Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கள்ளன் ( பட விமர்சனம்)

படம்: கள்ளன்

நடிப்பு: கரு பழனியப்பன், நிகிதா, மாயா, நமோ நாராயணன், சக்தி சவுந்திரராஜன்

தயாரிப்பு: எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் வி.மதியழகன்

இசை: கே

ஒளிப்பதிவு; எம்.எஸ்.பிரபு, கோபி ஜெகதீஸ்வரன்

இயக்கம்: சந்திரா

பி ஆர் ஓ: சுரேஷ் சந்திரா

காட்டுப்பகுதியில் வேட்டையாடி வாழும் சமூகத்தை சேர்ந்த வேல ராமமூர்த்தி தன் மகனுக்கு அறிவுரைகள் சொல்லி வளர்க்கிறார். துப்பாக்கி செய்வதிலும் திறமையானவர். திடீரென்று அவர் இறந்துவிடவே சிறுவயதாய் இருக்கும் அவரது மகன் கரு பழனியப்பன். வாழ்வதற்கு வழி தெரியாமல் தடுமாறுகிறார். அவரது நண்பர்கள் சிலர் துப்பாக்கி செய்ய தெரிந்த உனக்கு அதிலேயே சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி துப்பாக்கி செய்து திருட்டுத்தனமாக விற்கின்றனர். ஒரு கட்டத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு செல்கின் றார். ஏற்கனவே செய்த கொலை, கொள்ளைக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் தன்னையே நம்பி வந்திருக்கும் பெண்ணை வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிறையிலிருந்து தப்பிக்கிறார். நண்பர்களும் உடன் தப்பிக்கின் றனர். போலீசில் சிக்குவதற்கு முன் பெரிதாக கொள்ளை யடித்து எங்காவது சென்று காதலியுடன் செட்டிலாகி விடலாம் என்று எண்ணுகிறார். அதன்படி கொள்ளையடிக்கின் றனர். அடுத்து நடந்தது என்ன என்பதற்கு படம் பரபரப்பாக பதில் சொல்கிறது.

இயக்குனர் கரு பழனியப்பன் இதில் கதை நாயகனாக நடித்திருக்கிறார். திருட்டு வேலை செய்கிறார் என்பதற் காக அவரை வித்தியாச கெட்டப்பில் காட்டுகிறேன் என்ற தேவை யில்லாத வேலையை இயக்குனர் சந்திரா செய்யாமல் கதை, அதை எப்படி திரில்லாக நகர்த்தலா மென்று மட்டுமே கவனம் செலுத்தியிருப்பது பாராட்டத் தக்கது.

கரு பழனியப்பனின் இயல் பான நடிப்பும், பேச்சும் அந்த கதாபத்திரத்துக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது.

வீட்டில் கொள்ளையடிக்க வரும் கரு பழனியப்பனின் குணத்தை கண்டு தன்னை வாழ்க்கை முழுவதும் அவர்தான் காப்பாற்ற முடியும் என்றுநம்பி அவர் பின்னாலேயே செல்லும் நாயகி நிகிதா சக பெண்ணாக கண்முன் நிற்கிறார்.

குறிப்பாக சிறையிலிருந்து கரு பழனியப்பன் கூட்டாளிகள் தப்பிக்கும் காட்சி அரங்கை அமையதியாக்கும்.

நமோ நாராயணின் திட்டப்படி ஆந்திராவில் சூதாட்ட கிளப்பில் கொள்ளையடிக்க செல்லும் கரு பழனியப்பன் அவரது கூட்டாளிகளும் திட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்று
வதும் போலீஸ் துரத்தியதும் தனித்தனியாக பிரிந்து தப்பிப்பதும் விறுவிறுப்பு. அதன்பிறகு நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் எதிர்பாராத ஷாக்.

நமோ நாராயணின் மனைவி யாக வரும் மாயா சொர்ணாக் காவாக மாறுவதும் அதிரடி திருப்பம். படத்தில் நடித்திருக் கும் மற்ற பாத்திரங்களும் சோடையில்லை

வி.மதியழகன் வெறும் கமர்ஷி யலை மட்டும் நம்பாமல் கருதியல் கொண்ட படத்தை தயாரித்ததற்காக பெருமை பேசலாம்.

பெண் இயக்குனர் சந்திரா வரலாற்று பின்னணியுடன் ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதை ஆக்‌ஷன் திரில்லர் படமாக இயக்கி இருப்பதற்கு அப்ளாஸ் பெறுகிறார்.

இசை அமைப்பாளர் கே அமைத்துள்ள மெலடி மெட்டுக்களும், பழமை கலந்த பின்னணி இசையும் படத்துக்கு பலம்.

ஒளிப்பதிவாளர்கள் எம்.எஸ். பிரபு, கோபி ஜெகதீஷ்வரன் இருவரும் கண்களை கூசச் செய்யாமல் இயற்கை மாறாமல் காட்சிகளை படமாக்கி உருவங்களுக்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

கள்ளன்- வெறும்பொழுதுபோக்கல்ல அதுக்கும் மேலே ஒரு படி..

Related posts

இந்தியாவின் 2 உயர்ந்த வசூல் சாதனைகள் ஷாருக் வசம்

Jai Chandran

வரும் அக்டோபர் 15ம் தேதிமுதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி.. மத்திய அரசு விதிமுறைகள் அறிவிப்பு..

Jai Chandran

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ‘நலம் காக்கும் அணி’ மாபெரும் வெற்றி.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend