Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விசித்திரன் (பட விமர்சனம்)

படம் : விசித்திரன்

நடிப்பு: ஆர்.கே.சுரேஷ், பூர்ணா,• மதுஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பிரியத்ர்ஷினி, ஜார்ஜ், பகவதி பெருமாள், ஜெ.பி

தயாரிப்பு: இயக்குனர் பாலா

இசை: ஜி.வி.பிரகாஷ்குமார்

ஒளிப்பதிவு: வெற்றி மகேந்திரன்

இயக்கம்:எம்.பத்மகுமார்

பி.ஆர்.ஒ: நிகில்

மாயான் (கே.சுரேஷ்) போலீஸ் அதிகாரி யாக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஸ்டெல்லா (பூர்ணா). இவர் களுக்கு டயானா (பிரிய தர்ஷினி) ஒரு மகள் இருக்கி றார். தீடீர் மனஸ்தாபத் தால் மாயனை பிரியும் ஸ்டெல்லா வேறுவொருவரை திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். வேறுவொருவரை திருமணம் செய்து கொண்டாலும் ஸ்டெல்லாவிடம் விரோதம் பாராட்டாமல் பழகுகிறார் மாயன். ஒரு கட்டத்தில் ஸ்டெல்லா, டயானா இருவருமே விபத்தில் மரணம் அடைகின் றனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்ப தாக கருதும் மாயன் அதுபற்றி துப்பு துலக்கு கிறார் அப்போது அவர்களது மரணம் திட்டமிட்ட கொலை என்பதை கண்டுபிடிக்கிறார். இதற்கு பின்னால் உடல் உறுப்புகள் திருடும் கும்பல் இருப்பது தெரியவருகிறது. ஆனால் பூர்ணா கொலை செய்யப்பட்டார என்பதை உறுதிப்படுத்த போதிய ஆதாரம் கிடைக்கவில்லை. இந்தநிலை யில் ஆதாரத்தை உருவக்க தன் உயிரையேயே பணயம் வைக்கிறார் மாயன் இதன் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

அருமையான கிரைம் த்ரில்லர் படமான இதில் மாயன் என்ற பாத்திரத்தில் தன்னை முழுனையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தொடக்கம் முதல் இறுதிவரை அவர் காட்டியிருக்கும் அழுத்தமான நடிப்பு மிகவும் கனமானதாகவும், மவுனம் நிரம்பியதாகவும் இருக்கிறது.

கொலை வழ்கக்குகொன்றில் கொலையாளியை கண்டு பிடிக்க முடியாமால் திணறும் போலீஸ் கொலையாளியை கண்டுபிடிக்கும் பொறுப்பை ஆர்.கே.சுரேஷிடம் ஒப்படைக்க அவர் குற்றவாளியை கண்டுபிடிக்கும் சாதுர்யம் தொடக்க காட்சியிலேயே நிமிர் வைக்கிறது.

பூர்ணா கொல்லப்பட்டதை கண்டுபிடிக்க சுரேஷ் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் புத்திசாலித்தனமாக இருக்கிறது. எந்த வாகனம் இடித்தது என்பதில் தொடங்கி நூல்பிடித்தபடி அடுத்தடுத்த சதியை கண்டுபிடிப்பது ஆர்வத்தை தூண்டுகிறது.

திடீரென்று ஆர்.கே.சுரேஷ் கை நரம்பை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயல்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது அதற்கு கிளைமாக்ஸில் பதில் சொல்வது ஆறுதல்.

உண்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க வாதாடும் சுதா சந்திரனின் வாதங்கள் அனல் தெறிக்கிறது.

இயக்குனர் பாலா படத்தை தயாரித்திருக்கிறார்.

ஆர்.கே.சுரேஷின் முரட்டுத் தனமான தோற்றதுக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் பஞ்சம் வைக்கப்பட்டிருக்கிறது. காட்சிகளின் விறுவிறுப்பை கூட்ட இயக்குனர் பத்மகுமார் தவறியிருக் கிறார். 90 சதவீத காட்சியில் சுரேஷ ஸ்லோ மோஷனிலேயே காட்டுவது பலவீனம்.

மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஜோசப் படமே விசித்திரன் என்ற பெயரில் ரீமேக் ஆகியிருக்கிறது.

பாடல் காட்சியில் கைவண்ணம் காட்டியிருக்கும் இசை அமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பின்னணி இசையில் கோட்டை விட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் வெற்றி மகேந்திரன் காட்சிகளை தேவையான எதார்த்தத்தை உள்ளடக்கி படமாக்கியுள்ளார்.

விசித்திரன்- குற்றத்தை கண்டுபிடிக்க உயிரை பணயம் வைப்பவன்

 

 

Related posts

ZEE5-ல் ஆகஸ்ட் 7 முதல் விஜய் ஆண்டனியின் நூறு சாமி..

Jai Chandran

ஆர்யா வெளியிட்ட ‘பாட்னர்’ பட ஃபர்ஸ்ட் லுக்

Jai Chandran

“அகத்தியா” பட 3 வது சிங்கிள் “செம்மண்ணு தானே” பாடல் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend