Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அவார்டுகளை அள்ளிக்குவிக்கும் யோகிபாபு

யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் மிக பிரபல விருதான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. ஆம் யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் மீன் குழம்பு.

இத்திரைப்படத்தை சமீபத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் இயக்குகிறார்.

இத்திரைப்படத்தின் திரைக்கதை சிறந்த பிளாக் காமெடி திரைக்கதை என்ற விருதை பிர்சமுண்டா இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் வென்றுள்ளது.

யோகிபாபு தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இனி யோகிபாபுவை அவார்ட் பாபு என்று அழைத்தாலும் ஆச்சரியப்பவதிற்கில்லை.

Related posts

Kamal Haasan wishes Sembi team

Jai Chandran

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவா படம்

Jai Chandran

விஜய்- ஜோதிகா நடித்த குஷி ரீ ரிலீஸ் – எஸ் ஜே சூர்யா பேட்டி..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend