Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திட்டம் இரண்டு சோனி லிவ்வில் ஜூலை 30

பல திருப்பங்கள் மற்றும் சுவாரசியங்கள் நிறைந்த திட்டம் இரண்டு சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று வெளியாகிறது.

“நாம் விடை காண முயலும் மர்மங்கள் பல உள்ளன” – ரே பிராட்பர்ன்.

காவல் ஆய்வாளர் ஆதிரா சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, மாநகரத்தில் தனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் குழந்தைப் பருவ நண்பனுக்கான அவரது தேடல், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய மர்ம புதிராக மாறுகிறது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த், சுபாஷ் செல்வம், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்த திட்டம் இரண்டு படம் *சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

சென்னைக்கு பணி மாற்றம், பேருந்து பயணத்தில் சக பயணியின் மீது காதல் என ஆதிராவின் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது.
ஆனால், குழந்தைப் பருவ நண்பன் சூரியா காணாமல் போனதாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது. சூர்யாவின் கார் விபத்தை விசாரிக்கும் ஆதிரா, இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக உணர்கிறார்.

இந்த வழக்கை ஆதிரா எப்படி கையாள்கிறார், இதில் அவர் வெற்றிபெற்றாரா என்பதே மீதி கதை.

*ஆஷிஷ் கோல்வால்கர், தலைவர், உள்ளடக்கம், சோனி என்டெர்டெயின்மென்ட் டெல்விஷன் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம்:*

திட்டம் இரண்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களை சோனி லிவ் மேலும் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்த படத்தில் உள்ள விறுவிறுப்பு, மர்மம் மற்றும் திருப்பங்கள் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடும். திட்டம் இரண்டு சோனி லிவ்வில் வெளியாவதில் பெருமை கொள்கிறோம்.

*விக்னேஷ் கார்த்திக், இயக்குநர்:*

சமூகத்தில் உள்ள சில நிகழ்வுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்த படம் காட்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். சோனி லிவ்வில் திட்டம் இரண்டு வெளியவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

*ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகி, திட்டம் இரண்டு:*

திட்டம் இரண்டு படத்தில் எனது கதாபாத்திரம் பல அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கதையின் சாராம்சம் என்னை வெகுவாக கவர்ந்தது. நண்பனின் மறைவில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்வார் என்பதை இந்தப் படம் கூறும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

படத்தில் உள்ள திருப்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும். சோனி லிவ் ஓடிடியில் இதுவே எனது முதல் படம். திட்டம் இரண்டின் வெளியீட்டுக்காக நான் ஆவலாக உள்ளேன்.

***

Related posts

தீர்க்கதரிசி: ஸ்கிரிப்ட்தான் ஹீரோ: சத்யராஜ் பேச்சு

Jai Chandran

நடிகர்- மிஸ்டர் இந்தியா கோபிநாத் ரவி காதல் திருமணம்!

Jai Chandran

“பேப்பர் ராக்கெட்” வெற்றி பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend