Trending Cinemas Now
ஆங்கில செய்திகள் விமர்சனம்

அன்சார்ட்டட் (ஆங்கில பட விமர்சனம்)

படம் : அன்சார்ட்டட்

நடிப்பு: டாம் ஹாலன்ட், மார்க் வால்பெர்க், ஷோபியா அலி

தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

இசை: ராமின் டிஜாவாடி

ஒளிப்பதிவு: சுங் ஹூன் சுங்

இயக்கம்: ருபன் பெலிஸ்சர்

சிறுவயதில் கோடிக் கணக்கான புதையல் பற்றி தெரிந்துகொள்ளும் அண்ணன், தம்பி இருவரில் அண்ணன் மட்டும் புதையலை தேடி செல்கிறான். அவன் கதி என்ன ஆனது என்பது தெரிய வில்லை. இந்நிலையில் தம்பி வளர்ந்து பெரியனாகும் நிலையில் அண்ணனின் நண்பர் புதையல் பற்றி தம்பியிடம் சொல்வதுடன் அதை கண்டுபிடிக்க உதவினால் காணாமல்போன அண்ணனை காட்டுவதாக கூறுகிறார். அதற்கு சம்மதிக்கும் தம்பி அண்ணனின் நண்பருடன் செல்கிறான். புதையலை தேடி மற்றொரு கூட்டமும் அங்கு செல்கிறது . இந்த வேட்டையில் ஜெயித்தது யார் என்பதற்கு அதிரடி ஆக்‌ஷனுடன் படம் பதில் சொல்கிறது.

ஸ்பைடர் மேன் படத்தில் நடித்து புகழ்பெற்ற டாம் ஹாலன்ட் இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். புதையல் தேடி செல்வது என்று ஹாலி வுட்டில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. இதுவும் அந்த வரிசையில் இடம் பெற்ற படமென்றாலும் படத்தில் டாம் ஹாலண்ட் நடிப்பும் கிராபிக்ஸ், வி எஃப் எக்ஸ் காட்சிகள் மிரள வைக்கிறது.

குறிப்பாக ஹெலிகாப்டர் ஒன்று கப்பலை அலெக்காக தூக்கிவருவது அசத்தல்.
அதேபோல் சண்டை காட்சி களிலும் விறுவிறுப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை.

ஒளிப்பதிவாளர் சுங் ஹூன் சுங் தனது கைவண்ணத்தை காட்டியிருக்கிறார்.

ருபன் பெலிஸ்சர் இதனை ஒரு ஆக்‌ஷனட்வென்சர் படமாக இயக்கி இருக்கிறார்.

ஆங்கில படமான இதனை தமிழில் காமெடி கலந்த வசனங்களுடன் டப்பிங் செய்து வெளியிட்டிருக்கின்றனர்.

ஆக்‌ஷன் , அட்வென்சர் பிரியர்களுக்கு நல்ல விருந்து.

Related posts

Shah Rukh Khan innaugrates the 600 cr Club

Jai Chandran

Seenu Ramasamy directorial GV Prakash Kumar starrer Production No.2

Jai Chandran

Action packed trailer of PrabhuDeva’s Theal

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend