Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

4 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ருத்ர தாண்டவம்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக் கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்”

மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார்.
சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தி ருக்கின்றனர்.
திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலகம் முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார்.
இசை ஜூபின், ஒளிப்பதிவு பரூக், எடிட்டிங் தேவராஜ்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி அனைவரது பாராட்டை பெற்று 4 மில்லியன் பார்வையாளர்களை கடந்து தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமா வரலாற்றில் யாரு சொல்லாத ஒரு முக்கியமான சமூக பிரச்சினையை இதில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் மோகன் G.
படம் வெளியான பிறகு மதம் மாற்றம் பற்றிய விவாதங்களையும், தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
படம் மிக விரைவில் திரையரங் குகளில் வெளியாக இருக்கிறது.

Related posts

தயாரிப்பாளர் விஜயமுரளி- சத்யா இல்ல திருமணத்தில் நட்சத்திரங்கள்

Jai Chandran

நவம்பர் 1-ல் கவிஞர் வாலி பிறந்தநாள் விழா

Jai Chandran

ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் குழு சந்திப்பு..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend