Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டாக்டர் ( பட விமர்சனம்)

படம்: டாக்டர்

நடிப்பு: சிவகார்த்திகேயன், வினய், பிரியங்கா அருள் மோகன், யோகிபாபு, இளவரசு, மிலிந்த் சோமன், தீபா, அர்ச்சனா, ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், ஜாரா வாஹித்,

தயாரிப்பு: சிவகார்த்திகேயன், கோட்டப்பாடி ஜே.ராஜேஷ்,

இசை : அனிருத்

ஒளிப்பதிவு: விஜய்
கார்த்திக் கண்ணன்

இயக்கம்: நெல்சன்

பெண் பார்க்கச் சென்ற இடத்தில் அமைதியாக இருக்கும் சிவகார்த்தி கேயனை பிடிக்கவில்லை என்று சொல்லி  திருமணம் செய்ய மறுக்கிறார் பிரியங்கா. ஆனால் அதற்கு எந்த சலனமும் இல்லாமல் ஒப்புக்கொள்கிறார் சிவகார்த்தி. அந்த நேரம்பார்த்து பிரியங்கா அண்ணி அர்ச்சனா மகளை காணவில்லை யாரோ கடத்தி விட்டார்கள் என்று தெரிய வருகிறது. காணாமல் போன மகளை கண்டுபிடிக்க அந்த குடும்பத்துக்கு உதவுகிறார் சிவகார்த்திகேயன். குடும்பமே சேர்ந்து காணாமல் போன தங்கள் வீட்டு பெண்ணை தேடுகிறது. அவர்களால் அந்த பெண்ணை கண்டுபிடித்து மீட்க முடிந்ததா என்பதே. கிளைமாக்ஸ்.

கதை என்னமோ பலமுறை வந்த பெண்கள் கடத்தல் கதைதான் ஆனால் அதை குடும்ப செண்டி மெண்ட், காமெடி, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கலவைவையாக சொல்லியிருக்கும் விதம்தான் ரசிக்க வைக்கிறது .
தனக்கு கால்வலி என்று மெசேஜ் அனுப்பியதற்கு மாத்திரை சாப்பிடச் சொல்லி பதில் அனுப்பியதாக காரணம் சொல்லி சிவகார்த்தி கேயனை திருமணம் செய்ய பிரியங்கா மறுப்பதில் தொடங்கும் காமெடி கடைசிவரை எல்லா கதாபாத்திரங்களாலும் கொண்டு செல்லப்படுவது தொடர் சரவெடியாக நீட்டித்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.
வழக்கமாக ஒரு கேள்வி கேட்டால் பத்து கவுன்டர் தரும் சிவகார்த்தி கேயன் இதில் பத்து கேள்வி கேட்டால் ஒரு பதில் சொல்லும் அளவுக்கு ரொம்பவே இறுக்கமாக நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரத்தை கடைசி வரை தக்க வைத்தும் இருக்கிறார்.

கடத்தப்பட்ட சிறுமியை கண்டு பிடிக்க அவரது குடும்பத்தையே அழைத்துக்கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கியதும் கதை சூடுபிடிக்கிறது. அந்தக் கூட்டணி யுடன் யோகிபாபு, ரெட்டின் சேர்ந்ததும் ஆட்டம் கலைகட்டு கிறது.

சிவகார்த்திகேயனின் வாயையும், கை கட்டிப்போட்டுவிட்டு யோகி பாபுவுவையும், ரெட்டினையும் இஷ்டத்துக்கு காமெடி செய்ய வைத்திருக்கிறார்கள். அவர்களும் வரைமுறையில்லாமல் பேசி வயிற்றை பதம் பார்க்கின்றனர்.
கிளி பாத்திரத்தில் வரும் காமெடியனும், அவரது பாஸ் ஆக வருபரும் கூடுதல் காமெடி செய்கின்றனர்.
சாக்லெட் பாய் என்று சொல்லப் பட்டுவந்த வினய் இதில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.
ஜென்டிலான வில்லனாக நடித்து தனது சாக்லேட் பாய் இமேஜுக்கு பை பை  சொல்லி இருக்கிறார். இனி அடிக்கடி அவரை படங்களில் பார்க்கலாம் மறுபடியும் சாக்லேட் பாய் ரோலுக்கு செல்லாமல் இருந்தால் தப்பிக்கலாம்.
ஹீரோயின் பிரியங்கா அருள் மோகன் அளவுடன் நடித்து மனதில் இடம் பிடிக்கிறார்.
கடைசியாக வரும் செல்லம்மா செல்லம்மா பாடல் கண்களுக்கும் குளுமை, காதுகளுக்கும இனிமை. ஒரே பாட்டில் தனது இருப்பை தக்க வைக்கிரார் இசை அமைப்பாளர் அனிருத்.

டென்ஷன் இல்லாமல் ஜாலியாக கமர்ஷியல் ஹிட் படம் தரும் வித்தையை நெல்சன் நன்றாகவே கற்று வைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும் தெளிவான குளுமையான ஒளிப்பதிவில் குளிர வைக்கிறார்.

டாக்டர் – காமெடி, ஆக்ஷன்  ஜாலி.

 

Related posts

Jenma Natchathiram receives positive reaction before Release

Jai Chandran

DEVIFOUNDATIONS International Elders Day..

Jai Chandran

அனிமல் படத்தின் புதிய போஸ்டரில் பாபி தியோல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend