Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாசர் நன்றி

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.  அவர் கூறியதாவது:

பேரன்பிற்கும், மரியாதைக்குரிய தமிழக முதலமைச்சருக்கு,
தாங்கள் ஆற்றிவரும் நற்பணிகளுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியும் வாழ்த்துக்களும்………..
பாடிக்கொண்டிருந்த தமிழ்ச்சினிமா பேசவாரம்பிப்பதற்கு அதிமுக்கிய காரணமாக, இலக்கியத்திற்கொப்ப வசனங்களை திரையில் ஒலிக்க, சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச்செல்ல, அதன்மூலம் மக்களிடையே ஒரு பேரெழிச்சியை கொண்டுவரக்காரணமாய் இருந்த வித்து, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது” மற்றும் பத்து இலட்சத்துக்கான பொன்முடிப்பும் வழங்கப்படுமென்பதை அறிவித்த தங்களுக்கு நன்றிகள் பல கோடி…………
கலைஞர்களுக்கு பொருள் அல்ல ப்ரதானம். சமூகத்தில் அங்கீகாரமும் பாராட்டும்தான். “கலைமாமணி” என்ற விருதமைத்த கலைஞரின் பெயரால் இருக்கும் இவ்விருது பெற்றிடும் பெரும் கலைஞர்கள் மனமகிழ்வார்கள்.
அத்தகைய விருதினை பெறுவதற்கான சான்றோரை தேர்ந்தெடுக்க ஒரு குழு அமைத்தமைக்கும், அக்குழுவில் ஒருவனாக இந்த எளிய நடிகனையும் நியமித்தமைக்கு நன்றி…………….
கொடுக்கப்பட்ட இப்பணியினை முத்தமிழறிஞர் ஆசியோடு செவ்வனே செய்வேன் எனவும் உறுதி கூறுகிறேன்.

உண்மையுடனும், அன்புடனும்,

இவ்வாறு ம.நாசர் தெரிவித்துள்ளார்.

Related posts

அருள்நிதி நடிக்கும் டி.மாண்டி காலனி 2ம் பாகம்

Jai Chandran

கோவை ஜிஆர்டி கல்லூரியில் “கோப்ரா” விக்ரம்

Jai Chandran

குமரன் தங்கராஜன் நடிக்கும் ‘குமார சம்பவம்’ பட முன்னோட்டம் வெளியீட்டு விழா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend