படம்: கதிர்
நடிப்பு: வெங்கடேஷ், சந்தோஷ் பிரதாப், ரஜினி சாண்டி, பாவ்யா ட்ரிகா
தயாரிப்பு: தினேஷ் பழனிவேல்
இசை: பிரசாந்த் பிள்ளை
ஒளிப்பதிவு: ஜெயந்த் சேதுமாதவன்
இயக்கம்: தினேஷ் பழனிவேல்
பி.ஆர்.ஒ: சதீஷ் (AIM)
என்ஜினியரிங் படித்திருக்கும் கதிர் (வெங்கடேஷ்) வேலை தேடி சென்னை வருகிறான். தன் நண்பன் வாடகைக்கு தங்கிீருக்கும் அறையில் தங்கி வேலை தேடுகிறான். ஆனால் அவ்வளவு எளிதாக வேலை கிடைத்தபாடில்லை. நண்பனின் வீட்டு ஓனரான பாட்டிக்கு கதிரின் சேட்டைகள் பிடிக்காததால் திட்டி விரட்டுகி றார். ஒரு கட்டத்தில் பாட்டி வீட்டில் மயக்கம்போட்டு விழ அவரை மருத்துவ மனையில் சேர்க்கிறான் கதிர். அதுமுதல் கதிர் மீது பாட்டிக்கு பாசம் ஏற்படுகிறது. கதிருக்கு வேலையும் கிடைக்கிறது. அலுவலகத்தில் சேர செல்லும்போது அங்கு தனது பழைய காதலியை பார்க்கும் கதிர் அந்த வேலைக்கு செல்லாமல் திரும்புகிறார். பாட்டியிடம் தனது காதல் தோல்வியை சொல்லி முடிக்கிறான். அவனுக்கு ஆறுதல் கூறுகிறார் பாட்டி. இந்நிலையில் தனது சொந்த ஊருக்கு செல்ல எண்ணுவதுடன் பாட்டியையும் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் கதிர். ஊரில் எதிர்பாரத விமாக தனது நண்பன் தற்கொலை செய்வதைக்கண்டு அதிர்ச்சி அடையும் கதிர். மீண்டும் சென்னைக்கே செல்ல முடிவு செய்கிறான். அவனுக்கு பாட்டி அறிவுரை கூறுகிறார். அதைக்கேட்டு மனம் மாறும் கதிர் ஊரிலிருந்தபடியே நண்பர்களுடன் இணைந்து தொழில் தொடங்கிறான். அதில் அவன் வெற்றி பெற்றானா என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொகிறது.
இதுகாதல் கதை, கல்லூரி நண்பர்கள் கதை, போராளி கதை என்று குறிப்பிட்டு ஒரு ஏரியாவை மட்டும் சொல்லும் கதை யாக இல்லாமல் எல்லா அம்சங்களையும் கொண்ட இளைஞனின் வாழ்க்கை கதை யாக உருவாகி இருக்கிறது.
சென்னைக்கு வேலை தேடி வரும் வெங்கடேஷ் ஒரு பெண்ணின் காதலில் சிக்கி சின்னபின்னமாகப்போகிறார் என்ற சாயலில் தொடக்கத்தில் கதை போகும்போக்கு எண்ண வைக்கிறது ஆனால் அப்படியில்லாமல் பூவே பூச்சூடவா பாணியில் நதியாவுக்கும், பத்மினி பாட்டிக்கும் நடக்கும் சின்ன சின்ன மோதல்போல் வெங்கடே ஷுக்கும், பாட்டிக்கும் நடக்கும் மோதல்கள் சுவாரஸ் யமாக காட்சிகளை நகர்த்துகிறது.
ஒருகட்டத்தில் இருவரும் மோதலை மறந்து பாசமாக பழக தொடங்கியதும் கதையை கல்லூரி காதலுக்குள் இயக்குனர் திசை மாற்றி செல்வது இளவட்டங்களை நிமிர வைக்கிறது.
புதிதாக கல்லூரியில் சேரும் பாவ்யா ட்ரிகாவிடம் வலியச் சென்று பேசி அவர் மனதில் வெங்கடேஷ் இடம் பிடிப்பதும் ஆனால் தன் நண்பனை ஏமாற்றிய காதலியை நேரில் சந்தித்து அவளிடம் கதிர் வம்பிழுக்க அதைக் காணும் பாவ்யா , வெங்கடேஷ் மீது வைத்திருந்த காதலை உதறியதும் மளமளவென சீட்டு கட்டு சரிவதுபோல் வெங்கடேஷின் காதல் சரிந்துபோவது இந்த கால நீர்க்குமிழி காதலுக்கு தரப்படும் சரியான சவுக்கடி.
மீண்டும் காதலை பிடித்து தொங்கிக் கொண்டிருக்காமல் வெங்கடேஷ் ஊருக்கு சென்று அடுத்த திருப்பத்தை கதையில் இணைப்பதுவேறு களத்துக்கு கவனத்தை இழுக்கிறது.

சிவப்பு கொடி பிடித்துக் கொண்டு கம்யூனிஸம் பேசும் சந்தோஷ் பிரதாப் எதிர்பாராத கதாபாத்திரத்தில் நடித்து போராளியாக மனதில் இடம் பிடிக்கிறார்.
பாட்டியின் அறிவுரையை ஏற்று சொந்த ஊரிலேயே தங்கி இருந்து சொந்தமாக தொழில் செய்ய வெங்கடேஷ் முடிவு செய்வதும் சக நண்பர்களுடன் சேர்ந்து ஆன்லைனில் விவசாய பொருட்களை விற்பனை செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளும் இளசுகளுக்கு தன்னம்பிக்கை தரும்.
படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத் திரங்களும் குறிப்பாக பிரதான பாத்திரத்தில் ரிட்டையர்டு தலைமை ஆசிரியையாக வரும் பாட்டி ரஜினி சாண்டியின் நடிப்பு எதார்த்தத்தில் இழைக்கப்பட்டிருப்பது பலம்.
தினேஷ் பழனிவேல் படத்தை தயாரித்து இயக்கிீருக்கிறார். சொந்த படம் என்பதாலோ என்னவோ எப்படியாவது வெற்றியை தொட வேண்டும் என்ற எண்ணத்தில் மூன்று கதைகளுக்கு ஒரே திரைக்கதை அமைத்துள்ளார். நல்லவேலையாக கதையை குழப்பில்லா மல் நகர்த்தி சென்று ஒ கே சொல்லும்படி நிறைவு செய்திருக்கிறார்.
பிரசாந்த் பிள்ளை இசையும் அதேபோல், ஜெயந்த் சேதுமாதவன் கேமராவும் கைகொடுத்திருக்கிறது.
கதிர்- தெளிவானவன், துணிவானவன்.

