Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பிரம்மாஸ்த்ரா – ஷிவா பாகம் 1 (இந்தி மொழி மாற்ற பட விமர்சனம்)

படம்: பிரம்மாஸ்த்ரா

நடிப்பு: அமிதாப்பச்சன், ஷாருக் கான், ரன்பீர் கபூர், அலியாபட், நாகார்ஜுனா, மவுனிகபூர், டிம்பில் கபாடியா, சவ்ரவ் கஜ்ரர், குர்பாடெக் பிர்சடா

தயாரிப்பு: கரண்ஜோஹர், அயன் முகர்ஜி

இசை: சைம்ன் ப்ராங்க்லின்

ஒளிப்பதிவு: வி.மணிகண்டன், பங்கஜ்குமார், சுதீப் சட்டர்ஜி, விகாஷ் நவ்லகஹா, பேட்ரிக் டியூரக்ஸ்

இயக்கம்: அயன் முகர்ஜி

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா (தமிழ்)

அனாதை இல்லத்தில் வளர்ந்த ஷிவாவுக்கு (ரன்பீர் கபூர்) பணக் கார வீட்டுப்பெண் இஷாவை ( அலியா பட்) கண்டதும் காதல் மலர்கிறது. ஷிவாவின் குணத்தை கண்டு அவனை காதலிக்கிறாள் இஷா. இதற்கிடையில் சக்தி வாய்ந்த அக்னிதேவ் சீடர்கள் சிலர் உலகை அழிக்க வல்ல பிரம்மாஸ்த் ராவின் சிதறிய மூன்று துண்டு களை கண்டுபிடித்து அதை அக்னி தேவிடம் ஒப்படைக்க முயல்கின் றனர். அதற்காக யாரையும் கொல்ல அந்த சீடர்கள் தயங்க வில்லை. ஷிவா சாதாரண இளைஞன் போல் தோன்றினாலும் அவனும் ஒரு அக்னி அஸ்த்திரம் என்ற உண்மை தெரிய வருகிறது. அழிவு சக்திகளிடம் பிரம்மாஸ்த்ரா கிடைக்காமலிருக்க தன் பலத்தைக் கொண்டு ஷிவா தடுக் கிறான். இறுதி கட்டத்தில் அக்னி தேவ் கூட்டத்திடம் பிரமாஸ்த் ராவின் மூன்று துண்டுகளும் கிடைக்க அதை ஒன்றாக்கு கின்றனர். இதையடுத்து உலக அழிவு தொடங்குகிறது. அந்த அழிவை ஷிவா எப்படி தனது சக்தியால் தடுக்கிறான் என்பதே கிளைமாக்ஸ்.

ரூ 440 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் என்பதை படத்தின் பிரமாண்டம் அதில் நடித்திருக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை பார்த்தாலே தெரிகிறது. 3 டி எஃபெக்ட்டில் படமாக்கியிருப்பது மற்றொரு பிளஸ்.

படம் முழுக்க நெருப்போடு விளையாடியிருக்கிறார் ரன்பீர் கபூர். ஒரு கட்டத்தில் திரையே தீப்பிடித்துவிட்டதோ என்ற சந்தேகம்கூட வந்துவிடுகிறது.

ரன்பீரும் அலியாபட்டும் படத்தில் காதல் ஜோடிகளாக வருகின்றனர் அதேபடம் அவர்களை நிஜகாதல் ஜோடிகளாகவும் மாற்றி வாழ்க்கை யில் தம்பதிகளாகவும் மாறியிருப் பது பிரம்மாஸ்த்ரா படம் செய்த மற்றொரு மாயம் .

அமிதாப்பச்சன், ஷாருக் கான், நாகார்ஜூனா என ஜாம்பவான்கள் ஒன்றிணைந்துள்ளனர். யாரும் சோடை இல்லை என்றளவுக்கு ஆக்ரோஷம் காட்டி நடித்திருக்கின்  றனர்.

பணத்தை தண்ணி மாதிரி செலவழித்திருக்கிறார்கள் என்பதை விட காட்டு தீ நெருப்பு மாதிரி செவழித்திருக்கின்றனர் தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், அயன் முகர்ஜி . மேலும் அயன் முகர்ஜி எழுதி இயக்கியும் உள்ளார். காட்சிகளை கனவில் வருவதுபோல் நம்ப முடியாத ளவுக்கு அனல் பறக்க அமைத்தி ருப்பது ஏ சி அரங்கையும் புழுக்கத்தில் ஆழ்த்துகிறது.

ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து கேமிராமேன்கள் சுற்றி சுற்றி படமாக்கியிருக்கின்றனர்.

சைமன் ப்ராங்க்லின் இசையும் பிரமாண்டத்துக்கு பிரமாண்டம் சேர்த்திருக்கிறது.

எல்லோருமே பிற மொழி நடிகர் களாக இருப்பதால் தமிழ் ரசிகர் களை கவரும் வாய்ப்பு குறைந் திருக்கிறது. பான் இந்தியா படம் என்றால் பிரதான மொழி நடிகர் களில் ஒன்றிரண்டு பேர்களை யாவது தேர்வு செய்திருக்கலாம் அதில் இயக்குனர் கோட்டை விட்டிருக்கிறார். இரண்டாம் பாகத்துக்கு கிளைமாக்ஸில் லீட் கொடுத்திருக்கும் இயக்குனர் அதில் எல்லா மொழிகளிலும் பிரதான நடிகர்களை இணைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

பிரம்மாஸ்த்ரா – ரசிகர் களை பிரமாண்டத்தில் ஆழ்த்தும் அஸ்த்திரம்.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குனர் பாலா வாழ்த்து

Jai Chandran

KodiyilOruvan first single track hits 500K+ Views

Jai Chandran

ஜெயிலர் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend