Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர்கள் என் பலம் : நடிகர் ஜெயம் ரவி மகிழ்ச்சி

நடிகர் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள். தனது பிறந்தநாளை பத்திரிகை, மீடியா மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினர். அவருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் ஜெயம் ரவி பேசியதாவது:

ஜெயம் படம் திரையுலகுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. ஆனால் 26 படங்களில்தான் நடித்திருக் கிறேன். ஜெயம் படம் 150 நாட்கள் ஓடி பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் ஒன்றரை வருடம் வீட்டில்தான் உட்கார்ந்திருந்தேன். அப்போது என் அப்பா சொன்னார். நல்ல படம் வந்தால் நடி இல்லா விட்டால் நடிக்காமல் வீட்டிலேயே உட்கார் தப்பில்லை என்றார். அவர் வார்த்தைப்படிதான் நடக்கிறேன். என்னுடன் நடிக்க வந்தவர்கள் 50 படம் கூட நடித்திருக்கிறார்கள் ஆனால் நான் குறைந்தளவுபடம் நடித்திருந்தாலும் நிறைய வெற்றிபடங்களாவே தந்திருக்கி றேன். எண்ணிக்கையை  காட்டிலும் தரமான படமாக இருக்க வேண்டும் என்பதால் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன். இனியும் அப்படித்தான் நடிப்பேன்.

எனக்கு பக்கபலமாக எனது அப்பா, அம்மா இருக்கின்றனர். எனக்கு சைக்கிள் ஓட்டவும், பைக் ஓட்டவும், நடிக்கவும் கற்றுக்கொடுத்தது எனது அண்ணன்தான். எனக்கு புத்தகங்கள் படிக்கச் சொல்லிதந்து தமிழ் எழுத படிக்கக் கற்றுதந்ததும் அவர்தான் அவர் எனக்கு குரு மட்டுமல்ல என் தந்தைபோன்றவர்.

என் வளர்ச்சியில் பத்திரிகை, மீடியாவினர் பங்கும் முக்கியம் அதேபோல் எனது ரசிகர்கள் எனக்கு பலம். எப்போதும் அவர்கள் என்னுடன் இருப்பார்கள். மேலும் எனது மனைவி, என் குழந்தை களும் என் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள். பி ஆர் ஒ சுரேஷ் சந்திரா, ரேகா உள்ளிட்டவர்களும் என்னுடைய நல விரும்பிகள் ஆவர்.

ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் நான் ஏதாவது வெளியூர் சென்று விடுவேன். இம்முறை உங்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்று என் மனைவி கூறினார். இன்றைய நாளில் நான் மிகவும்  மகிழ்ச்சி யாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகள்  இந்த ம்கிழ்ச்சியை  தவறவிட்டுவிட் டோமே என்று எண்ணுகிறேன்.

இவ்வாறு ஜெயம் ரபி பேசினார்.

ஆதரவற்ற குழந்தைகளும் ரவிக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து கூறினர்.

 

Related posts

கல்தூண் திலக் கொரோனா தாக்கி மரணம்

Jai Chandran

தஞ்சையில் கீர்த்தி தொடங்கி வைத்த ‘லாங்க்வால்” மால்

Jai Chandran

பரமபத விளையாட்டு சென்னை விநியோக உரிமையை வாங்கிய ‘அபிராமி’ ராமநாதன்

CCCinema

Leave a Comment

Share via
Send this to a friend