Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

நட்சத்திரம் நகர்கிறது (பட விமர்சனம்)

படம்: நட்சத்திரம் நகர்கிறது

நடிப்பு: காளிதாஸ், கலையரசன், துஷாரா விஜயன், ஹரிகிருஷ் ணன், வினோத், ஞான பிரசாத், சுபத்ரா ராபர்ட், சபீர் கல்லராக்கல், ரெஜின் ரோஸ், தாமு, ஷெரின் செல்வின் மேத்யூ, வின்சு ரேச்சல் ஷாம், மனிஷா டைட், அர்ஜூன் பிரபாகரன், உதய சூர்யா, ஸ்டீபன் ராஜ்

தயாரிப்பு: யாழி பிலிம்ஸ் – விக்னேஷ் சுந்தரேசன்.
மனோஜ் லியோனல் ஜேசன்

இசை: தென்மா

ஒளிப்பதிவு: கிஷோர்குமார்

இயக்கம்: பா.ரஞ்சித்

நட்சத்திரம் நகர்கிறது ஒரு வழக்க மான படமல்ல. ஆண் -பெண் காதல், ஆண் திருநங்கை காதல், ஆண் – ஆண் காதல் என எல்லா வகையான காதலுடன் ஆணவ கொலையும் அதில் உள்ள அரசிய லையும் பகிரங்கமாக பேசும் படம்.

சினிமாவில் நடிப்பதற்கு முன் நடிப்பில் பயிற்சி பெற சினிமா என்ற நாடக கம்பெனிக்கு வருகி றார் கலையரசன். முன்னதாக அந்த நாடக குழுவில் காளிதாஸ், துஷாரா, வினோத் உள்ளிட்ட பலர் உள்ளனர். துஷாராவும், காளி தாஸும் காதலித்து பின்னர் பிரேக் செய்து விடுகின்றனர். அதே போல் கலையரசன் தனது முறைப் பெண்ணை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த காதலும் பிரேக் அப் ஆகிறது. குழுவின் இயக்குனர் இவர்கள் எல்லோரையும் வெவ் வேறு கேரக்டர்களாக மாற்றி காட்டுப்பூனையும், நாட்டுப் பூனையும் என்ற ஆணவ கொலை பற்றிய நாடகம் நடத்த ரிகர்சல் நடத்துகிறார். இந்நிலையில் கலையரசனுக்கு துஷாரா மீது காதல் பிறக்கிறது. அவரிடம் அழுது புலம்பி காதலுக்கு சம்மதம் பெறுகிறார். துஷாரா தாழ்த்தப் பட்ட இனத்தை சேர்ந்தவர். இந்நிலையில்  கலையரசன் தனது காதல் விவகாரத்தை வீட்டில் சொல்ல குடும்பத்தில் கலவரம் வெடிக்கிறது. தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த துஷாரவை மருமகளாக ஏற்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஒருவழியாக அந்த பிரச்னையிலி ருந்து மீள்கிறார் கலையரசன். இந்நிலையில் காட்டுப்பூனையும் நாட்டுப் பூனையும் நாடகம் பொது வெளியில் நடக்க ஏற்பாடாகிறது. ஆணவ கொலைபற்றிய நாடகம் என்பதையறிந்து அதை தடுக்க ஒரு கூட்டம் கிளம்புகிறது. அடுத்து நடந்தது என்ன என்பதற்கு ஓட ஓட விரட்டி பதில் சொல்கிறது கிளைமாக்ஸ்.

பா.ரஞ்சித் சில திரவுபதிகளுக்கு நெற்றிப்பொட்டில் அடிக்கும் விதமாக வெளிப்படையான வசனங்களால் சவுக்கடி தந்திருக் கிறார்.

தொடக்கமே பிரேக் அப் காதலுடன் காட்சி ஆரம்பமாகிறது. காளிதாஸ், துஷாரா இணக்கம் சில நிமிடத்தில் மோதலாக மாறுகிறது. இளையராஜா பாடலை துஷாரா பாடாததற்கு கடுப்படிக்கிறார் காளிதாஸ். தொடர்ச்சியாக பாட்டு பாடி துஷாரா கடுப்பேற்ற கடைசியில் “புத்தியை காட்டிட்டியே “என்று காளிதாஸ் பொங்க கோபமாகும் துஷாரா”என்ன புத்தி.. ” என்று டென்ஷனாக பேசி விளாசு கிறார். காட்சி ஆரம்பமே இப்படி யென்றால் படம் முழுக்க என்ன விளாசல்கள் இருக்கும் என்பதை சொல்லித் தெரியவேண்டிய தில்லை.

ஆணவ கொலை இலவசமாக செய்யப்படும் என்ற காட்சி திகலை பரவ விடுகிறது. சமுதாயத்தில் தான் சாதி வெறியால் ஆணவ கொலை நடக்கிறது நாடகத்தி லாவது அதை மாற்றி மேல் வர்க்கம் திருந்தி தனது மகனின் காதலுக்கு சம்மதம் தருவதுபோல் மாற்றி அமைக்கப்படும் நாடக கிளைமாக்ஸ் அப்ளாஸ் அள்ளுகிறது.

பலரும் நடித்திருக்கும் நிலையில் கலையரசன், காளிதாஸ், துஷாரா மூவரின் நடிப்பும் ஜொலிக்கும் நட்சத்திரமாக பிரகாசிக்கிறது.

நாடகத்தை தடுக்க முகமூடி அணிந்துவரும்  சபீர்,  யாரய்யா இந்த புதுவில்லன்  என யோசிக்க வைக்கிறார். அவர் சார்பட்டா பரப்பரரை டான்சிங் ரோஸ் என்றதும் ஆசர்யம் பிறக்கிறது

வழக்கமான கமர்ஷியல் பட ரசிகர்களை நெளியவிடடாலும் சமுயதாய நோக்கம் கொண்ட சகலரையும் நட்சத்திரம் நகர்கிறது கட்டிப்போடும்.

ஆண்ட பரம்பரை பற்றி பேசும் அரசியல்வாதி களுக்க அம்பேத்காரிஸ்ட் பா. ரஞ்சித் வைத்தி ருக்கும் “செக்” தான் “நட்சத்திரம் நகர்கிறது”.

சினிமாவில் எழுப்படும் அவதூறுகளுக்கு சினிமா மூலமே பதில் வரத் தொடங்கியிருப் பதால் இந்த மோதல் சினிமாவில் மேலும் சூட்டடை கிளப்பும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

யாழி பிலிம்ஸ் – விக்னேஷ் சுந்தரேசன்.
மனோஜ் லியோனல் ஜேசன் தயாரித்திருக் கின்றனர்.

கிஷோர்குமார் ஒளிப் பதிவு எதார்த்ததை பிரதிபலிக்கிறது.

தென்மா இசையில் பாடல்கள் மெலடியாக ஒலிக்கும் அதேநேரத்தில் ரணங்களையும், வேதனைகளையும் வீசிச்செல்கிறது.

“நட்சத்திரம் நகர்கிறது” – சமுதாய சர்ச்சைகளை சாட்டையால் வெளுக்கிறது.

 

Related posts

Face of the Future…

Jai Chandran

NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்தார்..

Jai Chandran

சத்யசிவா இயக்க, உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend