Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆப்டர்லைப் (ஆங்கில பட விமர்சனம்)

படம்: கோஸ்ட் பஸ்டர்ஸ் ஆப்டர்லைப்தயாரிப்பு – Sony Picturesஇயக்கம் – Jason Reitman

ஜான்சன் ரைட்  மேனின் (Jason Reitman) நேர்த்தியான இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு வளமிகு கற்பனைக் கதையம்சம் கொண்ட நகைச்சுவை விருந்து.

கோஸ்ட் பஸ்டர்ஸ் (1984), கோஸ்ட்பஸ்டர்ஸ்  2 (1989) (இவை இரண்டையும் ஜான்சன் ரைட்மேனின்  தந்தை இவான் ரைத்மேன்  இயக்கியிருந்தார். மற்றும் கோஸ்ட் பஸ்டர்ஸ் (2016, Paul Feig) ஆகிய மூன்று    கோஸ்ட் பஸ்டர்ஸ்  படங்களைத் தொடர்ந்து, அடுத்த பதிப்பாக உருவாக்கப்பட் டுள்ள படமிது! 1989 – படத்தின் தொடர் சங்கிலியாக, அப்பட நிகழ்வுகளை அடுத்து, 30 வருடங்களுக்குப் பின்னர், இப்பட நிகழ்வுகள் நடந்தேறுவதாக, இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

கோஸ்ட் பஸ்டர்ஸ்  என்போர் அமானுஷ்ய சக்திகள் மற்றும் பேய், ஆவி போன்றவை உலவும் இடங்களில், அவற்றை விரட்டி அடிக்கும் வேலையில் ஈடுபடுவோரைக் குறிக்கும்!

Callie Spengler (Carrie Coon) மற்றும் மகள் Phoebe Spengler (McKenna Grace), மகன் Trevor Spengler (Finn Wolfhard) ஆகிய மூவரும் Oklahoma வில் உள்ள ஒரு சிறிய ஊரில் குடியேறுகிறார்கள். கோஸ்ட் பஸ்டர்ஸ் மற்றும் அவ்விருவரின் தாத்தாவான (Late Harold Ramis) ஆகியோரிடையே இருந்த தொடர்பு பற்றி அறிய வருகிறார்கள். அதைத் தொடர்ந்து, அதன் தொடர்பான, சுவையான நிகழ்வுகளே படத்தின் சாரம்.

Eric Steelberg –  ஒளிப்பதிவு செய்துள்ளார்.
Ron Simonsen –  இசை அமைத்துள்ளார்.

இப்படத்தை ony Pictures வெளியிட்டுள்ளது.

Related posts

தீனி (பட விமர்சனம்)

Jai Chandran

மாணவர்களுக்கு நடிகர் விஷால் டிரஸ்ட் ரூ 5 லட்சம் உதவி

Jai Chandran

தமிழ் உட்பட 3 மொழியில் வெளியான திரில்லர் ’வி’

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend