Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தேசிய விருது வென்ற சூர்யா – ஸ்டார்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து

தேசிய விருது வென்ற சூர்யா – ஸ்டார்களுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திரைக் கலைக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு முறையும் பேரார்வமும், எதிர்பார்ப்பும் பெருகிடும். இன்று பேரின்பச் செய்தியாக தமிழ் திரைப்பட உலகிற்கு வந்து சேர்ந்திருக் கிறது. பல்துறைக்கான முக்கிய விருதுகள் தமிழுக்கு கொண்டு சேர்த்த,

சிறந்த நடிகர் – சூர்யா (சூரரை போற்று)

சிறந்த திரைப்படம் – (சூரரை போற்று)

சிறந்த திரைக்கதை – சுதா கோங்குரா (சூரரை போற்று)

சிறந்த நடிகை – அபர்ணா பாலமுரளி (சூரரை போற்று)

சிறந்த பின்னணி இசை – ஜி.வி.பிரகாஷ் (சூரரை போற்று)

சிறந்த தமிழ் திரைப்படம் – சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த படத்தொகுப்பாளர் – ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

சிறந்த அறிமுக இயக்குனர் – மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த வசனம் – மடோன் அஸ்வின் (மண்டேலா)

சிறந்த துணை நடிகை – லட்சுமிப்ரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)

இவர்கள் அனைவரையும் தென்னிந்திய நடிகர் சங்கம் மனம் பூரித்து வாழ்த்துகிறது.
இதுமட்டுமல்லாது, தேசிய விருது பெற்றுத் திளைக்கும் மற்ற மொழித் திரை கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

இவ்விருதுகள் இந்திய சினிமாவை மற்றுமொரு மேல் தளத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையை வளர்க்கிறது. வாழ்த்துக்கள்ம்

இவ்வாறு எம் நாசர் தெரிவித்திருக்கிறார்.

Related posts

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ‘அவள் அப்படித்தான்’ டைட்டிலுடன்  திரைப்படமாகிறது..

Jai Chandran

Tamil Independent song showcased in Billboard Times Square* !!

Jai Chandran

ஐ லியோனி மகன் லியோ சிவகுமார் ஹீரோ ஆனார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend