Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இலங்கை மக்கள் புரட்சி: அதிபர் கோத்தபய தப்பி ஓட்டம்

இலங்கையில் பொருளாதார நெருக்கடி யால்மக்கள் கடும் அபவதிக்குள்ளாகி யுள்ளனர்.  அவதியடைந்து வரும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஒருமாதமாக மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்திர ராஜபக்சே பதவி விலகினார அவருக்கு பதிலாக ரணில் விக்ரமசிங்கே பிரதமராக. பதவி ஏற்றார். ஆனாலும் மக்கள் புரட்சி ஓயவில்லை. அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக போராட்டம் தொடர்ந்தது.

இந்தநிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பதவி விலக கோரி இன்று தலைநகர் கொழும்பில் போராட்டம் வெடித்தது. இலங்கை முழுவதிலிருந்து வீட்டுக்கு ஒருவர் வீதம் கொழும்பு நோக்கி விரைந்து போராட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள் பிரமாண்ட பேரணி அதிபர் மாளிகை அருகே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. போராட்ட அறிவிப்பு காரணமாக கொழும்பு முழுவதும் நேற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சாலைகளில் ராணுவத்தினர், போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் ஊரடங்கை மீறி நேற்று நள்ளிரவு முதல் மக்கள் கொழும்பை நோக்கி  படையெடுத்தனர். கொழும்பு நகருக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் குவிக்கப்பட்டி ருந்த ராணுவத்தினர், போலீசார் போராட்டக்காரர்களை தடுத்தனர். இதில் போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில்  போலீஸ் ரானுவத்தை மீறி அதிபர் மாளிகைக்குள் மக்கள்  நுழைந்தனர்.  இதையடுத்து சற்று முன்னதாக அதிபர் கோத்தபய மாளிகையிலிருந்து தப்பி ஓடினார்.

அதிபர் மாளிகையை  கைப்பற்றிய மக்கள் அடுத்து பிரதமர் மாளிகைக் குள்ளும் நுழைந்தனர். இதனால் இலங்கை முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கே  விலகியதாக தெரிகிறது.

Related posts

New Avengers: Doomsday Robert Downey Jr AS Super Villain..

Jai Chandran

பொன் மாணிக்கவேல் (பட விமர்சனம்)

Jai Chandran

OracleMovies: India’s first NFT Movie Marketplace

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend