமாக்ஸ் நெருக்கத்தில் பம்பாய் தாதா போல் தாடியும் கோட்டு மாக மற்றொரு கெட்டப்பில் தோன்றி ரசிகர் களுக்கு இன்ப அதிர்ச்சி தருகிறார் சிம்பு.

சித்து இட்னானியுடனான காதல் காட்சிகளில் குரலை குறைத்துப் பேசி காதல் வலை வீசுவதும் தைரியமாக சென்று காதலை சொல்வதுமாக காதல் ராஜங்கம் நடத்தும் சிம்பு கொஞ்சம் ரவுடியிசத்தில் வளர்ந்த பிறகு காதலியின் வீட்டுக்குள் புகுந்து பெண்கேட்பது ரசிக்க வைக்கிறது.

படத்தில் ரவுடி, ரவுடிக்கு ரவுடி அவர்களுக்கு ஒரு பெரிய பாஸ் என்று மும்பை தாதாயிசம் நீண்டுகொண்டே செல்கிறது. கதை முடியும் விதத்தை பார்த்தால் இரண்டாம் பாகத்துக்கும் நிறையவே வாய்ப்பிருப்பது தெரிகிறது.

சிம்புவின் தாயாக வரும் ராதிகா தன்பங்கை வழக்கம்போல் சிறப்புடன் செய்திருக்குறார்.

சிம்புவுக்கும் சரி, கவுதம் வாசுதேவ் மேனனுக்கும் சரி இது புதிய களம் தான். நிறைய கேரக்டர்கள் இருந் தாலும் குழப்பமில்லாத திரைக் கதை படத்துக்கு பிளஸ்.

ஜெயமோகன் கதையை இயக்கி யிருக்கும் கவுதம் , அவர் எழுதிய கதையில் இல்லாத காதல் கிளையை படத்தில் துளிர்விடச் செய்திருப்பது ஆக்‌ஷன் தீக்குள் ஒரு குளிர் சோலையை உருவாக்கி யிருக்கிறது.

டைட்டில் தொடக்கத்திலிருந்தே தன் இருப்பை தக்க வைக்கிறார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ் மான். பாடல்களில் மெலடிமெட்டுக் களை காதுக்கினிமையாக தவழவிட்டிருக்கிறார்.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா என்ற அந்தக்கால மெட்டிலும் ஒரு பாடல் காதில் தேனாக பாய்கிறது.

சித்தார்த்தா நூனி ஒளிப்பதிவு வெப்பம், தென்றல், புயல் என அனைத்து உணர்வு களையும் பிரதிபலித்திருக்கிறது.

வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் பெரும் பொருட் செலவில் படத்தை தயாரித்திருக் கிறார்.

வெந்து தணிந்தது காடு – ஒரு சாமான்ய இளைஞனின் அசாதாரண வாழ்க்கை

 

 

Related posts

Guess the title of ShirdiProductionNO2

Jai Chandran

Parole trailer gets tremendous response from fans

Jai Chandran

PAN India ‘Celebrity Cricket League

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend