Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்று சுமார் 30 நாட்கள் முடிந்த நிலையில் அவர் முதல்வர் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக ( ஜூன் 17ம் தேதி) டெல்லி சென்றார்.
அங்கு சென்றதும் டெல்லி ஓடிஐஎஸ் பகுதியில் கட்டப் பட்டு வரும் திமுக அறிவாலய கட்டிடப் பகுதியை பார்வை யிட்டார். பிறகு முதல்வர்கள் தங்கும் தமிழக இல்லத்திற்கு ஸ்டாலின் சென்றபோது அவரை தமிழ்நாடு தலைமைச் செயலர் இறையன்பு மற்றும் தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர். அதேபோல் தி.மு.க எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் மற்றும் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் மற்றும் பின்னர் திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர்.
பிறகு கார்டு ஆஃப் ஹானர் டெல்லி பட்டாலியன் போலீ சார் அரசு மரியாதையை மு.க.ஸ்டாலின் ஏற்று கொண் டார். மாலை 4.45 மணிக்குப் பிரதமர் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின் அங்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழக மக்களின் நலன் சார்ந்த சுமார் 30 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
முதல்வருடன் அமைச்சர் துரை முருகன், மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் சென்றனர்.
தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத் தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு, தடுப்பூசி, கருப்பு பூஞ்சை மருந்து, கொரோனா பேரிடர் நிதி, நிலுவை ஜி.எஸ்.டி மாநில அரசுக்கு வழங்க வேண்டும், சேது சமுத்திர திட்டம் நிறைவேற்ற வேண்டும், புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், புதிய மின்திட்டத் தை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை பிரத மரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். அதை நிறைவேற்றுவதாக பிரதமர் தெரிவித்தார்,
பிரதமர் சந்திப்பு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் பேட்டி அளித்தார். அப்போது பிரதமருடனான சந்திப்பு நிறைவாக இருந்தது தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் ஜிஎஸ் டி நிலுவை தொகையை உடனே தரவேண்டும் . தமிழகத்தில் உள்ள மருந்து தொழிற் சாலையில் கொரோனா த்டுப்பு மருந்து தயாரிக்க அனுமதிக்க வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் பிரதமரிடம் வைக்கப்பட்டது’ என்றார்.

Related posts

Actress Parvati takes her first shot Vaccine

Jai Chandran

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் (பட விமர்சனம்)

Jai Chandran

Thalapathy65 shooting has started in Georgia!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend