Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கோப்ரா (பட விமர்சனம்)

படம்: கோப்ரா

நடிப்பு: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ்.ரவிகுமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய், மீனாட்சி, மிர்ணாளினி, சர்ஜனோ, ரனீஷ், பூவையார்

தயாரிப்பு: லலித்குமார்

இசை: ஏ.ஆர்.ரஹமான்

ஒளிப்பதிவு : ஹரிஷ் கண்ணன்

இயக்கம்: அஜெய் ஞானமுத்த

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்

பி ஆர் ஒ: யுவராஜ்

கணிதம், கம்ப்யூட்டரில் கைதேர்ந் தவர் மதி (விக்ரம்) பலவித கெட்டப் அணிந்து வெளிமாநில முதல்வர், ஸ்காட் லாந்தில் இளவரசர் என பாதுகாப்பு வளையங் களை தாண்டி கொல்கிறார். உள்ளூர் போலீஸ் முதல் சர்வதேச போலீஸ் வரை மதியை வலைவீசி தேடுகின் றனர். எல்லோர் கண்களிலும் மண்ணை தூவிவிட்டு தப்பிக்கி றார். பணபலம் அதிகார பலம் கொண்ட தொழில் அதிபர் ரிஷி (ரோஷன் மேத்யூ) தனது ஆட்களை வைத்து மதியை கொல்ல துடிக்கி றார். இந்நிலையில் மதிக்கு கதிர் என்ற சகோதரர் இருப்பது தெரி கிறது. எல்லா கொலைகளையும் கதிர் செய்துவிட்டு பழியை மதி மீதுபோட்டு அவரை போலீசிலும் சிக்க வைக்க ஸ்கெட்ச் போட்டு கிறார். ஒருகட்டத்தில் மதி, கதிர் இருவரும் சந்திக்கின்றனர். அப்போதுதான் அவர்களுக்குள் இளம் வயதில் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தம் தெரிய வருகிறது. ஒரு கட்டத்தில் மதியை ரிஷியும் அடியாட்களும் சுற்றிவளைக்கின் றனர் துப்பாக்கி குண்டுகள் சிதற மோதல் நடக்கிறது. இதன் முடிவில் நடப்பது அதிச்சியை தருகிறது.

விக்ரம் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்திருக்கிறது கோப்ரா.

தொடக்கம் முதலே ஆக்ஷன் காட்சிகள் மட்டுமல்லாமல் உருமாற்ற கெட்டபுகளில் வந்து பரபரப்பை அரங்கு முழுவதும் தொற்றிக் கொள்ள வைத்திருக் கிறார் விக்ரம்.

பாதிரியார், போட்டோ கிராபர் போன்ற கெட்டப்பில் வரும்போது முற்றிலுமாக அடை யாளம் காண முடியாமல் திணறடிக்கிறார் விக்ரம். படத்தின் முதல் பாதி வரை தாறுமாறாக ஆக்‌ஷன் காட்சிகள் அதிர வைக்கிறது.

தம்பியை காப்பாற்றுவதற்காக இரும்பு கம்பி விளம்பர கூண்டில் ரவுடிகளுடன் மோதுவது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

கே ஜி எஃப் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமை உயிராக காதலிக் கிறார். விக்ரமுடன் இணைந்து டூயட் பாடி வசியம் செய்கிறார். விக்ரமின் மற்றொரு காதலியாக சென்டிமென்ட் பாத்திரத்தில் வருகிறார் மிர்ணாளினி.

இன்டர்போல் அதிகாரியாக பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார். டிப்டாப்பாக வந்து அதிகாரி தோரணையை வெளிப்படுத்துகிறார். ஆனால் ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் அவருக்கு இல்லை.
இர்பானுக்கு உதவும் கணித நிபுணராக மீனாட்சி வருகிறார்.

ஆக்‌ஷன் காட்சிகள் படம் முழுவதும் ஆக்ரமித்திருப்பதால் காமெடிக்கோ, காமெடியனுக்கோ தேவை ஏற்படவில்லை.

லலித்குமார் பான் இந்தியா படத்துக்கான செலவை கொட்டியிருக்கிறார்.

படத்தை பிரமாண்டமாக்குகிறது ஏ.ஆர்.ரஹ்மான் இசை. அதேபோல் ஹரிஷ் கண்ணன் கேமராவும் பிரமாண்டத்துக்கு பிரமாண்டம் சேர்த்திருக்கிறது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து கதையையும், காட்சிகளையும் பான் இந்தியாவுக்கு ஏற்ப அமைத்திருந்தாலும் திரைக் கதையில் ஏற்பட்ட குழப்பம் படத் துக்கு பலவீனம்.
கணித மேதை ஜீனியஸாக விக்ரமை சித்தரிக்கும் இயக்குனர் அதற்காக அசத்தும் வகையில் ஓரிரு காட்சிகளை அமைத்தி ருந்தால் ஆர்வம் கூடியிருக்கும். இன்டர்போல் போலீஸ் தேடும் அளவுக்கான கொலைகளை விக்ரம் செய்வது ஏன் என்ற கேள்விக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

கோப்ரா – படம் முழுவதும் விக்ரமின் கடின உழைப்பு.

Related posts

It’s a wrap for ‘DEJAVU

Jai Chandran

வில்லனாக அறிமுகமாகிறார் நடிகர் ஆதவ் !

Jai Chandran

Short Video I Cant Breathe will be launched by Actor Madhavan

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend