Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இசைஞானி இளையராஜா எம் பியாக நியமனம்

இசைஞானி இளையராஜாவை எம் பியக ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்.  நாடாளுமன்றத்தின் மாநிலங்கள வையில் 12 பேர் நியமன உறுப்பினர் களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள்  மாநிலங்களவை நியமன எம்.பி. பதவிக்கு நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.

அன்னக்கிளி படத்தில்  அறிமுகமாகி 50 ஆண்டுக்கும் மேலாக  தமிழ் திரையுலகில் மறக்கமுடியாத பல்வேறு பாடல்களை தந்தவர் இளையராஜா. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்துள ளதுடன் , 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். மேலும் சிம்பொனி இசை அமைத்ததற்காக மேஸ்ட்ரோ பட்டம் பெற்றார்.

தவிர இளையராஜா சிந்தனைகள் உள்ளிட்ட ஆன்மிக புத்தகங்கள், பக்தி மற்றும் திரைப்படப் பாடல்கள் எழுதி உள்ளதுடன்  தெய்வீக பாடல்கள் பாடியிருக்கிறார்.

Related posts

 “ஃபௌசி” புராணக் கதையா? அதிரடி படமா? இயக்குநர் ஹனு ராகவபுடி 

Jai Chandran

Jagamey Thanthiram Trailer Launch Today

Jai Chandran

Do you want to be a hero? Actress Varalakshmi Gives an Idea

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend