Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம்

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் நிதித்துறை, பட்ஜெட், வேளாண்  பட்ஜெட் தாக்கல் முடிந்து  அதற்கான விவாதங்களில் பங்கேற்றார்.  அடுத்த சட்டசபை கூட்டம் பற்றி தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு  தள்ளிவைத்தார்.
இதையடுத்து  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (24 மார்ச்). மாலை தனி விமானம் மூலம் சென்னையிலி ருந்து  துபாய் புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில் துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தொழில்துறை வழிகாட்டு குழு தலைவர் பூஜா குல்கர்னி உள்ளிட் டோர் செல்கின்றனர்.
துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைக்கிறார்.  அங்கு வரும் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இன்று இரவு துபாய் சென்றடையும் முதல்வர் ஸ்டாலின்  அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
நாளை காலை 10 மணிக்கு சர்வதேச பொருளாதார  மந்திரிகள், தொழில் நிறுவன அதிபர்கள் மற்றும்  நிர்வாகி களுடன் ஆலோசனை நடத்துகிறார்    அப்போது தமிழகத்தில் தொழில்  தொடங்க அழைப்பு விடுக்கிறார்.
பிற்பகலில் துபாய் சர்வதேச தொழில் கண்காட்சிக்கு சென்று, தமிழ்நாடு அரங்கை திறந்து வைக்கிறார்.
தமிழ்நாடு அரங்கில் தொழில் துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற் பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் உள்ள சிறப்புகள் பற்றி விரிவாக உலக நாட்டு பிரதிநிதிகள் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. அதற்கு ஏற்ப தமிழ்நாட்டின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் காட்சிப் படங்கள் இந்த அரங்கில் தொடர்ச்சியாக திரையிடப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரிபாகங்கள், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல்வேறு துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் உருவகங்களும் இந்த அரங்கில் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
துபாய் பயணம் முடிந்து 28ம் தேதி முதல்வர் வரும்  சென்னை திரும்புகி றார்..

Related posts

அருண் விஜய் வா டீல் தீபாவளி முதல்..

Jai Chandran

YenadiPenne from Actor Jai’s Yenni Thuniga

Jai Chandran

ஆஹா தமிழில் வெளியாகிறது ஐங்கரன்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend