Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வார்ட் 126 (பட விமர்சனம்)

படம்: வார்ட் 126

நடிப்பு: மைக்கேல் தங்கதுரை, ஜிஷ்னு மேனன், ஷிரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா

தயாரிப்பு: எஸ் எஸ் பி டாக்கிஸ்

இசை: வருண் சுனில

ஒளிப்பதிவு: எஸ்.கே.சுரேஷ் குமார்

இயக்கம்: செல்வகுமார் செல்லபாண்டியன்

பி ஆர் ஒ: ஏ.ஜான்

வார்ட் எண் 126 பகுதியில் உள்ள ஒரு  பங்களாவில் வாலிபர் ஒருவர் கொல்லப் பட்டு இரண்டு நாள் ஆகிய நிலையில் துர்நாற்றம் வீச பக்கத்துவீட்டு நபர் போலீ ஸுக்கு தகவல் தெரிவிக்கிறார். போலீஸ் பிணத்தை கைப்பற்றி அக்கம்பக்கத் தாரிடம் விசாரணை நடத்துகின்றனர். முதலில் ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் கொலையான நபரின் மனைவி சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றது தெரிகிறது. அவரிடம் போலீஸ் விசாரிக்கும்போது வேறுபெண்ணுடன் கொலையான நபர் உறவில் இருந்தது தெரிகிறது. அவரை கண்டுபிடித்து விசாரிக்கும்போது லேசான துப்பு கிடைக்கிறது. இறுதியில் கொலைகாரனை போலீஸார் கண்டுபிடித் தார்களா என்பதை விறுவிறுப்புடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.

எதிர்ப்பார்ப்பு இல்லாமல் தியேட்டருக்கு சென்று அமரும்போது சில படங்கள் ஆச்சரியப்ப்டுத்தும் அந்த வரிசையில் வார்ட் 126 ரசிகர்களை ஆச்சரியப் படுத்தும்.

வீட்டுக்கு பார்சல் டெலிவரி கொடுக்க வரும் நபர் திடீரென்று மைகேலை கத்தி யால் குத்தியதும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. தகவலறிந்து வரும் போலீஸ் கொலைகாரன் யார் என்பதை கண்டறிய விசாரணை தொடங்கியதும் பல நபர்கள் இதில் விசாரணைக்குள்ளா கின்றனர். ஆனாலும் யார் கொலையாளி என்பதை கண்டறிய முடியாமல் போலீஸ் திணறுகிறது.

இடைவேளைவரை கொலை பற்றிய விசாரணை சென்றுக் கொண்டிருக்க அதன்பிறகு புதிய கதை தொடங்கிவிடு கிறது. இதில் ஜிஷ்னு மேனன் ஷ்ரிதா சிவதாஸ் இளம்ஜோடிகளாக வந்து காதல் லீலை செய்கின்றனர். கொலை விசாரணையை இயக்குனர் மறந்து விட்டாரா என்று எண்ணிக்கொண்டி ருக்கும்போது கொலையான மைக்கேல் இந்த இளம்ஜோடிக்குள் சித்துவிளா யாட்டு விளையாடுவதை ஓபன் செய்யும்போது மீண்டும் பரபரப்பு பரவத் தொடங்குகிறது.

கொலையாளி யார் என்ற சஸ்பென்ஸ் உடையும்போது ஆச்சரியம் பல மடங்காகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டராக இயக்குனர் செல்வகுமார் செல்லபாண்டியனே அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி யுள்ளார். அலட்டல் இல்லாமல் ஷார்ப்பாக விசாரணை நடத்தும்விதம் மனதை கவர்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் குழப்பினாலும் சஸ்பென்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிக்காத்திருப்பது அப்ளாஸ் பெறுகிறது.

எஸ் எஸ் பி டாக்கிஸ் தயாரித்திருக்கிறது.

வருண் சுனில் இசையும்,  எஸ்.கே.சுரேஷ் குமார் ஒளிப்பதிவும்  காட்சிகளை மெருகேற்றியிருக்கிறது.

வார்ட்126- சஸ்பென்ஸ் பிரியர்களை கவர்வதுடன் ஜல்சா மன்னர்களுக்கு எச்சரிக்கை மணியடித்திருக்கிறது.

Related posts

டோர் (பட விமர்சனம்)

Jai Chandran

Shanthnu Bhagyaraj Returns to Malayalam

Jai Chandran

18 ஆவது ஆண்டு எடிசன் விருதுகள்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend