Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

பீஸ்ட் (பட விமர்சனம்)

படம்:பீஸ்ட்

நடிப்பு: விஜய், பூஜா ஹெக்டே செல்வ ராகவன், யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்லி, வி.டி.வி. கணேஷ், பிஜ்ரோன் சுரோ, அபர்ணாதாஸ் , சைனி டாம் சாக்கோ, லில்லிபுட், அங்குர் அஜீத், விகல்,

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: மனோஜ் பரமஹம்சா

இயக்கம்: நெல்சன் திலீப்குமார்

ரிலீஸ்: ரெட் ஜெயன்ட்

பி.ஆர்.ஒ: ரியாஸ் கே அஹமத்

ரா பிரிவில் பணியாற்றும் திறமையான அதிகாரி விஜய் பாகிஸ்தான் தீவிரவாதியை பிடிக்க துப்பக்கியால்  சுடும்போது அதில் ஒரு குழந்தை இறந்துவிடுகிறது. இதனால் மனஉளைச்சல் அடைவதுடன் அந்த பணியிலிருந்து விலகுகிறார். மனபாதிப் புக்காக டாக்டரிடம் சிகிச்சை பெறும் விஜய்யை திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு டாக்டர் அழைத்துச் செல்கிறார். அங்கு பூஜா ஹெக்டே அறிமுகமாகிறார். கொஞ்ச நேரத்திலேயே விஜய்யிடம் காதலை சொல்கிறார். பின்னர் இருவரும் வர்த்தக மால் ஒன்றுக்கு செல்கின்றனர். அந்த மஹாலை பாகிஸ்தான் தீவிரவதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுடன் அங்கிருப்பவர் களை பணய கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு திகார் சிறையிலி ருக்கும் தீவிரவாதி தலைவனை விடுவிக்க கெடு விதிக்கின்றனர். மாலுக்குள் இருக்கும் விஜய் தனி ஆளாக போராடி பணய கைதிகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதற்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

விஜய் ஹீரோ, நெல்சன் திலீப்குமார் இயக்கம் என்ற புதிய காம்பினேஷனில் உருவாகி இருக்கும் படம் எல்லோர் எதிர்பார்ப்புப்படி 50 பர்சன்ட் ஆக்‌ஷன், 50 பர்சன்ட் காமெடி என இரண்டும் கலந்த கலவையாக உருவாகி இருக்கிறது.

ரா அதிகாரியாக விஜய்க்கு ஆக்ஷ்ன் காட்சிகளில் அதிக வேலை. மாலுக்குள் தீவிரவாதிகள் இருப்பதை உள்ளே நுழையும்போதே லேசாக மோப்பம் பிடிக்கும் விஜய் ஒரு குழந்தையின் அழுகுரலை கேட்டு பூனைபோல் நடந்துவந்து தீவிரவாதியை குத்திக் கொன்று குழந்தையை காப்பாற்றுவதும் பின்னர் பணய கைதிகள் மற்றவர் களையும் காப்பாற்ற அதிரடியில் இறங்கியதும் ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது.

பணய கைதிகளை காவல் காக்கும் தீவிரவாதியை நைசாக கழுத்தை அறுத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் பணயகைதிகள் நடுவில் விஜய் உட்கார்ந்துகொள்வதும் அருகிலிருக்கும் யோகிபாபுவை சீண்டி பயமுறுத்துவதும் கலகல.

தீவிரவாதிகளிடம் சரண் அடையும் விஜய் அவர்களிடமிருந்து தப்பிக்க ரெட் பாக்ஸ் என்று சொல்லி புரளி கிளப்பிவிட்டு தீவிரவாதிகளிடம் யோகிபாபுவை சிக்க விடுவதும் அதன் பிறகு நடக்கும் கூத்துக்களும் தொடர் காமெடிகள்.

பூஜா ஹெக்டே விஜய்யுடன் இரண்டு பாடல்களுக்கு செம ஆட்டம் போட்டிருக் கிறார்.

யோகிபாபு, வி .டி .வி கணேஷ், ரெட்டின் கிங்க்ஸ்லி என காமெடி பட்டாளம் சைலான்ட்டாக காமெடி பாம் வெடித்து அரங்கை சிரிப்பலையால் அதிர விடுகின்றனர்.

இயக்குனர் செல்வராகவன் ரா அதிகாரியாக வந்து எதார்த்தமாக வசனம் பேசி நல்ல நடிகர் என்ற பெயர் வாங்கிக்கொள்கிறார்.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

கதையை பொருத்தவரை  பாகிஸ்தான் தீவிரவாதி கதையென்றாலும் விஜய்யின் அதிரடி ஆக்‌ஷனுடன்  தன்னுடைய காமெடி ஸ்பெஷல் மசாலாவையும் மிக்ஸ் செய்து கமர்ஷியல் விருந்து வைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

ஒன்றிரண்டு வசனங்கள் சிலரை குத்துவதுபோல் இருந்தாலும் பஞ்ச் வசனமாக , “நான் ஒரு முறை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேக்கமாட்டேன்” என்ற பழைய பஞ்ச்சை 3 காட்சியில் ரிபீட் செய்திருக்க தேவையில் லை. புதுசா ஒரு பஞ்ச் இருந்திருந்தால் பிளஸ் ஆக இருந்திருக்கும்.

மனோஜ் பரமஹம்சாவின் கேமிரா காட்சிகளை பளிச்செனவும், கலர்புல்லாக பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறது.

அனிருத் இசையில் அரபிக் குத்து, ஜாலிலோ ஜிம்கனா பாடல்கள் ரசிகர்களை குத்தாட்டம் போடவைக்கிறது.

கிளைமாக்ஸ் முடிந்தபின் வரும் ஜாலிலோ ஜிம்கானா பாடல் ரசிகர்களை மேலும் 5 நிமிடம் அரங்கில் கட்டிப்போடு கிறது.

பீஸ்ட்- கான்ட்ராவர்ஸி இல்லாத கமர்ஷியல் காமெடி ஆக்‌ஷன் மசாலா.

 

Related posts

ரசிகர்களுடன் துருவ் விக்ரம் பிறந்த நாள் கொண்டாட்டம்

Jai Chandran

செ. ஹரி உத்ராவின் ’கலைஞர் ஐயா’ பிறந்த நாள் சிறப்பு பாடல்..

Jai Chandran

Sarkar Actress Simran

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend