Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டி: கமல் அறிவிப்பு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

உயிரே உறவே தமிழே,

வணக்கம்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டியிடுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது முதல் உள்ளாட்சித் தேர்தல் இது. புதிய உத்வேகத்துடனும் ஆற்றலுடனும் இந்தத் தேர்தலை எதிர்கொள்வோம். களத்தில் நிற்கும் உங்கள் கரங்களுக்கு வலுச்சேர்க்க நானும் உங்கள் பகுதிக்கு வருகை தரவிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாகப் போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த மாவட்டத் தலைமை அலுவலகம் மற்றும் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நேரடியாக விருப்ப மனுப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம். உடனடியாக விண்ணப்பிக்கும் பொருட்டு ஆன்லைன் வசதியும்( https://maiam.com/application-form.php )   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மாவட்ட, மாநில தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளைத் தொடர்புகொள்ளலாம்.

களத்தில் சந்திப்போம். வெற்றி நமதே!

இவ்வாறு மக்கள் நீதி மய்யம். தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Related posts

டியர் ரதி (பட விமர்சனம்)

Jai Chandran

சீதை போல் நானும் தீ குளிக்கிறேன் – அமீர் பேச்சு

Jai Chandran

சர்வதேச படைப்பாளிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend